சமூக வலைதளங்களை நாடும் கட்சிகள்; பார்லிமென்ட் தேர்தலில், 'டிஜிட்டல்' போர் Dinamalar
பதிவு செய்த நாள் :
சமூக வலைதளங்களை நாடும் கட்சிகள்
பார்லிமென்ட் தேர்தலில், 'டிஜிட்டல்' போர்

புதுடில்லி:அடுத்த ஆண்டு நடக்கஉள்ள லோக்சபா தேர்தலில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட, 'டிஜிட்டல்' முறையிலான பிரசாரம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அந்த வகையான பிரசாரத்துக்கு, பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன.

 சமூக, வலைதளங்களை, நாடும், கட்சிகள், பார்லிமென்ட் தேர்தலில், 'டிஜிட்டல்', போர்


லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தை, பல்வேறு
கட்சிகள் ஏற்கனவே துவக்கியுள்ளன.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, டிஜிட்டல் முறையிலான பிரசாரம், சமூக வலைதளங்கள் மூலமான பிரசாரம், பா.ஜ., வுக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுத்தது.


டிஜிட்டல் முறையிலான பிரசாரத்தில் மற்றக் கட்சிகளைவிட, பா.ஜ., முன்னிலையில் உள்ளது.நாட்டில் தற்போது, 46.21 கோடி, 'இன்டர்நெட்' இணைப்புகள் உள்ளன. உலகிலேயே அதிக இன்டர்நெட் இணைப்பு உள்ள நாடுகளில், சீனாவுக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் நம் நாடு உள்ளது.

மேலும், 2016ம் ஆண்டில், 16.8 கோடி பேராக இருந்த, சமூக வலைதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2019ம் ஆண்டில், 25.82 கோடியாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது.


தீவிரம்


இந்நிலையில்,அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்கு தயாராகும் வகையில், டிஜிட்டல் பயன்பாட்டை, பா.ஜ., தீவிரமாக்கியுள்ளது. காங்., உள்ளிட்ட மற்ற கட்சிகளும், சமூக வலைதளப் பயன்பாடு, புள்ளி விபர தகவல்களின் அடிப்படை யில் வியூகங்கள் வகுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.இது குறித்து, பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தேசியப் பொறுப்பாளர், அமித் மாள்வியா கூறியதாவது:


கட்சியின் டிஜிட்டல் பிரசாரத்தில், 12 லட்சம் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசின் செயல்பாடு கள், கட்சியின் அரசியல் கொள்கைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே, எங்கள் நோக்கம். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் எந்த பொய் பிரசாரத்தையும் முறியடிக்க, இந்தப் படைதயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


காங்கிரஸ் கட்சியும், சமூகவலைதள பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. பிரபல நடிகை, குத்து ரம்யா, கட்சியின் சமூக ஊடக பிரிவின் தலைவராக செயல் பட்டு வருகிறார். 'சமூக வலைதள பிரசாரத்தில்

Advertisement

ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் வர வேண்டும்' என, கட்சித் தலைவர் ராகுல், சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 'வாட்ஸ்ஆப்' சமூக வலைதளத்தின் மூலமாகவும் கட்சிப் பணி யாற்ற, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.


ஆய்வு


இரண்டு முக்கிய தேசிய கட்சிகளை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் டில்லியில் ஆட்சியில் உள்ள, ஆம் ஆத்மி கட்சியும், டிஜிட்டல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளன. இதற்காக, தனியாக அமைப்புகளை, கட்சிக்குள் அவை உருவாக்கி உள்ளன.இந்த டிஜிட்டல் பிரசாரங்க ளோடு, முந்தைய தேர்தல் புள்ளி விபரங்களின் அடிப் படையில், வாக்காளர்களின் மனநிலையை அறியும் ஆய்வுகளிலும் கட்சிகள் தீவிரமாக உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - Palakkad,இந்தியா
17-செப்-201816:59:50 IST Report Abuse

samsBjpin leelaikal arambam

Rate this:
sams - Palakkad,இந்தியா
17-செப்-201816:58:21 IST Report Abuse

samsPathavikkaka bjp ennavellam pannapokutho .ini kalavaram kundu vedippu sontha veettil petroal bomb

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-செப்-201816:26:47 IST Report Abuse

Nallavan Nallavanடிஜிட்டல் இந்தியா என்று கூறி ஜியோ -வைப் பிரபலப்படுத்தியதன் பலன் .....

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X