கண்துடைப்பு!சேலம், கடலூர், கோவை சிறைகளில் போலீஸ் சோதனை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கண்துடைப்பு!,சேலம், கடலூர், கோவை, சிறைகளில், போலீஸ், சோதனை

சென்னையில் உள்ள, புழல் மத்திய சிறை, பயங்கர வாதிகளின் உல்லாசபுரியாக மாறியதன்
எதிரொலியாக, சேலம், கடலுார், கோவை மத்திய சிறைகளில், போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சிறைகளில் அத்துமீறல்கள் நடப்பது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல், துாங்கி வழிந்த அதிகாரிகள் மீது, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி.,யின் பிடி இறுகுவதால், கண்துடைப்புக்காக, இந்த சோதனை நடந்திருக்கலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், புழல் உட்பட, ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இது தவிர, மாவட்ட, மகளிர் மற்றும் தனிச்சிறைகள் என, 129 சிறைகள் உள்ளன. மொத்தமுள்ள, 138 சிறைகளிலும், 22 ஆயிரத்து, 632 கைதிகளை அடைக்க முடியும்.

சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்திலேயே, மூன்று சிறைகள் உள்ளன. அதில், தண்டனை கைதிகளை அடைக்கும் சிறையில், உயர் பாதுகாப்பு பிரிவு உள்ளது.அங்கு தான், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, பயங்கரவாதிகள், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் அடைக்கப் பட்டு இருந்தனர்.

அதேபோல, சர்வதேச போதை பொருள் கடத்தல் காரன்களான, இலங்கையை சேர்ந்த, முகமது ரிகாஸ்; தஞ்சாவூரை சேர்ந்த, முகமது ஜாகிர்; மதுரையைச் சேர்ந்த, மதன் அழகர் மற்றும் முகமது இப்ராகிம், முகமது ரபீக் ஆகியோரும் அடைக்கப் பட்டிருந்தனர்.சிறையில் உள்ள பயங்கரவாதிகளும், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரன்களும், புழல்

மத்திய சிறையை உல்லாச புரியாக மாற்றி விட்டனர்.

அவர்கள்,'ஸ்டார்' ஓட்டலுக்கு நிகராக அறைகளை மாற்றி, ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர். அதை, ஸ்மார்ட் போனில், 'செல்பி' எடுத்து, 'வாட்ஸ் ஆப்'பில், உறவினர்கள் மற்றும் வெளியில் உள்ள, கூட்டாளிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். கடத்தல்காரனான முகமது ரிகாஸ், 'வாட்ஸ் ஆப்' அழைப்பில், தென்ஆப்ரிக்கா, இலங்கை உட்பட, பல நாடுகளில் உள்ள, போதை கடத்தல் பேர்வழிகளுடன் பேசியுள்ளான்.

சிறையில் இருந்தபடியே, போதை கடத்தலில் ஈடுபடும் தன் கூட்டாளி களுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளான். அதேபோல, முகமது ரபீக்கும், ஆயுத கடத்தல்காரன்களுடன் பேசியதாக தெரிகிறது. புழல் மத்திய சிறையில் இருந்து, வெளிநாடுகளுக்கு, வாட்ஸ் ஆப் அழைப்பு சென்றது, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் உத்தரவுபடி, சிறைத்துறை விஜிலென்ஸ் போலீசார் ரகசிய சோதனை நடத்தினர்.

அப்போது, ஸ்மார்ட் போன் உட்பட, ஏழு மொபைல் போன்கள் சிக்கின. அதிலிருந்த மெமரி கார்டுகள் வாயிலாக தான், கைதிகளின் உல்லாச

வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தது.இதையடுத்து, பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, கைதிகளின் உல்லாச வாழ்க்கைக்கு உதவிய, சிறைத் துறை அதிகாரிகள் குறித்த பட்டி யலை, ஐ.பி., தயாரித்து உள்ளது. அவர்கள் மீது, நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கிடையில், சிறை அறைகளை, உல்லாச விடுதிகள் போல, கைதிகள் மாற்றியிருந்தது வெளிச்சத்திற்கு வந்த தால், சர்ச்சைக்குரிய கைதிகள் ஐந்து பேரை, வெவ்வேறு சிறைகளுக்கு, சிறைத்துறை நிர்வாகம் மாற்றியது.முறைகேட்டை மூடி மறைக்க எடுக்கப் பட்ட நடவடிக்கை இது என, விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் இணைந்து, கோவை, சேலம் மற்றும் கடலுார் மத்திய சிறைகளில், நேற்று காலை, 6:20 மணி முதல், 8:20 வரை, திடீரென சோதனை நடத்தினர். கோவையில், சிறைத் துறை, டி.ஐ.ஜி., அறிவுடை நம்பி தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோவை மாநகர, சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனர், சுந்தர்ராஜன் மேற்பார்வை யில், ஏராளமான போலீசார்சோதனையில் ஈடுபட்டனர்.

கைதிகளை அவர்களின் அறைகளில் இருந்து வெளியேற்றி, மோப்ப நாய்

உதவியுடன், சர்ச்சைக்குரிய பொருட்கள் உள்ளனவா என, அலசப்பட்டது.சிறைகளில், கைதிகள் நடத்தி வரும் அட்டூழியம் அனைத்தும், சிறைத்துறை அதிகாரி களுக்கு நன்கு தெரியும். அவ்வப்போது, பெயரளவில் சோதனை நடத்தி, மொபைல் போன், கஞ்சா பொட்டலங்கள் சிக்கியதாக, 'கணக்கு' காட்டுவர்.

தற்போது, புழல் சிறை உல்லாசபுரியாக மாறியது குறித்த, பகீர் தகவல் வெளியானதால், நேற்று மூன்று சிறைகளிலும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.சிறைகளில் கைதிகளின் அட்டகாசங் களை கண்டு கொள்ளாமல், துாங்கி வழிந்த அதிகாரிகள் மீது, ஐ.பி.,யின் பிடி இறுகுவதால், கண்துடைப்புக் காக, நேற்று சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

'உத்தரவுபடியே சலுகை'


தமிழக சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம் கூறிய தாவது:புழல் சிறையை, கைதிகள் உல்லாசபுரியாக மாற்றி விட்டனர் என்பது தவறு. தற்போது வெளியாகி உள்ள, படங்களில் இருக்கும் கைதிகள், போதை பொருள் தடுப்பு சட்டத்தில் கைதாகி, 10 ஆண்டுகள் தண்டனை பெற்று, ஐந்து ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இவர்கள், முதல் வகுப்பு கைதிகள் என்பதால், நீதிமன்ற உத்தரவுபடி சலுகைகள் தரப்பட்டுள்ளன. கைதிகள், மொபைல் போன்கள் வைத்திருந்தது சட்டப்படி குற்றம். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும், போலீசார் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் இணைந்து, சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
17-செப்-201815:35:32 IST Report Abuse

ganapati sbஇப்படி சிறுபான்மையினருக்கு சிறையில் சலுகைகள் கொடுப்பதால் அவர்கள் அப்பாவி மக்கள் மேல் குண்டுவெடிப்பு கொலை மாற்று கருத்தினர் கொலை மத ஊர்வலத்தில் கல்வீச்சு கள்ளக்கடத்தல் என கிரிமினல் வன்முறையில் துணிந்து ஈடுபடுகிறார்கள் வாக்கு வாங்கி அரசியல் லஞ்சத்தில் ஈடுபடாமல் சட்டம் ஒழுங்கு காக்க அரசும் காவல் துறையும் இதை இணைந்து தடுக்க வேண்டும்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-செப்-201815:31:07 IST Report Abuse

இந்தியன் kumarமுறைகேடுகள் செய்பவர்களை களை எடுத்தால் யாருமே மிஞ்ச மாட்டார்கள் போலிருக்குதே மொத்தபேரையும் வேட்டைக்காரன் போல களை எடுக்க வேண்டும்.

Rate this:
17-செப்-201815:27:17 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்திராவிட கட்சிகளின் லட்சணம் தான் சந்தி சிரிக்கிறதே..

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X