விழுப்புரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா

Added : செப் 16, 2018 | கருத்துகள் (8)
விழுப்புரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா

விழுப்புரம், தி.மு.க., சார்பில் முரசொலி அறக்கட்டளை பரிசு வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா விழுப்புரத்தில் நடந்தது.பொதுச் செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பொன்முடி வரவேற்றார். பொருளாளர் துரைமுருகன், துணை பொது செயலர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி, கனிமொழி பேசினர்.'பெரியார் விருது' தேவதாசனுக்கும், 'அண்ணா விருது' பொன் ராமகிருஷ்ணனுக்கும், 'கலைஞர் விருது' குத்தாலம் கல்யாணத்திற்கும், 'பாவேந்தர் விருது' இந்திரகுமாரிக்கும், 'பேராசிரியர் விருது' கவிகொண்டல் செங்குட்டுவனுக்கும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழங்கினார். பொதுமக்களுக்கான திட்டங்களை அறிவித்து ஸ்டாலின் கூறியதாவது:கருணாநிதி அறக்கட்டளை துவங்கி, அதன்மூலம், மருத்துவ உதவிகளோடு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்குதல், மாநில, மாவட்டம் வாரியாக பணி நாடுவோரை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி தர, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயிலரங்கம் அமைக்கப்படும்.பத்திரிகையாளர், நாடகம் உள்பட பல துறைகளில் சாதனைபடைத்த, இரு பாலருக்கும் இளம் சாதனையாளர் விருதும், திராவிட இயக்கத்திற்கு பாடுபட்டோருக்கு திராவிட படைப்பாளி விருதும், கட்சியில் சிறப்பாக செயல்படும் ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, தேர்வுநிலை, ஊராட்சி செயலர்களுக்கு விருதும் வழங்கி கவுரவிக்கப்படும்.இவ்வாறு அறிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X