கடிவாளம்! மருத்துவமனை கொள்ளையை கட்டுப்படுத்த வழிமுறை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கடிவாளம்!
மருத்துவமனை கொள்ளையை கட்டுபடுத்த
பண சர்ச்சையால் உடல்களை மறுக்க முடியாது

புதுடில்லி:மருத்துவமனைகளில் கொள்ளை கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. கட்டணம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டால், பணத்தை தராமல் நோயாளிகளை வெளியே அனுப்ப மறுப்பது, உடல்களை தர மறுப்பது போன்ற நடவடிக்கைகளில், இனி மருத்துவமனைகள் ஈடுபட முடியாது.

கடிவாளம்!,மருத்துவமனை, கொள்ளையை,கட்டுப்படுத்த,வழிமுறை


மருத்துவக் கல்வியில், தனியார் கல்லுாரிகள் கொள்ளையடிப்பதை தடுக்கும் வகையில், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான, 'நீட்' அமல்படுத்தப்பட்டது.ஏழை, எளிய மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம், இந்த மாதம் அறிமுகமாக உள்ளது.


இந்நிலையில், மருத்துவமனைகள் கொள்ளை கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும்,
அதனால், நோயாளிகளோ, அவர்களது குடும்பத்தாரோ பாதிக்காமல் இருப்பதற்காக, நோயாளிகளின் உரிமை என்ற பெயரில், புதிய ஆவணம் தயாரிக்கப்படுகிறது. நோயாளி களுக்கு உள்ள உரிமைகள் பற்றிய வழி முறை கள் குறித்து, ஏற்கனவே உள்ள சட்டங்களின் அடிப்படையில், இந்த புதிய ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.


மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில், இந்த புதிய ஆவணத்தை தயாரிக்கும் பணியில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தற்போது வரைவு ஆவணம், சுகாதாரத் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்கள்

மற்றும் தொடர்புடையோரின் கருத்துகள் கோரப் பட்டுஉள்ளன. அதன்பின், இந்த ஆவணம் அமலுக்கு வரும்.


சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும், தரமான, நியாய மான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில், தனியார் மருத்துவமனைகளில், அதிகக் கட்டணம் வசூலிப்பதுடன், கட்டணம் தொடர்பான பிரச்னை ஏற்படும்போது, நோயாளிகளை வெளியே அனுப்ப மறுக்கின்றனர். முழு கட்டணத்தை செலுத்தினால் தான், உடல்களை தருவதாக மிரட்டுகின்றனர்.


சில சந்தர்ப்பங்களில், பிரசவத்தில் பிறந்த குழந்தை களைக் கூடத் தர மறுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதுபோன்றவற்றை தடுப்பதற்காக, நோயாளிகளின் உரிமைகள் என்ற இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.வரைவு ஆவணத்தின்படி, இவ்வாறு பணப் பிரச்னை ஏற்பட்டால், நோயாளி களை அனுப்ப மறுப்பது, உடல்களைத் தர மறுப்பது போன்றவற்றில் மருத்துவமனைகள் ஈடுபட முடியாது.


நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பாதுகாவலர் கள் இந்த உரிமையை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மருத்துவமனையிலும், இதுபோன்ற பிரச்னை களுக்கு தீர்வு காண்பதற்கான அதிகாரிகள் இருக்க வேண்டும்.இதைத் தவிர அரசின் சார்பில், இதற்காக தனியாக அமைப்புகள் உருவாக்கப்படும். மாநில அரசுகள் மூலம், இந்த குறைதீர் அமைப்புகள் அமைக்கப்படும்.பிரச்னை ஏற்படும்போது, நோயாளி களின் உறவினர்கள், அந்த அமைப்பை அணுகலாம்.


இந்தப் பிரச்னைகளுக்கு, அந்த அமைப்பின் மூலம் தீர்வு காணலாம். இது தொடர்பாக அனைத்து மருத் துவமனைகளிலும் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


கட்டண பட்டியல் அவசியம்!


நோயாளிகள் உரிமை ஆவணம் குறித்து,

Advertisement

சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் மேலும் கூறியதாவது:ஒவ்வொரு மருத்துவமனை யிலும், அங்கு அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் குறித்த பட்டி யலை, அனைவருக்கும் தெரியும் வகையில், அந்தந்த மாநில மொழி யிலும், ஆங்கிலத்தி லும் வைக்க வேண்டும். மேலும், நோயாளியை அனுமதிக்கும் போது, கட்டணங்கள் குறித்த கையேடுகளை அளிக்க வேண்டும்.


அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அதற்காகும் தோராய செலவுகள் குறித்தும், நோயாளியின் உறவினர்களுக்கு தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டும்.மற்றொரு மருத்துவரின் ஆலோச னையைப் பெறுவதற்கு, நோயாளியின் உறவினர்கள் விரும்பினால்,எந்த கட்டணமும் வசூலிக்காமல், சிகிச்சை தொடர்பான ஆவணங்களை, மருத்துவமனைகள் அளிக்க வேண்டும்.


ஒருவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான, 'பில்'லில், எதற்கு, எவ்வளவு வசூலிக்கப்படு கிறது என்பதை மருத்துவ மனைகள் தெளிவாக குறிப்பிட வேண்டும்.


மதம், மொழி, இனம் என, எந்தப் பாகுபாடும் இல்லாமல், அனைத்துத் தரப்பினருக்கும், மருத்துவ சிகிச்சையை மருத்துவமனைகள் அளிக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தாலும்,நோயாளிகள் உரிமை ஆவணத் தின் படி மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-செப்-201816:29:32 IST Report Abuse

Loganathan Kuttuvaதனியார் மருத்துவ மனைகளில் முன் பணம் பெற்றுக் கொண்டுதான் வைத்தியம் பார்க்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்தது தான். சிகிச்சை முடிந்த பின் பணம் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவே இந்த நடை முறை. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள்.

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
17-செப்-201814:38:14 IST Report Abuse

Nakkal Nadhamuniமோடி காப்பீட்டு திட்டத்தை கட்டாயமாக்கிவிட்டு எல்லா பில்லும் காப்பீடு கம்பெனிகள் வழியாக சரிபார்க்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு கொடுக்க வழி செய்ய வேண்டும்... இதை நடை முறை படுத்த மருத்துவத்தை பற்றி தெரிந்த சரியான ஆட்கள் பலர் தேவைப்படுவார்கள் ... வேலை வாய்ப்பும் உருவாகும் ...

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
17-செப்-201811:03:39 IST Report Abuse

raghavanஅரசு மருத்துவமனைகளில் இல்லாத நவீன கருவிகள் இல்லை ஆனால் அதனை அக்கறையோடு செயல்பாட்டில் வைத்திருக்கிறார்களா? அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, ஊழியர்கள் கையூட்டு பெற்றால் சிறையில் தள்ளி, சுகாதாரமாக வைத்திருந்தாலே தனியார் மருத்துவமனைகளை நடுத்தர மக்கள் நாட தேவையில்லை.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X