After Floods Now Drought? High- Temperature Increases Fear Of Drought In Parts Of Kerala | வெள்ளத்தை தொடர்ந்து வறட்சியை நோக்கி கேரளா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெள்ளத்தை தொடர்ந்து வறட்சியை நோக்கி கேரளா?

Updated : செப் 16, 2018 | Added : செப் 16, 2018 | கருத்துகள் (33)
Advertisement
கேரளா, வெள்ளம், வறட்சி, வெயில்

திருவனந்தபுரம்: கடும் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பல ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்படுவதாக அங்கு செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு மக்கள் அவதிக்குள்ளானார்கள். தற்போது அங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது, அங்கு வெயிலின் தாக்கம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் மலை பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதயிலும் தற்போது, வறட்சி போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மலையாள நாழிதள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சரிவு

கடந்த 15 நாளில் இடுக்கி அணையின் நீர்மட்டம் 20 அடி சரிந்துள்ளது. பல அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பம் காரணமாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கோடை காலம் துவங்குவதற்கு முன்னர், வெப்பம் அதிகரித்து, வறட்சி போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மக்களை கவலையடைய செய்துள்ளது. மழைகாலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்ட வயல்வெளிகள், தற்போது, பல இடங்களில், காய்ந்து வெடித்து காணப்படுகின்றன. மாறி வரும் இயற்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மூணாறில் கடந்த மாதம் வரலாறு காணாத வகையில் கன மழை பெய்தது. கடந்த ஆகஸ்டில், 261 செ.மீ., மழை பதிவாகி பேரழிவு ஏற்பட்டது.மூணாறில் மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இதில் கன்னியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், கடைகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.மழை குறைந்து, செப்., 1 முதல் வெயில் சுட்டெரிக்கிறது. வழக்கமாக, இதுபோன்ற நிலை, நவம்பரில் நிலவும். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒரு மாதத்தில் அதன் சுவடு தெரியாத வகையில் ஆறுகள் வறண்டு விட்டன. இதனால், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மூணாறுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள குட்டியாற்றில் நீர் வரத்து குறைந்ததால், காலனி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை என,அதிகாரிகள் தெரிவித்தனர்.


கவலை

இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்புழுக்கள் இறந்துபோவது விவசாயிகளையும் சூழலியல் ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கழிவுகளை உரமாக்கி மண்ணை வளப்படுத்தும் மண்புழு உழவனின் நண்பன் என அழைக்கப்படுகிறது. வளமான மண் வெள்ளத்தில் அரித்துச் செல்லப்பட்டதும், வெள்ளத்துக்குப் பின் அதிக வெப்பநிலையால் மண் காய்ந்தது கிடப்பதுமே மண்புழுக்கள் உயிரிழக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-செப்-201808:02:54 IST Report Abuse
Srinivasan Kannaiya கெட்ட குடியே கெடும்... பட்ட காலிலேயே படும்
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
17-செப்-201802:54:04 IST Report Abuse
s t rajan எல்லா மாகாணங்களையும் அரசியல் வ்யாதிகளே அழித்துக் கொண்டிருக்கின்றன. தேசியவாதிகளே எங்கும் ஆளவில்லை. இல்லாது போனால் 87 வருடங்களில் பெய்யாத பேய் மழை பெய்தும் வறட்சி நிலவுமா ?
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
16-செப்-201823:31:21 IST Report Abuse
ديفيد رافائيل மூணார்ல தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X