சந்திரனுக்கு செல்லும் ஜப்பான் கோடீஸ்வரர்

Added : செப் 18, 2018 | கருத்துகள் (5)
Advertisement
Moon Tours, Yusuke Mayaisaka, SpaceX, சந்திரன் சுற்றுலா ,யுசாகு மாயிஸாகா, ஸ்பேஸ்எக்ஸ், ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மாயிஸாகா,  ஜப்பான் கோடீஸ்வரர் நிலவுக்கு சுற்றுலா,  நிலா சுற்றுலா, ஸ்பேஸ்எக்ஸ் சுற்றுலா,
 Japan Millionaire Yusaku Mayaisaka, Japan Millionaire Moon Tour, SpaceX Tour,

டோக்கியோ: சந்திரனுக்கு செல்லும் முதல் சுற்றுலா பயணி என்ற பெருமையை ஜப்பான் கோடீஸ்வரர் பெற்றுள்ளார்.
ஜப்பானை சேர்ந்தவர் யுசாகு மாயிஸாகா. ரூ.21,000 கோடி சொத்துக்களுக்கு சொந்தகாரர். ராக் பாடகராக வாழ்க்கையை துவக்கியவர். தற்போது ஆன்லைன் பேஷன் மால் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் ஏராளமான விமானங்கள், சொகுசு கப்பல்கள் உள்ளன. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், 2023ம் ஆண்டு சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதில் முதல் சுற்றுலா பயணியாக யோசாகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஓவியம் உள்ளிட்ட அரிய கலை பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு, ரூ.770 கோடி செலவு செய்து ஒரு ஓவியத்தை வாங்கியுள்ளார். 42 வயதான யோசாகு, ஜப்பான் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில், 18 வது இடத்தில் உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
18-செப்-201820:29:39 IST Report Abuse
Narayan இந்த கமெண்ட் பகுதியில்... பூமி தட்டை என இன்னமும் சொல்லும் சில மார்க்கம் படும் வேதனை புரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
18-செப்-201817:42:52 IST Report Abuse
வெகுளி இது என்ன பெருமை?.... எங்க தல இதைவிட அதிக சொத்துக்களை குவித்தது எப்பவோ மேல போயிட்டார்....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-செப்-201816:42:47 IST Report Abuse
S.Baliah Seer இப்போதெல்லாம் சந்திரனில் குடிவைப்போம்,சந்திரனுக்கு சுற்றுலா போவோம் என்று சொல்வது பேஷனாகிவிட்டது.சந்திரனில் உயிர் வாழ அவசியமான ஆக்சிஜன் இல்லாதபோது செயற்கை ஆக்சிஜன் மாஸ்க்கோடு எப்படி உலவுவார்கள்? பூமியின் புவி ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே சந்திரனில்.இதனால் பூமியில் நடந்தவர்களால் சந்திரனில் நடப்பது கடினம்.ட்ரைனிங் இருந்தால் மட்டுமே தத்தக்கா ,பித்தக்கா என்று எழும்பி எழும்பி நடக்க முடியும்.சந்திரனில் வெறும் மலைகளும்,கற்களும் நிரம்பி பாலைவனத்தை விட மோசமாக இருப்பதால் அங்கே சுற்றுலா என்ன வேண்டி கிடக்கிறது.?அநேகமாக சகாரா பாலைவனத்தில் புல்பூண்டு கூட இல்லாத இடத்தில் இறக்கி இதுதான் சந்திரன் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X