அதிகாரியின் ஆட்டம் 'ஷாக்' அடிக்குது...அமைச்சரின் அமைதி, 'ஜர்க்' அடிக்குது!

Added : செப் 18, 2018
Advertisement
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தோழி வீட்டுக்கு செல்ல, சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் சென்றதால், திருப்பூர் முழுவதும் பல இடங்களில், 'டிராபிக் டைவர்ஷன்' செய்திருந்தனர். அப்போது, பத்திரப்பதிவு அலுவலகம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சற்றுத்தள்ளி இருந்த மரத்தின் நிழலில், இருவரும்
 அதிகாரியின் ஆட்டம் 'ஷாக்' அடிக்குது...அமைச்சரின் அமைதி, 'ஜர்க்' அடிக்குது!

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தோழி வீட்டுக்கு செல்ல, சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் சென்றதால், திருப்பூர் முழுவதும் பல இடங்களில், 'டிராபிக் டைவர்ஷன்' செய்திருந்தனர். அப்போது, பத்திரப்
பதிவு அலுவலகம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சற்றுத்தள்ளி இருந்த மரத்தின் நிழலில், இருவரும் இளைப்பாறினர்.''தனியார் இடத்துல, பத்திர ஆபீசுக்கு அடிக்கல்நாட்டு விழா, ரகசியமா நடந்திருக்கு தெரியுமா'' என, ஆரம்பித்தாள் மித்ரா.''என்னடி, சொல்ற.கவர்மென்ட் ஆபீசை தனியார் இடத்துல கட்றாங்களா?'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா, 30 சென்ட் இடத்தை, பத்திரப்பதிவு ஆபீஸ் கட்ட தானமா கொடுத்துஇருக்காங்களாம்.''''அடடே பரவாயில்லையே! அரசாங்கத்துக்கு நிலத்த கொடுத்த அந்த புண்ணியவான் யாரு?''''மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஜாயின்ட் 1, 2... அப்புறம், வேலம்பாளையம் பத்திர ஆபீசு. இந்த மூணுமே, வாடகை கட்டடத்திலதான் செயல்படுது. இதை கொஞ்சம் 'டெக்னிகலா' யோசிச்ச, 'ரியல் எஸ்டேட்காரர்' ஒருத்தரு, அதிகாரிகள வளைச்சு போட்டு,நெருப்பெரிச்சலில், 30 சென்ட் இடத்த தானமா கொடுத்திருக்காரு.''
''பாறைக்குழி ஓரமா இருந்த இடத்துல, 30 சென்ட் நிலத்த கொடுத்துட்டு, அதிகாரிகளுக்கும் 'பினாமி' பேரில், கொடுக்கறதுக்கு பேசியிருக்காங்களாம். அதுமட்டுமல்ல, பத்திர ஆபீசு சுற்றிலும் கடை கட்டறதுக்கு, அவர் இடம் ஒதுக்கியிருக்காரு. 30 கடையை கட்டிவிட்டா, மாதம் பெரிய தொகையை சம்பாதிக்கலாங்கிற ஐடியாதான்,'' என்று மித்ரா விளக்கினாள். ''அதாவது, சின்ன மீனை போட்டு, திமிங்கலத்தையே பிடிக்கறாரு. அப்படித்தானே!''''கரெக்டா சொன்னீங்க. இன்னொரு விஷயத்தையும் கேளுங்க. நெருப்பெரிச்சலுக்கு, போதிய பஸ் வசதி இல்ல. பஸ் ஸ்டாப்பில் இருந்து, அரை கி.மீ., துாரம் போகணும். மக்கள் எப்படி போனா என்னன்னு அதிகாரிங்க நினைக்கறாங்க்கா?'' ''அதனாலதான், வடக்கு எம்.எல்.ஏ.,வ வச்சு, ரகசியமா அடிக்கல் நாட்டியிருக்கின்றனர். நிலம் தானமாக கிடைக்குன்னு, மக்கள் கஷ்டப்படறதை பத்தி, மாவட்ட நிர்வாகமாவது நினைச்சு பார்க்கணும். ஊருக்குள்ள கட்டாம, 18 கி.மீ.,க்கு அந்தப்பக்கம் கட்றாங்களே, இது நியாயமாங்க்கா?,''என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.
''சரி... சரி. டென்ஷன் ஆகாதே. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்'' என்றாள் சித்ரா.அதற்குள் 'டிராபிக்' சீராகி விட, இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். ''கவர்னர், கலெக்டரை கூட ஈஸியா பார்த்துடலாம் போலிருக்கு. இந்த கண்காணிப்பு அதிகாரியை பார்க்க முடியலைன்னு விவசாயிகள் புகார் செஞ்சிருக்காங்க. உனக்கு தெரியுமா?''''மக்களை சந்திக்க மறுக்கிற அதிகாரி, யாருங்க்கா?'' என்று கோபமாக கேட்டாள் மித்ரா.''யாரும் தொட முடியாத, தொட்டா 'ஷாக்' அடிக்கும் துறை அதிகாரிதான். அதனால தான் மக்கள் வந்தா கூட பார்க்கறதில்லையாம். பொதுவாக, எந்த ஆபீசா இருந்தாலும், பதிவேட்டில் பதிவு செஞ்சுட்டு, காத்திருந்து, அதிகாரியை பார்க்கலாம். ஆனா, இவரை அப்படியும் பார்க்க முடியாதாம்.'' ''அக்கா... கிரைம் ரைட்டர் ராஜேஷ்குமார் கதையில கூட, சஸ்பென்ைஸ கண்டுபிடிச்சுடலாம். ஆனா... உங்க மேட்டரில் அது முடியாதுபோல.''''பறக்காதடி..! சொல்றேன். அந்த ஆபீசில், அதிகாரிக்கு, விருப்பம் இருந்தா மட்டும்தான் பார்க்கறாராம். இல்லைன்னா, அடுத்த நாள் வாங்கன்னு திருப்பி அனுப்பறாங்களாம். விவசாயிகள் அவ்வளவு ஈஸியா பார்க்க முடியலைனு, கலெக்டர் ஆபீசுல புகார் சொல்ற அளவுக்கு நிலை மோசமாகிடுச்சு.'' ''இதை விட கொடுமை என்னன்னா, 'குறைகேட்பு கூட்டம் நடத்தும் நாளில், யாருக்குமே சேர் கூட போட மாட்டாங்களாம். யாராக இருந்தாலும், அந்த அதிகாரிகிட்ட நின்னுட்டுதான் மனு கொடுத்து, பிரச்னையை சொல்லணுமாம்.அமைச்சர் இருக்கற தொகுதியிலயா இப்படி ஒரு கொடுமைன்னு, விவசாயிகள் வேதனைப்படறாங்களாம்.'' ''இப்படி, 'நாகம்' மாதிரி சீறிட்டு, 'ராஜ' அதிகாரம் பண்ற அவரை, அமைச்சர் கூட கேட்க மாட்டேங்கிறாரே?. அதிலென்ன உள்குத்து இருக்குதோ...'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.ஒரு வழியாக, இருவரும் தோழி வீட்டுக்கு சென்று விட்டு, பி.என்.ரோடு வழியே, காமராஜர் ரோடு வந்து விட்டனர். வழி நெடுக ஆங்காங்கே, விதவிதமான பிள்ளையார் சிலைகளை பார்த்து, ஆச்சரியப்பட்டு கொண்டே வந்தாள் மித்ரா.அப்போது, புதிதாக திறக்கப்பட்ட 'பறக்கும் பாலம்' முன், போலீசார் நின்று வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தனர்.''பாலம் கட்டுவதே டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்குத்தான். ஆனால், பாலம் துவங்கும் முன், போலீஸ் நின்று டிராபிக் சீரமைப்பதை, உலகத்திலேயே இங்குதான் பார்க்க முடியும்,'' என்றாள் சித்ரா.''இந்த மாதிரி 'டிசைன்' பண்ண, இன்ஜினியருக்கு, தங்க மெடல்தான் கொடுக்கோணும். கொஞ்ச துாரத்துக்கு, 43 கோடி ரூபாயா? என்று அங்கலாய்த்தாள் மித்ரா.பாலத்துக்கு அருகிலுள்ள, பழைய மார்க்கெட் வீதியில் தனியார் கேபிள் பதிக்க குழி தோண்டி, வேலை முடிந்து அப்படியே விட்டு சென்று விட்டனர்.''அதைப்பார்த்த சித்ரா, கவர்மென்ட் டெண்டர் என்றால், இப்படித்தான். குழி தோண்டி கேபிள் பதித்து இரண்டு வாரமாகியும் குழியை ஒழுங்காக மூடாமல் இருக்கின்றனர்,'' என்றாள் சித்ரா. ''இதுவே தனியார் பணி என்றால் எவ்வளவு கச்சிதமாக நடக்கும் தெரியுங்களா?'' ''என்னடி, ஏதோ பொடி வைத்துப்பேசுகிறாய்?'' ''ஆமாங்க்கா. ராக்கியாபாளையம் பிரிவிலிருந்து மணியகாரம்பாளையம் போற ரோட்டில், தனியார் கட்டடம் முன், கார்ப்ரேஷன் சாக்கடை கால்வாய்க்குள், குழாய் பதித்து மேற்பகுதியில் கான்கிரீட் போட்டு,மூடிவிட்டனர்.'' ''இதே மாதிரி, பலரும் அந்த ஏரியாவில், சாக்கடைக்கு மேல், கான்கிரீட் தளம் போட்டு, டாய்லெட் கட்டியும், வண்டி பார்க்கிங்குக்கு வசதியாகவும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதைப்பத்தி, பலரும் பெட்டிஷன் கொடுத்தும் கூட, கார்ப்ரேஷன் ஆபீஸர்ஸ், யாரும் போய் பார்க்கலையாம்.'' ''ஏங்க்கா.. ஒரு வேளை, 'செண்பகமே... செண்பகமே...' ன்னு பாட்டுப்பாடி, வைட்டமின் 'ப'வை கறந்துட்டு, கண்டுக்காம விட்டுட்டாங்களா?'' என்றாள் மித்ரா.''மித்து. ரொம்ப சரியாக... சொன்னாய்?'' என்று பாராட்டினாள் சித்ரா. அதற்குள், மித்ரா வீட்டருகே வந்ததும், வண்டியை நிறுத்தினாள் சித்ரா. ''அக்கா... உள்ளே வந்து, காபி குடிச்சிட்டு போங்க,'' என்று மித்ரா சொன்னதும், சித்ராவும் உள்ளே சென்றாள்.''எங்கடி, மம்மியை காணோம்?''''அம்மா.. விநாயகர் சிலை ஊர்வலத்தை பார்க்க, ஆலாங்காடு போயிருக்காங்க,'' என்று சொன்ன மித்ரா கேஸ் ஸ்டவை பற்ற வைத்தாள். ''ஏக்கா... அனுப்பர்பாளையத்தில், ஒரு வாலிபர் தீக்குளிச்சு இறந்த மேட்டரில், ஏட்டு ஒருத்தர் 'சும்மா.. பூந்து விளையாடிட்டாராம்.''''ஆமாண்டி... நானே சொல்லலாம்னு இருந்தேன். அந்த வாலிபர், தான் வேலை செஞ்ச கடையில, ஏதோ பணத்தை திருடிட்டாராம். ஓனர் சத்தம் போட்டதற்கு 'படார்ன்னு' கெரசின் ஊத்தி கொளுத்திட்டு, இறந்துட்டார்.''''இதை விசாரணை பண்ண வந்த ஒரு ஏட்டு, ஒரு நாள் முழுவதும், அவரை காரில் அங்குமிங்கு போய், கடை ஓனரை அலைக்கழிச்சுட்டு, 'அதிகாரிக்கு தெரிஞ்சா பிரச்னையாயிடும். 30 ஆயிரம் கொடு, மத்ததை நான் பார்த்துக்கிறேன்,'னு சொல்லி பணத்தை வாங்கிட்டாராம்.''''இதுக்கு, கறுப்பு சட்டை கவுன்காரர் ஒருத்தரும் உடந்தையாம். அவர் மூலமாகத்தான், பணம் பட்டுவாடா ஆனதாம். இப்போது இது தெரிஞ்சுகிட்ட ஐ.எஸ்., போலீசார், சத்தமில்லாம, விசாரணை பண்ணிட்டு இருக்காங்களாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.காபி ரெடியாகி விட, இருவரும் பருகிக்கொண்டே பேசினர். ''ஏங்க்கா. இந்த பாண்டியில், சூதாட்ட கிளப் ஒண்ணு, ஓேஹான்னு ஓடுதாம். இதுக்கு, அந்த பகுதி ஸ்டேஷன் அதிகாரி ஆசி உண்டாம். போன வருஷம், இதே கிளப், தாராபுரம் ரோட்டில் இருந்தப்ப, அப்போதிருந்த கமிஷனர் ஆர்டரின் பேரில், 'ஸ்பெஷல் ரைடு' செஞ்சு, சிலரை கைது செய்தனர். இப்போ, அதே கிளப், இடத்தை மாத்திட்டு, ஜம்முன்னு, இங்கே ஓடுதாம்,'' என்றாள்.''அடடே... பரவாயில்லையே மித்து. சிட்டி கிரைம் மேட்டரை, 'பிங்கர் டிப்'பில் வச்சிருக்கியே.''''அப்படியே காற்றில் வர்ற விஷயங்களை 'கேட்ச்' பண்ணிடறேன்,'' என்றாள் மித்து.''இந்த கொடுமைய கேளு மித்து. லிங்கேஸ்வரர் ஊரில், புதிய பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில், ஒரு மாற்றுத்திறனாளி, தன்னோட மொபட்டில், டீ, காபி, விக்கிறார். இது பொறுக்க முடியாத ரோந்து போன போலீஸ்காரர், அவரிடம், 'இத பாருப்பா. இப்டி ராத்திரியெல்லாம் விக்கக்கூடாது. பிரச்னை வராமல் இருக்க, 30 ஆயிரம் கொடு,'ன்னு மிரட்டியிருக்கார்,''''அதுக்கு, அவர், 'ஐயா.. பல வருஷம் விடியவிடிய பாடுபட்டாலும், 10 ஆயிரம் கூட வராது. நீங்க என்னடான்னா.. 30 ஆயிரம் கேட்கறீங்களே. ஏதோ... என்னால, முடிஞ்சதை தர்றேன்னு', சொன்னதுக்கு, மாற்றுத்திறனாளிஎன்று கூட பார்க்காமல், 'ஏக..' வசனத்தில் திட்டியிருக்கார். அதோடு அவர் கடை போடறதே இல்லையாம்.''''இந்த மாதிரி போலீஸ்காரை தட்டிக்கேட்க வேண்டிய பெரிய அதிகாரி, எதையும் கண்டுக்கறதில்லை. 'நமக்கு எதுக்கு 'சாமி'ன்னு, 'பரம' திருப்தியா இருக்குறாரு,'' என்றாள் சித்ரா.''அங்கே அப்படின்னா.. பக்கத்தில, கோழிப்பண்ணையூரில் நடக்கறதை கேளு. நாலு கைகளுடன் அவதாரம் எடுத்துருக்காரு, புதுசா வந்த மன்னர்,” என்றாள் சித்ரா. “இதென்ன, நாலு கையுடன் மன்னர்? குழப்பமா இருக்கே..!” என்றாள் மித்ரா. “புதுசா வந்திருக்கிற 'செல்வ'மான பதிவு ஆபீசர், ஏற்கனவே இருந்தவரை ஓரங்கட்டிட்டு, சும்மா வாங்கி தள்றாராம். இந்த மாதிரி வாங்குறதுக்கு, அவருக்கு 'நாலு கை' வேண்டுமென்று, , ரியல் எஸ்டேட்காரங்களே புலம்பு கின்றனராம்,'' என்றாள் சித்ரா. ''அக்கா.. அதே ஊரில் எஸ்.ஐ., ஒருத்தர், புகார் குறித்து விசாரிக்க போன இடத்தில், இரண்டு குடிகாரங்க அடிச்சிட்டாங்க. விலக்கி விட போன இவருக்கும் அடி விழுந்திருச்சு. அந்த ஆத்திரத்தில, ஒரு ஆளை போட்டு தொவைச்சு எடுத்துட்டாராம்,''''அவரு இப்போ, ஜி.எச்.,சில் ட்ரீட்மென்டில் இருக்கிறாராம். இதை தெரிஞ்சுகிட்ட நிருபர் அவர்கிட்ட கேட்டதற்கு, 'அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலையேன்னு' நழுவிட்டாராம்,'' என்று சிரித்தாள் மித்ரா.''ஓ.கே.., மித்து, நான் கிளம்பறேன்'' என்றவாறு, சித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X