ராசிபுரம்: ராசிபுரத்தில், இன்று நடக்கவுள்ள, அ.ம.மு.க., பொதுக் கூட்டத்தால், அ.தி.மு.க., வினர் கலக்கமடைந்துள்ளனர்.
அண்ணாதுரையின், 110வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க., சார்பில் ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகேயும், அ.ம.மு.க., சார்பில், நகராட்சி அலுவலகம் அருகேயும் கொண்டாடப்பட்டது. அ.ம.மு.க., நிகழ்ச்சிக்கு அதிக கூட்டம் இருந்தது. இன்று, அ.ம. மு.க., சார்பில், ஆத்தூர் பிரதான சாலையில், பி.டி.ஓ., அலுவலகம் அருகே நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகிறார். இக்கூட்டத்திற்கு, தங்கள் கட்சியினர் அதிகம் பேர் செல்வர் என அ.தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே தான், புது பஸ் ஸ்டாண்ட் அருகே கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு, காலை, 11:00 மணிவரை கட்சி கொடியோ, கட் அவுட்டுகளோ வைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அ.ம.மு.க.,வினர் புகார் கூறியுள்ளனர். மேலும், ராசிபுரத்தில், அ.தி.மு.க., பலவீனமாகி வருவதை மறைக்கவே, இதுபோன்ற கெடுபிடிகளை, அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளும் கட்சியினர் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அ.ம.மு.க.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.