குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாகியுள்ள நடிகை வெண்பா மனம் திறந்த நிமிடங்கள் இதோ...
* குடும்பம் பற்றி?பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். சட்டப்படிப்பு படிக்கிறேன். அப்பா தொழிலதிபர். அம்மா தான் எனக்கு எல்லாம். தங்கை பிளஸ் 2 படித்து வருகிறாள்.
* தமிழ் பெயரின் ரகசியம்?எனது இயற்பெயர் கீர்த்தி, சினிமாவிற்காக வைக்கப்பட்ட பெயர் தான் வெண்பா.
* சினிமாவில் எப்படி?அப்பாவின் நண்பர் மூலமாக 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அதைதொடர்ந்து சிவகாசி, கருப்பசாமி குத்தகைதாரர், கற்றது தமிழ், சத்யம் என வரிசையாக வாய்ப்புகள் வந்தன. 3வது படிக்கும் போது முதல் படத்தில் பயம் இல்லாமல் நடித்தேன். ஆனால் ஹீரோயின் ஆன 'காதல் கசக்குதய்யா' படத்தின் சூட்டிங் முதல் நாள் ரொம்ப பயந்து விட்டேன்.
* இதுவரை நடித்தது ?குழந்தை நட்சத்திரமாக பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஹீரோயினாக 'காதல் கசக்குதய்யா', 'பள்ளி பருவத்திலே' வெளிவந்துள்ளன. தற்போது 'பட்டம் பற பற' படத்தில் நடிக்கிறேன்.
* ஹீரோயின்கள் பாதுகாப்பு குறித்து?எந்த துறையிலும் இல்லாத ஒரு பாதுகாப்பு சினிமாவில் உள்ளது. அது அம்மா தான். எல்லா நாயகிகளுடன் அம்மா தான் சூட்டிங் வருவர். அம்மாக்களை மீறி இங்கு எதுவும் நடக்காது.
* சினித்துறைக்கு வரும் பெண்களுக்கு டிப்ஸ்?யாரையும் நம்பக் கூடாது. வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல, கிடைக்கிற வாய்ப்பையும் விட்டுவிடக்கூடாது, தோல்விகள் வந்தால் துவண்டுபோகக் கூடாது. திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நமக்கான இடம் தானாக வரும்.
* கிளாமர் முக்கியமா?கீர்த்தி சுரேஷ் ஹோம்லி கேரக்டர் மட்டும் தான் பண்றாங்க. சமந்தா ஹோம்லியாவும், கிளாமராவும் பண்றாங்க. இருவருமே முன்னணி நடிகைகளாக தான் இருக்கின்றனர். ஹீரோயின்கள் கையில் தான் உள்ளது. சிலருக்கு தான் கிளாமர் செட் ஆகும். கிளாமர் இங்கு கட்டாயமும் கிடையாது.
* எதிர் கால லட்சியம்?மக்கள் மனதில் 'வெண்பா' என்றால் எல்லாருக்கும் தனியாக தெரிய வேண்டும். என்னோட கனவு லட்சியம் எல்லாமே அதுதான்.
* அரசியலில் ரஜினி, கமல்?கமலுக்கு தான் என் ஆதரவு. அவர் அரசியலுக்கு வந்து விட்டார். ரஜினி வருவேன் என்று தான் சொல்லியிருக்கார், வந்தால் அப்போது பார்த்துகொள்ளலாம்.இவரை வாழ்த்த venbaofficial@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE