பொது செய்தி

இந்தியா

பலாத்கார பிஷப்: 15 முரண்பாடுகள்

Updated : செப் 18, 2018 | Added : செப் 18, 2018 | கருத்துகள் (56)
Advertisement
கேரளா, பிஷப், பிரான்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி, பாலியல் பலாத்காரம்

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ முல்லக்கல், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில், அவரிடம் விசாரணை நடத்திய போது, 15 விஷயங்களில் முரண்பாடு காணப்பட்டது என கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


14 முறை பலாத்காரம்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.

தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் முல்லக்கல் பதவியை தற்காலிகமாக ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியுள்ளார். இத்துடன் முன்ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை செப்., 25ம் தேதி நடக்க உள்ளது.

இச்சூழ்நிலையில், பிஷப் குறித்து கேரள போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:


இந்த வழக்கில் இதுவரை இரண்டு பிரமாண பத்திரங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் பிரமாண பத்திரம் ஆக., 13ல் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரி வந்து இருந்தார். அதையே பிரமாண பத்திரத்திலும் குறிப்பிட்டு இருந்தார்.


கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு விடுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிஷப் முல்லக்கல்லிடம் விசாரணை நடத்திய போது, 15 முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. 2014ம் ஆண்டு மே, 5ம் தேதி தான் முதல் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது. அன்றைய தினம் குருவிலாங்காடு விடுதிக்கு தான் செல்லவில்லை. இடுக்கி மாவட்டத்தில் தங்கி இருந்தாக பிஷப் கூறினார். ஆனால், இடுக்கியை சேர்ந்த தலைமை கன்னியாஸ்திரி மற்றும் பிஷப்பின் டிரைவர் மாற்று தகவல்களை தெரிவித்தனர்.


சர்ச்சை புதிதல்ல

குருவிலாங்காடு விடுதியின் விருந்தினர் பதிவேட்டில் பிஷப் வந்து இருந்தது குறிப்பிடப்பட்டு இரு்நதது. அதே போல், இரண்டு கன்னியாஸ்திரிகள் பிஷப் விடுதிக்கு வந்ததை உறுதி செய்தனர். தன்னை 14 முறை பிஷப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கூறியுள்ளார். ஆனால், பிஷப் தான் ஒன்பது முறை தான் குருவிலாங்காடு விடுதிக்கு சென்றதாக கூறியுள்ளார். விடுதியின் விருந்தினர் பதிவேட்டில் அவர் 14 முறை வந்ததாக குறிபிடப்படப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 15 முரண்பாடுகள் உள்ளன.


இவ்வாறு கேரள போலீஸ் வட்டாரங்கள் கூறின.


பிஷப் முல்லக்கல், சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. இதற்கு முன், 2005ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் பாதிரியார் மார்க் பர்னெஸ் மர்ம சாவு வழக்கிலும், பிஷப் முல்லக்கல் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார்.


Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
23-செப்-201814:09:23 IST Report Abuse
bal இவன் எத்தனை பேருக்கு பாவ மன்னிப்பு கொடுத்திருப்பான்...அவர்களை என்ன செய்ய...அது போல் இவனுக்கும் நாளை போப்பே பாவ மன்னிப்பு கொடுப்பார்...என்ன செய்ய...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-செப்-201811:13:30 IST Report Abuse
Nallavan Nallavan இவனுக்கும் ஆன்மிகத்துக்கும் வெகுதூரம் .....
Rate this:
Share this comment
Cancel
Sare Jagan Se Acha - Chennai ,இந்தியா
19-செப்-201814:06:39 IST Report Abuse
Sare Jagan Se Acha இந்து மதத்தை எதிர்ப்பது மட்டும் தான் மத சார்பின்மை ன்னு ...பெரியார் சொல்லி குடுத்துட்டு போயிருக்கார்....மர மண்டைகளும் அதை விடாம புடிச்சுக்கிட்டு தொங்குதுக்கள்.... ..// இல்லை . அவர்கள் மதத்தை அவர் தாக்கியது படித்தால் அவர்களுக்கு கொடுத்த மரணடி தெரியும் .( அதை இங்கு போட்டால் edit செய்து விடுவார்கள் ) வாக்கு வங்கி அரசியல்வியாதிகள் மூலம் secularism போர்வையில் அதை இவர்கள் இருட்டிப்பு செய்து உலா வருகின்றனர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X