நாங்க சினிமா பார்க்கும் குடும்பம் : கயல் சந்திரன் கல...கல...

Added : செப் 16, 2018 | |
Advertisement
'மிஸ்டர் சந்திரமவுலி... மிஸ்டர் சந்திரமவுலி...'னு மெளன ராகம் படத்தில் கார்த்திக் கூப்பிடுவாரே, அந்த பேரு எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அந்த பேரையே எனக்கு சூட்டிட்டார். ஏன்னா... எங்க குடும்பமே சினிமா பைத்தியம்'' என பெயருக்கு ஏற்ப நிலா போன்று பிரகாசமாக சிரிக்கிறார் 30 வயதான சந்திரன்.மவுலியை 'கட்' பண்ணி சந்திரன் என பிரபுசாலமனால் பெயர் சூட்டப்பட்டு கயல்
நாங்க சினிமா பார்க்கும் குடும்பம் : கயல் சந்திரன் கல...கல...

'மிஸ்டர் சந்திரமவுலி... மிஸ்டர் சந்திரமவுலி...'னு மெளன ராகம் படத்தில் கார்த்திக் கூப்பிடுவாரே, அந்த பேரு எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அந்த பேரையே எனக்கு சூட்டிட்டார். ஏன்னா... எங்க குடும்பமே சினிமா பைத்தியம்'' என பெயருக்கு ஏற்ப நிலா போன்று பிரகாசமாக சிரிக்கிறார் 30 வயதான சந்திரன்.

மவுலியை 'கட்' பண்ணி சந்திரன் என பிரபுசாலமனால் பெயர் சூட்டப்பட்டு கயல் படத்தில் அறிமுகமான இவர், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் படங்களை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்ததாலேயே சினிமாவில் நுழைந்தார் என்றால் நம்புவீர்களா...

''நம்பிதான் ஆக வேண்டும். அப்பா வங்கி அதிகாரி. அம்மா ஹவுஸ் ஒய்ப். நான் குழந்தையாக இருக்கும்போதே எல்லா படங்களையும் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பாங்க. இதனாலேயே எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. நான் பிறந்தது சென்னை சாலிகிராமம். சுத்தி சினிமா தியேட்டர்கள் இருந்ததால் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லையே'' என்றவரிடம்
* ஹீரோவான பிளாஷ்பேக் பற்றி?எட்டாண்டுகளுக்கு முன் அப்பதான் குறும்படம் எடுப்பது 'டிரண்ட்' ஆனது. நண்பர்கள் பலர் படம் எடுத்தார்கள். அவர்கள் மூலம் பிரபுசாலமன் அறிமுகம் கிடைத்தது. கயல் படத்தில் ஹீரோவாக அறிமுகமானேன். கயல் படத்திற்கு பிறகு நல்ல கதைகளை தேடினேன். தேர்வு செய்து நடித்தேன். ஏழெட்டு வருஷம் கழித்து கிடைக்கும் வாய்ப்பை தவறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதேசமயம் ஏனோ தானோ என்று படம் நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

* இப்ப நடிச்சிட்டு இருக்கிற படங்கள்?'ரூபாய்', 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படங்கள் அடுத்தடுத்து வந்தது. வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' ஷூட்டிங் பிஜி தீவில் 60 நாட்கள் நடந்து முடிஞ்சிருச்சு. 'நான் செய்த குறும்பு', 'டாவு' படங்கள் ஷூட்டிங் போயிட்டு இருக்கு. இந்த படங்கள் வரும்போது 'கயல்' என்ற அடைமொழி மறையும்.

* காமெடி படங்களில் கவனம் செலுத்துகிறீர்களாமே?ஆமாம். தமிழ் சினிமாவில் விளையாட்டு, பேய் படம் போர் அடிக்காது. அதுபோல்தான் காமெடி படங்களும். மக்கள் மனதில் நான் இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் காமெடி கலந்த திரில்லர், சென்டிமென்ட்டாக அடுத்தடுத்து நடிக்க உள்ளேன்.

* உங்க அட்வைஸ்?நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லீங்க. சினிமாவில் நுழைய முயற்சிப்பவர்களுக்கு நான் சொல்வது இதுதான்... ஒரே இரவில் எதுவும் நடக்காது. முயற்சியும், தேடலும் இருந்தால் நாமாக தனித்து சினிமாவில் ஜெயிக்க முடியும். அதற்கு உதாரணமாக பலர் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X