நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், பலாத்காரம் குறித்து புகார் தெரிவிக்க அமைக்கப்பட்ட ஹாட்லைனில் ஏராளமானோர் புகார்களை தெரிவித்தனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிரியார்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க நியூஜெர்சியில் உள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில், ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டது. விசாரணை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் நியூஜெர்சி தொடர்ந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. 6 நாளில் மட்டும் 400 அழைப்புகள் வந்தது. இதனையடுத்து அங்கு கூடுதல் ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். சில அழைப்புகள், பாதிக்கப்பட்ட சிலர் குறித்தும் தகவல் தெரிவித்தனர். நியூயார்க் நகரிலும் புகார் தெரிவிக்க ஹாட்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.