பதிவு செய்த நாள் :
கப்பல் கப்பலாக வருகிறது நிலக்கரி:
தமிழக கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது

அனல் மின் நிலையங்களில், நிலக்கரி தட்டுப்பாட்டால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, உடனடியாக, முழு அளவில் நிலக்கரி அனுப்ப துவங்கியுள்ளது.

கப்பல், நிலக்கரி, தமிழக கோரிக்கை, மத்திய அரசு ஏற்றது

மின் வாரியத்தின், அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த, தினமும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதில், 60 ஆயிரம் டன்,ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள, மத்திய அரசின், 'கோல் இந்தியா' நிறுவன சுரங்கங்களில் இருந்து, தினமும் அனுப்பப்படுகிறது.மேற்கண்ட, இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால், இரு வாரங்களாக, தமிழகத்திற்கு, நிலக்கரி அனுப்புவது, 25 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.காற்றாலைகளில் இருந்து தினமும், 3,000 மெகா வாட் மேல் மின்சாரம் கிடைத்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து, மூன்று இலக்கத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதனால், காற்றாலை மின்சாரத்தால், அனல் மின் உற்பத்தியை குறைத்த மின் வாரியம், மீண்டும், அதை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேசமயம், போதிய நிலக்கரி இல்லாததால், மின் உற்பத்தியை அதிகரிப்பதில் சிக்கல்ஏற்பட்டது.மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழகத்திற்கு, குறைந்த மின்சாரம் வழங்கப்படுவதால், மின் வாரியத்தால், மின் தேவையை சமாளிக்க முடியவில்லை.இதனால், கிராமங்களில், மின் தடை செய்யப்பட்டது. அனல் மின் நிலையங்களில், தொடர்ந்து, மின் உற்பத்தி செய்ய, உடனே நிலக்கரியை அனுப்பும்படி, 14ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார்.நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள, மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உள்ள,

இரு அலகுகளில், 14, 16ம் தேதி இரவு, அடுத்தடுத்து, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.வட சென்னை, துாத்துக்குடி அனல் மின் நிலையங்களிலும், மின் உற்பத்திபாதிக்கும் சூழல் உருவானது.

இந்நிலையில், தமிழகம்விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, முழு அளவில், நிலக்கரியை அனுப்பி வருகிறது.இது குறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒடிசா, மேற்கு வங்க சுரங்கங்களில் எடுக்கப்படும் நிலக்கரி, சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டு, ஒடிசா - பாரதீப் துறைமுகம்; மேற்கு வங்கம் -ஹால்டியா துறைமுகத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து, கப்பல்களில், எண்ணுார், துாத்துக்குடி துறைமுகங்களுக்கு, நிலக்கரி வருகிறது.எண்ணுாரில் இருந்து, வட சென்னை மின் நிலையத்திற்கு, 'கன்வேயர் பெல்ட்' வழியாகவும், மேட்டூருக்கு, சரக்கு ரயிலிலும், நிலக்கரி அனுப்பப்படுகிறது. ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து புறப்படும் கப்பல், தமிழகம் வர, மூன்று நாட்களாகும்.

தற்போது, அனல் மின் நிலையங்களில், 1.25 லட்சம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. எண்ணுார் துறைமுகத்திற்கு, 70 ஆயிரம் டன் நிலக்கரியுடன், கப்பல் வந்துள்ளது. அது, விரைவில் இறக்கப்படும். பாரதீப் துறைமுகத்தில் இருந்து, 1.80 லட்சம் டன் நிலக்கரி ஏற்றியுள்ள, இரு கப்பல்கள், 16ம் தேதி காலை புறப்பட்டுள்ளன. அவை, இன்று அல்லது நாளை வந்து சேரும்.'முழு அளவில், நிலக்கரி அனுப்பவில்லை எனில், அனல் மின் நிலையங்களை மூட வேண்டி இருக்கும்' என்ற, உண்மை நிலையை எடுத்து கூறி, முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதையடுத்து, 16ம் தேதி இரவில் இருந்து,தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்பப்படுகிறது.காற்றாலைகளில் இருந்தும், தற்போது, 1,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில், மின் தடை ஏற்பட

Advertisement

வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

காப்பாற்றிய மழை!


கடந்த வாரத்தில், கோடை காலத்தை போல, வெயில் சுட்டெரித்தது. இதனால், மின் தேவையும், 14 ஆயிரம் மெகா வாட்டிற்கு மேல் இருந்தது. அதில், சென்னை மற்றும் புறநகரின் பங்கு, 3,000 மெகா வாட். நேற்று மாலை முதல், மின் தேவை அதிகம் உள்ள, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், கன மழை பெய்தது.இதனால் தற்போது, சென்னையில், 2,300 மெகா வாட்; ஒட்டுமொத்தமாக, 12 ஆயிரம் மெகா வாட் என்றளவில், மின் தேவை குறைந்துள்ளது. இதனால், அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க அவசியம் ஏற்படவில்லை.இதன் விளைவாக, நிலக்கரி தட்டுப்பாட்டை காரணம் காட்டி, மின் வாரியம், தற்போது, 30 லட்சம் டன் நிலக்கரி வாங்க இருப்பதில், தனியார் நிறுவனங்கள், விலையை குறைக்காமல் முரண்டு பிடிக்க முடியாது.

முதல்வருடன் ஆலோசனை


திடீரென ஏற்பட்ட மின் பற்றாக்குறையால், பல இடங்களில், மின் தடை செய்யப்பட்டது. இதை சமாளிக்க, மத்திய அரசிடம் இருந்து, கூடுதல் நிலக்கரி மற்றும் மின்சாரம் கேட்டு, தமிழக குழு, இன்று டில்லி செல்கிறது. இதற்காக, மின் துறை அமைச்சர் தங்கமணி, நேற்று காலை, 10:30 மணிக்கு, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், வாரிய தலைவர் விக்ரம் கபூர் மற்றும் இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.பின், அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள், தலைமை செயலகம் சென்று, முதல்வர் பழனிசாமியிடம், அந்த விபரங்களை தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
18-செப்-201820:36:41 IST Report Abuse

பிரபுபற்றாக்குறை வரும் முன்னரே எவ்வளவு இருப்பு இருக்கிறது, எப்போது ஆர்டர் செய்யவேண்டும், எப்போது வந்து சேரும் என்பதெல்லாம் இவ்வளவு நாட்களாக இவர்கள் செய்து வந்த விஷயம் தான். வேண்டும் என்றே நிலக்கரி பற்றாக்குறை வந்ததாகவும் அதை மோடி தமிழ்நாட்டு மக்களுக்காக சரி செய்து கொடுத்தாகவும் விளம்பரம் தேடிக்கொடுத்துள்ளனர் இந்த அடிமைகள். இனிமேலும் அம்மா அரசு என்று சொல்லாதீர்கள். அம்மா அடிமையாய் இருந்ததில்லை. அம்மாவிடம் தான் அடிமைகள் இருந்தனர்.

Rate this:
R chandar - chennai,இந்தியா
18-செப்-201816:00:49 IST Report Abuse

R chandarAll Tamilnadu government officials should do their duty properly with out depending on political intervention . Present tem of operation is wholly depend on political intervention this trend should be changed all officials should work on requirement not after getting complaint unfortunately all department are acting only on complaint raised this attitude should change all officials of Electricity, Corporation,Police,and other government department should work for requirement as and when arises not to be act after complaint been raised our government officials should realize this and act smartly by making out a clear chart of work for the requirement

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
18-செப்-201815:23:41 IST Report Abuse

 ஈரோடுசிவாஅதிமுக அரசு செயல்படவேயில்லைன்னு சொல்ல முடியாது .... ஆனால் , இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா செயல்பட்டா நல்லாருக்கும்னு தான் சொல்றோம் ....

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X