எச்.ராஜா மீது நடவடிக்கை எடுங்க! : அரசுக்கு தி.மு.க., வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுங்க! : அரசுக்கு தி.மு.க., வலியுறுத்தல்

Added : செப் 16, 2018 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை: 'கலவரத்தை துாண்டும் வகையில், பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேசியதற்கான ஆதாரம் வெளியாகி உள்ளதால், அவர் மீது, தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.புதுக்கோட்டை, திருமயம் அருகே மெய்யபுரம் கிராமத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தின் போது, குறிப்பிட்ட வழியில், சிலைகளை எடுத்து செல்லும்படி போலீசார் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா, போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றி, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, ஆவேசமாக பேசினார். அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை:தமிழக காவல் துறையினரை, கண்ணிய குறைவான வார்த்தைகளால், எச்.ராஜா விமர்சித்துள்ளார். உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், கீழ்த்தரமான வார்த்தைகளை, அவர் பயன்படுத்தியது, 'வீடியோ' ஆதாரங்களுடன் வெளியாகி உள்ளது.தமிழகத்தின் கலவரத்தை துாண்டும் வகையில் செயல்படும் எச்.ராஜா மீது கடும் நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்த, மிக மோசமான விமர்சனத்தை, ராஜா முன் வைத்துள்ளார். அதனால், நீதிமன்றம் தாமாகவே முன் வந்து, நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.போலீசார், மழை, வெயில் பாராமல் பொதுமக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில், அயராது பாடுபடுகின்றனர். அவர்கள் மீது, களங்கம் கற்பிக்கும் வகையில், மோசமான சொற்களை, எச்.ராஜா பயன்படுத்தி இருக்கிறார்.எனவே இதுகுறித்து, சட்ட நிபுணர்கள் கருத்தை கேட்டு, மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-செப்-201811:21:31 IST Report Abuse
Panneerselvam Chinnasamy H . ராஜா வை கைது செய்தால் , அவர் தியாகி ஆகி அவர் கட்சி வலுப்பட்டுவிடும்...செய்வார்களா என்பது சந்தேகமே...?
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
17-செப்-201811:17:20 IST Report Abuse
I love Bharatham இது நாள் வரை ஒரு அரசியல் வியாதியும் ...போலீஸ் பற்றியும் .....கோர்ட் பற்றியும் பேசவே இல்லை .....உண்மையா சொன்ன ராஜா மட்டும் தான் குற்றவாளி ...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-செப்-201810:57:49 IST Report Abuse
Cheran Perumal எப்போதுமே காவல்துறையினரை விமரிசிக்கும் ஸ்டாலின் தற்போது ஆதரவாக கருத்து வெளியிடுவதற்கு காரணம் அவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள். அதேபோல சிறையில் சொகுசு வசதிகள் ஏற்படுத்திக்கொண்ட குற்றவாளிகள் அத்துறை அமைச்சருக்கு ரூ.இரண்டு கோடி கொடுத்ததாக சொல்லப்படும் விவகாரத்திலும் ஸ்டாலின் அரசை குற்றம் சொல்லாததற்கு காரணம் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு கிடைத்ததுதான் என்றும் சொல்கிறார்கள். ஆக, ஏதேனும் விஷயத்தில் ஸ்டாலின் குறை சொன்னால், அவருக்கு வந்து சேர வேண்டியது வரவில்லை என்று புரிந்து கொள்க. அரசியல் என்றாலே கமிஷன் என்று ஸ்டாலின் தெளிவான கொள்கை வைத்திருக்கிறார்.
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
18-செப்-201802:12:54 IST Report Abuse
Karthikஎந்த மக்கள் பேசி கொண்டார்கள் என்று சொன்னால் நல்ல இருக்கும். நீனாலே அடிச்சு உடறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X