4 கார்கள் கண்ணாடி உடைத்து திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 கார்கள் கண்ணாடி உடைத்து திருட்டு

Added : செப் 17, 2018
Advertisement

சென்னை:சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த, நான்கு கார் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்கள், பணம், மடிக்கணினி, 'ஹார்டு டிஸ்க்' உள்ளிட்டவற்றை திருடி தப்பினர்.அண்ணா நகர், வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பணிபுரிபவர், பஞ்சாட்சரம், 48. நேற்று முன்தினம் இரவு, அலுவலக வளாகத்தில் காரை நிறுத்திச் சென்றார். நேற்று காலை, மீண்டும் வந்து பார்த்த போது, காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, நான்கு சக்கரங்கள், ஸ்பீக்கர் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரைச் சேர்ந்தவர், ராமச்சந்திரன், 28; மென்பொருள் பொறியாளர். நேற்று முன்தினம் இரவு, வடபழனியில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்த அவர், சாலையோரத்தில் காரை நிறுத்திச் சென்றுள்ளார். நேற்று காலை பார்த்த போது, காரின் கண்ணாடியை உடைத்து, மடிக்கணினி திருடு போனது தெரியவந்தது.போரூர் அடுத்த தண்ட லத்தைச் சேர்ந்தவர், சிங்காரவேலன், 52. நேற்று முன்தினம் இரவு, வடபழனி, 100 அடி சாலையில் காரை நிறுத்தி, முருகன் கோவிலுக்கு சென்றார்.மீண்டும் வந்த போது, காரின் கண்ணாடியை உடைத்து, மடிக்கணினி, மூன்று, 'ஹார்டு டிஸ்க்' உள்ளிட்டவை திருடப்பட்டது தெரிந்தது. அயனாவரத்தைச் சேர்ந்தவர், சஞ்சய்; பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, எழும்பூர், வேனல்ஸ் சாலையில் காரை நிறுத்தி, நண்பர் வீட்டிற்கு சென்றார். மீண்டும் வந்த போது, கார் கண்ணாடி உடைத்து, 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து, அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X