மல்லையா வழக்கில் குற்றப்பத்திரிகை வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர்| Dinamalar

மல்லையா வழக்கில் குற்றப்பத்திரிகை வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர்

Added : செப் 16, 2018
Advertisement

புதுடில்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, சி.பி.ஐ., தாக்கல் செய்யஉள்ள குற்றப்பத்திரிகையில், அவனுக்கு கடன் வழங்க உதவியாக இருந்த, வங்கி உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருரைச் சேர்ந்த, தொழிலதிபர், விஜய் மல்லையா மீது, ஐ.டி.பி.ஐ., வங்கியில், 900 கோடி ரூபாய் மற்றும் எஸ்.பி.ஐ.,யின் கூட்டமைப்பு வங்கிகளில், 6,000 கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதில், ஐ.டி.பி.ஐ., வங்கியில் பெற்ற கடன் தொடர்பான வழக்கில், மல்லையா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல வங்கி அதிகாரிகள், மல்லையாவுக்கு உடந்தையாக இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன், 17 வங்கிகளில் பெற்ற, 6,000 கோடி ரூபாய் கடன் தொடர்பான வழக்கில், இன்னும் ஒரு மாதத்துக்குள், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.இதில், மல்லையாவுக்கு கடன் வழங்க, முறைகேடாக உதவி புரிந்த, எஸ்.பி.ஐ., உட்பட, பல வங்கி உயர் அதிகாரிகளின் பெயர்கள், இடம் பெறும் என, தகவல் வெளியாகி உள்ளது.மேலும், கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரகுநாதன் உட்பட, பல மூத்த அதிகாரிகளின் பெயர்களும், குற்றப்பத்திரிகையில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராகுல் குற்றச்சாட்டு - சி.பி.ஐ., மறுப்பு! : விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், சமீபத்தில் கூறியதாவது:விஜய் மல்லையா மீதான, 'லுக் - அவுட் நோட்டீஸ்' எனப்படும், பார்த்ததும் கைது செய்யக் கூடிய அறிவிக்கையை, சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர், ஏ.கே.சர்மா, பலவீனப்படுத்தி, அவரை தப்பிச் செல்ல அனுமதித்தார்.நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி தப்பி செல்லவும், இவரே காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர், அபிஷேக் தயால் கூறியதாவது:லுக் - அவுட் நோட்டீசை மாற்றும் முடிவு, தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை. முறையான ஆலோசனைக்கு ன்பே, அந்த முடிவு எடுக்கப்பட்டது. மல்லையாவை கைது செய்யவோ, தடுத்து நிறுத்தவோ, அடிப்படை முகாந்திரம் இல்லாததால், நோட்டீஸ் மாற்றப்பட்டது; இதை பலமுறை, சி.பி.ஐ., தெளிவுபடுத்தி உள்ளது.நிரவ் மோடி மற்றும் சோக்சி தப்பி சென்று, ஒரு மாதம் ஆன பின்பே, பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. இதில், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு பங்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X