பதிவு செய்த நாள் :
ராஜிவ் கொலையாளிகள் விடுதலையில் சிக்கல்:
தமிழக அரசு பரிந்துரையை எதிர்த்து வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, ஏழு பேரை விடுதலை செய்வதற்கு, கவர்னருக்கு, தமிழக அரசு அனுப்பிஉள்ள பரிந்துரையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராஜிவ் கொலையாளிகள், விடுதலை, சிக்கல்,: தமிழக அரசு , பரிந்துரை

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், ஆயுள் தண்டனை பெற்ற, ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்க்கும், மத்திய அரசின் வழக்கை முடித்து வைப்பதாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியது.'தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற, பேரறிவாளன் கருணை மனு மீது, கவர்னர் முடிவு எடுக்கலாம்' என, உச்ச நீதிமன்றம், சமீபத்தில்

தீர்ப்பளித்தது.அதைத் தொடர்ந்து, 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, தமிழக கவர்னருக்கு, மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே, இந்த ஏழு பேரையும் விடுவித்து,தமிழக அரசு, 2014ல், பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, எஸ். அப்பாஸ், ஜான் ஜோசப், அமெரிக்கை நாராயணன், மாலா, சாமுவேல் திரவியம், கே. ராமசுகந்தம் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில், அப்போது மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
ஒருவரது தண்டனையை குறைப்பது, முன் கூட்டியே விடுவிப்பது தொடர்பாக, ஏற்கனவே, ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசுக்கும் இதுபோன்ற அதிகாரம் இருப்பது, சட்டவிரோதமானது என, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.'தமிழக அரசின் முடிவை எதிர்த்து, மத்திய அரசு வழக்குதொடர்ந்துள்ளதால், அதன் முடிவுக்குப் பின், இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும்' என, உச்ச நீதிமன்றம், 2014ல், கூறியது.தற்போது, மத்திய அரசின் மனு மீதான வழக்கை, உச்ச நீதிமன்றம் முடித்து

Advertisement

வைத்துள்ளது.இதையடுத்து, 'எங்கள் மனுக்களை விசாரிக்க வேண்டும்' என, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதால், அதையும் எதிர்த்து, தங்கள் மனுவில் திருத்தம் செய்து, புதிதாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த மனுவை நேற்று விசாரித்த, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, மூன்று வாரத்துக்குள் புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து உள்ளது.இதனால், ராஜிவ் கொலையாளிகள் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
18-செப்-201819:49:26 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇனி கொலை குற்றம் செய்தவர்களை வாழ்நாள் முழுவதும் விடுவிக்கவே கூடாது. சிறையிலேயே சாகனும் அதுதான் நியதி சரியானதும் கூட. அய்யோ பாவம் எதார்த்தமாக மேடை ஏறி பேசியவரை கொலைசெய்த பாவிகள் சாகனுங்க.

Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
18-செப்-201815:50:53 IST Report Abuse

sankaseshanநக்கீரா இதுபோல ஒருத்தர் சொன்னார் ,பிரபாகரனை கொன்றால் tamil நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று ஆற்றில் சாதாரண தண்ணீரே ஓடுவதில்லை மழை காலத்தை தவிர

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
18-செப்-201815:31:11 IST Report Abuse

dandyஉண்மை குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலாவுகின்றார்கள் ..BATTERY வாங்கியவன் வெற்றிலை வாங்கியவன் எல்லாம் மாட்டிகிடடார்கள் யாரை குற்றவாளியாக்க வேண்டும் என்று விசாரணை தொடங்க முதலே தீர்மானிக்க பட்ட்து..

Rate this:
THAYALAN - CHENNAI,இந்தியா
18-செப்-201820:23:50 IST Report Abuse

THAYALAN."BATTERY வாங்கியவன் வெற்றிலை வாங்கியவன் எல்லாம் மாட்டிகிட்டார்கள்" என்று நீங்கள் சொல்லும் பேரறிவாளன் ராஜீவ் காந்தி கொலைக்கு 1 ஆண்டுக்கு முன்பு இலங்கை சென்று விடுதலை புலிகளோடு பழகியவர் என்பதும் கொலைக்கு திட்டம் தீட்டி செயல்படுத்திய ஒற்றை கண் சிவராசனுக்கு பயன்படுத்த இவரது பேரிலே இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்திருக்கிறார். இவை எல்லாம் புலன் விசாரணையில் ஆதார பூர்வமாக நிரூபிக்க பட்டுள்ளது. தான் வாங்கி கொடுத்த பேட்டரி மூலம் தான் மனித வெடுக்குண்டு வெடிக்க செய்யப்பட்டது என்பதை கொலைக்கு பின்பு தெரிந்த உடன் அப்ரூவராக மாறி காவல்துறைக்கு தெரிவித்து இருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கிறது. தயவு செய்து இந்த வழக்கு பற்றிய முழு விபரத்தையும் படித்துவிட்டு கருத்து பதிவிடுங்கள். ...

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X