'கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் உதவணும்'

Added : செப் 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement

புனே, ''கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, அதில் படித்த முன்னாள் மாணவர்கள் உதவி செய்ய வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புனே நகரில், பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:உலகம் முழுவதும், பல பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் எப்படி நடத்தப்படுகின்றன... முன்னாள் மாணவர்கள் அளிக்கும் நிதியுதவியில்தான், கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.இந்த கல்வி நிறுவனங்ளில் படித்த பல மாணவர்கள், பெரிய பதவிகளில் இருப்பர். அவர்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் தொடர்பு கொண்டு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்ய கோர வேண்டும். தாங்கள் படித்த கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வது, மாணவர்களின் கடமை.மாறாக, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, அரசிடம் பாத்திரத்தை ஏந்தக் கூடாது. படிக்கும் போதே, மாணவர்கள் மனதில், கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும், என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.மாணவர்களின் புத்தக சுமையை, ௫௦ சதவீதம் குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பிரகாஷ் ஜாவடேகர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
16-செப்-201816:36:13 IST Report Abuse
kalyanasundaram ESPECIALLY SUCH ACTIVITIES MAY NOT BE POSSIBLE IN TAMIL NADU SINCE INCOME FOR POLITICIANS, VICE CHANCELLORS ETC ETC WILL BE LOST. MORE OVER RESERVATION POLICIES ARE STILL IN ENFORCEMENT. INTELLIGENT PEOPLE WILL BE SIDE LINED .
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-செப்-201805:09:15 IST Report Abuse
Mani . V "கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, அதில் படித்த முன்னாள் மாணவர்கள் உதவி செய்ய வேண்டும். நாங்கள் ஆயிரம், லட்சம் கோடிகளில் கடன் வாங்கியவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல உதவுவோம்".
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
16-செப்-201809:36:23 IST Report Abuse
 Muruga Velடல்லாஸ் யூனிவர்சிட்டியில் படித்த நவீன் ஜிந்தால் மேனேஜ்மேண்ட் மேற்படிப்புக்கு பலகோடி செலவில் கட்டிடங்களும் மற்ற வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறார் ...மேலை நாடுகளில் இது சகஜம் …...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X