ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல்

Added : செப் 17, 2018
Advertisement

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், மாவட்ட எஸ்.பி.,யின் வாகனம் சிக்கிய நிலையில், ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. எஸ்.பி.,யின் பாதுகாப்பு காவலர்கள் சாலையில் இறங்கி, போக்குவரத்தை சீர்படுத்தினர்.சென்னை- -- திருப்பதி மாநில நெடுஞ்சாலையில், ஆந்திர மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது, ஊத்துக்கோட்டை பேரூராட்சி. ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன.இதனால், அங்குள்ள பஜார் பகுதியில் சாலையின் இரண்டு பக்கமும், ஆக்கிரமிப்புகள் இருப்பதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.இந்நிலையில், இன்று புரட்டாசி மாதம் பிறந்த நிலையில், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், நேற்று காலை முதல், ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கனரக வாகனங்கள், ஊத்துக்கோட்டையில் இருந்து, திருவள்ளூர் வழியே போலீசார் திருப்பி அனுப்பினர். தொடர்ந்து அதிகளவு வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து நெரிசல் இருந்தது.எஸ்.பி.,பொன்னி, நேற்று மதியம், ஊத்துக்கோட்டை வழியே, பாதிரிவேடு சென்று கொண்டு இருந்தார்.அப்போது, ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். எஸ்.பி., வாகனம் போக்குவரத்தில் சிக்கியதை பார்த்த உள்ளூர் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும், இங்கும் ஓடினர். அந்த நேரம் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் போக்குவரத்தில் சிக்கியது.இதை பார்த்த, எஸ்.பி., பொன்னி, தன்னுடன் வந்த அதிவிரைவுப் படை போலீசாரை அனுப்பி, போக்குவரத்தை சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அரை மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரடைந்தது. பின், எஸ்.பி., கிளம்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X