லோக்சபா தேர்தல் பிரசாரம் பா.ஜ.,வின், 'டீ - 20 பார்முலா' Dinamalar
பதிவு செய்த நாள் :
லோக்சபா தேர்தல் பிரசாரம்
பா.ஜ.,வின், 'டீ - 20 பார்முலா'

புதுடில்லி: அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, 'டீ - 20' என்ற புதிய வியூகத்தை, பா.ஜ., வகுத்துள்ளது.

லோக்சபா, தேர்தல், பிரசாரம், பா.ஜ.,வின்,டீ - 20 பார்முலா


லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில், மத்தியில் ஆளும், பா.ஜ., உட்பட, பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ஈடுபட்டுஉள்ளன.மத்தியில் ஆளும், பா.ஜ., அடுத்த தேர்தலிலும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது.

இதற்கான தேர்தல் வியூகங்களை, பிரதமர் மோடி மற்றும், பா.ஜ., தலைவர், அமித் ஷா

வகுத்து வருகின்றனர்.இது குறித்து,கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது:கிரிக்கெட்டில், டி - 20 போட்டிகள் நடத்துவது போல், டீ - 20 என்ற புதிய வியூகத்தை கையாள உள்ளோம்.அதன்படி, ஒவ்வொரு பூத் அளவிலும், பல்வேறு தரப்பைச் சேர்ந்த, 20 பேரை, கட்சியின், 'நமோ ஆப்' மூலம் இணைக்க வேண்டும்.


இதைத் தவிர,ஒவ்வொரு பூத் நிர்வாகியும், குறைந்த பட்சம், தன் பகுதிக்கு உட்பட்ட, 20 வீடுகளுக்கு சென்று, டீ குடித்தபடியே, கட்சியின் செயல்பாடுகள், மத்திய அரசின் சிறப்பான திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும்.


கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, மோடியை, டீக்கடைக்காரர் என,எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.இதையடுத்து, 'சாய் பே சர்ச்சா' எனப்படும், டீக்கடைகளில் பிரசாரம் செய்தது, மிகப் பெரிய பலனைக் கொடுத்துள்ளது. அதே பாணியில், தற்போது, டீ - 20 பார்முலாவை செயல்படுத்த உள்ளோம்.கட்சியில் தேர்தல் பணியாற்றும்

Advertisement

தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் நேரடியாக பேசி வருகின்றனர்.


நாடு முழுவதும் உள்ள, 543 தொகுதிகளிலும் உள்ள கட்சியின் தேர்தல் பணியாளர்களுடன் பேச, மோடி திட்டமிட்டுள்ளார். 'நமோ ஆப்' மூலம், வரும் மாதங்களில், இந்த கலந்துரை யாடல் நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
18-செப்-201809:42:14 IST Report Abuse

Arasuபாரம்பரிய வோட்டு வைத்திருப்போர் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நோட்டாவை விட கீழே இருப்பவர்களிடம் எதிர்காலத்தில் அடிமை வாழ்வு வாழாமல் இருக்க முயற்சி செய்யவும். இங்கு வந்த மோடியை go back modi என்றவர்கள் ராஜபக்ஷே வந்தபோது அப்படியே பம்முகிறார்கள். go back ராஜபக்ஷே என்றால் என்னென்ன உண்மைகளை அவிழ்த்து விடுவாரோ என்கிற பயம் .

Rate this:
Mahesh C - Bangalore,இந்தியா
17-செப்-201821:18:06 IST Report Abuse

Mahesh CIts good idea, but congress can start its promotion as CSK Strategy ( Because Chennai Super Kings are the winner always). Excellent planning and powerful ution is the main idea, experienced candidates (30-40) with good education, experience in respected fields can join in Congress party...

Rate this:
17-செப்-201815:24:47 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்தமிழ்நாட்டில் டீயெல்லாம் குடிக்கும்போது விவாதம் செய்வதில்லை , டாஸ்மாக் பாரில் சரக்கடித்துக்கொண்டே பேசலாம் , மண்டை உடையும் , நாற்காலிகள் உடையும். ஏனென்றால் எந்த ஒரு சினிமா படத்திலும் டாஸ்மாக் சரக்கு இல்லாத படங்களே இல்லை. சில படங்களில் கிளைமாச்சே டாஸ்மாக்கில் தான். ஒரு படத்தில் ஒரு சீனிலாவது ஒருவன் குடித்துவிட்டு வாந்தி எடுப்பது போல வைக்கவில்லையென்றால் ராசி இல்லையாம்.

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X