கோலிவுட்...ஹாலிவுட்..ஜாலிவுட் : காமெடியில் கலக்கும் தனசேகர்

Added : செப் 16, 2018
Share
Advertisement
கோலிவுட்...ஹாலிவுட்..ஜாலிவுட் : காமெடியில் கலக்கும் தனசேகர்

சினிமாவுக்குள் நுழையும் மந்திர சாவி சின்னத்திரை. பெரிய திரையில் ஆதிக்கம் செலுத்தும் பல நிஜங்கள் நிழலாக வலம் வந்தது இந்த திரையில் தான். நகைச்சுவை எழுத்தாளர், காமெடி நடிகர் என பல்துறை வித்தகராக வலம் வரும் தனசேகர், சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்...
* உங்களை பற்றி...சொந்த ஊர் சென்னை. படித்தது மெக்கானிகல் இன்ஜினியரிங். நடிப்பு ஆசை வந்ததுக்கு எங்க ஏரியாவும் ஒரு காரணம். வீட்டின் எதிர்புறம் ராதாரவியும், பின்புறம் கமல் வீடும் இருக்குது. என்னை சுற்றி நடிகர்களாக இருந்ததால் என்னவோ எனக்கும் இத்துறை மீது ஈர்ப்பு வந்துவிட்டது.

* காமெடியில் மக்களின் எதிர்பார்ப்பை எப்படி நிவர்த்தி செய்கிறீர்கள் ?மக்கள் வாழ்க்கையில் காமெடி நிறைந்திருக்கிறது. ஸ்மார்ட் போன் தான் மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. இதில் பேசி, பேசி அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்து 'செல்போன் மறுவாழ்வு மையம்' என்ற தலைப்பில் காமெடி செய்தோம். அது பெரிதாக 'ரீச்' ஆனது.

* நீங்கள் உருவாக்கிய ஹாலிவுட் ஸ்கிரிப்ட் குறித்து..காமெடியில் மிமிக்கிரி ஒரு வகை, பிரபல நடிகர்கள் போல பேசுவது, சவுண்ட் எபெக்ட் ஒரு வகை, இதை எல்லாம் தாண்டி புதுசா பண்ணனும்னு யோசிக்கும் போது தான் 'ஜூராசிக் பார்க்' படம் பார்த்துவிட்டு நம்ம ஸ்டைலில் 'டப்' பண்ணாலாம்னு யோசிச்சு பண்ணினேன். இதுவரைக்கும் 17 ஆங்கில படங்களை காமெடியாக 'டப்' பண்ணியிருக்கிறேன்.
* பஞ்ச், டைமிங் காமெடி....அடுக்கு மொழி, டைமிங் காமெடி கதையோடு சேர்ந்து வந்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். 'டைட்டானிக்'கை 'டப்' செய்யும் போது ஒரு காட்சியில் பனி மலை வரும்போது 'கேப்டன் பனி! அப்போ டக்குனு குனி' என்று, டயலாக் வைத்தது பொருத்தமாக இருந்தது.
* சிவகார்த்திகேயனுடன் பயணித்த அனுபவம்...காமெடி ஷோவில் இறுதி போட்டியில் அவருடன் பங்கேற்றேன். எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பார். இதை மாற்றி எப்படி பண்ணாலாம் என்ற தேடல் அவருக்கு இருக்கும்.

* சிம்பு பாராட்டியதை பற்றி...'சக்தி நாடக சபா', 'ரகுவரன்' கான்செப்ட்டை பார்த்த சிம்பு வீட்டிற்கு கூப்பிட்டு பாராட்டினார். சந்தானத்திடம் போன் செய்து ' தனாவுக்கு காமெடி நல்லா வருது யூஸ் பண்ணிக்கோங்க'னு சொன்னார். சந்தானமும் பாராட்டினார்.
* புதிதாக காமெடி எழுத்தாளராக, நடிகராக வர நினைப்பவர்களுக்கு...புதிதாக வருபவர்கள் இரண்டு பிரிவு. முதலாவது உண்மையாகவே முயற்சி செய்பவர்கள், மற்றொன்று டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு ஒரே நாளில் பெரிதாக 'ரீச்' ஆகணும் என்று நினைப்பவர்கள். சின்ன வயதிலிருந்தே இந்த துறைக்கு வரணும்னு ஆசைபட்டிருக்கிறேன்னு சொல்வார்கள், டிராமா அனுபவம், ஸ்கிரிப்ட் எழுதிய அனுபவம் இருப்பதாக கேட்டால் எதுவும் இல்லை என்பார்கள். இது சிறு வயதிலிருந்தே நம் கூடவே கூட வர வேண்டும்.

* உங்கள் வெற்றிக்கு பின்னால்...ஒவ்வொரு நபரின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பாங்கன்ணு சொல்வாங்க. ஆனால், என் வெற்றிக்கு பின் நண்பர் நாகராஜ் இருக்கிறார். பேச்சு வழக்கில் இருந்த என் திறமைகளை ஸ்கிரிப்டாக எழுதி வைத்து வெற்றி பெற வைத்தவர். அவர் இல்லையென்றால் இந்த இடம் எனக்கு சாத்தியமில்லை.

* நடித்த, நடிக்கும் படங்கள்...சமீபத்தில் வெளியான 'அண்ணனுக்கு ஜெ', ராம்பாலா இயக்கத்தில் 'தில்லுக்கு துட்டு 2'ல் நடித்திருக்கிறேன். dhanasekarteju@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X