பொது செய்தி

இந்தியா

'இ - டிக்கெட்' மோசடி செய்பவர்களை தண்டிக்க ரயில்வே சட்டத்தில் திருத்தம்

Added : செப் 17, 2018 | கருத்துகள் (6)
Advertisement
'இ - டிக்கெட்' மோசடி, தண்டிக்க, ரயில்வே, சட்டம், திருத்தம்

புதுடில்லி:ரயிலில், 'இ - டிக்கெட்' முன்பதிவில், முறைகேட்டில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு, சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில்வேயில், இ - டிக்கெட் எனப்படும், கம்ப்யூட்டர் டிக்கெட் முன்பதிவில், அதிக
அளவில் மோசடி நடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வருகின்றன.
சமீபத்தில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த நபர், போலியான, 'சாப்ட்வேர்' எனப்படும், மென்பொருள் மூலம், 'தத்கல்' டிக்கெட் முன்பதிவில், 35 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், சி.பி.ஐ., அதிகாரி ஒருவர், போலி சாப்ட்வேர் மூலம்,
ரயில் முன்பதிவில் மோசடி செய்ததற்காக, கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.
இது போன்ற, இ - டிக்கெட் மோசடியில் ஈடுபடுபவர்களை தண்டிக்க, ரயில்வேயில் தனி சட்டங்கள் இல்லை. இவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை, மிக குறைவாக இருப்பதாக, பரவலாக புகார் கூறப்பட்டன.இதையடுத்து, இவர்களை தண்டிப்பதற்காக, ரயில்வே சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இ - டிக்கெட் மோசடியில் ஈடுபடு பவர்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இந்த சட்ட திருத்த பரிந்துரையை, ரயில்வே வாரியம், ஏற்ற பின், அது நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
17-செப்-201810:41:34 IST Report Abuse
christ மக்களின் தேவைக்கேற்ப ரயில் டிக்கெட் எந்நேரமும் தாராளமாக கிடைக்கும் படி ரயில்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ரயில்சேவை மக்களுக்கு தாராளமாக கிடைக்கும்படி வழங்கினாலே இடைதரர்களுக்கு இதில் வேலை இல்லை. ரயில்வேயும் தட்கல் ,சுவிதா என பெயர்களை போட்டு கட்டண கொள்ளை அடிக்கவேண்டிய தேவையும் இல்லை .
Rate this:
Share this comment
Ramesh - Bangalore,இந்தியா
17-செப்-201811:35:35 IST Report Abuse
Ramesh@Christ - We should not be speaking IDEAL condition. If Sleeper class ticket is raised by 5 to 10% , political parties ACT as if their total assets are SEIZED. Sleeper class tickets are Rs 270 for 450KM and Rs500 for 1800KM. We are 10 to 12 compartments of sleeper coach. If really Below Poverty Line people are travelling, we can provide 50% concession. Rest is to be charged with ACTUAL+Profit so that Railway department can be improved...If salary of State /Central /Private companies are increased we appreciate. If Railway ticket price is increased 5to10% as well, we act as if government started looting....Time to INTROSPECT...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-செப்-201807:51:21 IST Report Abuse
Srinivasan Kannaiya கையில் கௌண்ட்டரில் பெறும் பயண சீட்டிற்கு ஈடு இணை கிடையாது... நூறு சதம் நம்பகத்தன்மை உடையது...
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
17-செப்-201806:45:55 IST Report Abuse
Nalam Virumbi 10 ஆண்டுகள் சிறை. பரோல் கிடையாது. ஒரு கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் போதும். அப்பீல் கிடையாது. இம்மாதிரி சட்டம் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X