'எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்ற அறிக்கை அனுப்பி வைப்பு'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்ற அறிக்கை அனுப்பி வைப்பு'

Added : செப் 16, 2018
Advertisement

சேலம்: ''சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரத்தை மாற்றியமைப்பது குறித்த அறிக்கையை, ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளோம்,'' என, ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.
சேலம் ரயில்வே கோட்ட ஸ்டேஷன்களில், தூய்மையே சேவை பிரசார தொடக்க விழா, சேலம், ஜங்ஷனில், நேற்று நடந்தது. கோட்ட மேலாளர் சுப்பாராவ், தூய்மையை வலியுறுத்தும் பேரணியை தொடங்கிவைத்து, பயணிகளிடம், அதுகுறித்த துண்டு பிரசுரத்தை வழங்கினார். தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த, 30 துப்புரவாளர்களுக்கு பரிசு வழங்கினார்.

பின், நிருபர்களிடம் சுப்பாராவ் கூறியதாவது: சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்பட, அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களில், 15 நாட்களுக்கு, தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதே இதன் நோக்கம். சேலம் - மேட்டூர் இடையே அமைக்கப்பட்டு வரும், இரட்டை ரயில் பாதை பணி, மார்ச்சுக்குள் முடிக்கப்படும். பின், மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு, தேவையான நிலக்கரியை எளிதாக எடுத்துச்செல்லலாம். இதற்காக, 15 ஆண்டுகளுக்கு முன், மத்திய அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்தது. சேலம் ஜங்ஷனில், இரண்டாவது நுழைவாயில் பகுதியில், சுரங்கப்பாதை, அலுவலக கட்டடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு, கார் நிறுத்தம் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், பயணிகளின் கோரிக்கைக்கேற்ப, சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரத்தை மாற்றியமைப்பது குறித்த அறிக்கையை, ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X