பொது செய்தி

இந்தியா

எம்எல்ஏக்கள் சம்பளம்: கர்நாடகா முதலிடம்

Added : செப் 18, 2018 | கருத்துகள் (11)
Advertisement
எம்எல்ஏ, சம்பளம், கர்நாடகா

புதுடில்லி: இந்தியாவில் எம்எல்ஏக்களின் ஆண்டு சராசரி சம்பளத்தில் கர்நாடக முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது.


ரூ.51.99 லட்சம்

இது தொடர்பாக நடந்த ஆய்வு ஒன்றில், எம்எல்ஏக்களின் ஆண்டு சராசரி சம்பளம் ரூ.24.59 லட்சம் ஆகும். அதில், அதிகபட்சமாக, கர்நாடகாவை சேர்ந்த 203 எம்எல்ஏக்களின் சம்பள சராசரி ரூ.1.1 கோடி . குறைந்தபட்சமாக சத்தீஸ்கரின் 63 எம்எல்ஏக்களின் வருமானம் ரூ.5.4 லட்சம் . கிழக்கு மாநிலங்களை சேர்ந்த 614 எம்எல்ஏக்கள் ஆண்டிற்கு சராசரியாக ரூ.7.5 லட்சம் ஆகும். இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களில் தென் மாநிலங்களை சேர்ந்த 711 பேரின் சம்பள சராசரி ரூ.51.99 லட்சம்.


அதிகம்

மொத்தமுள்ள 4,086 எம்எல்ஏக்களில் 3,145 பேர் கல்வி குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 33 சதவீதம் பேர் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர். அவர்களின் ஆண்டு சராசரி ரூ.31.03 லட்சம். பட்டதாரி மற்றும் அதற்கு மேல் படித்த எம்எல்ஏக்கள் 63 சதவீதம் பேரின் சம்பள சராசர ரூ.20.87 லட்சம் ஆகும். படிக்காத எம்எல்ஏக்களின் ஆண்டு சராசரி ரூ.9.3 லட்சம் ஆகும்.


பணக்கார எம்எல்ஏ

விவசாயம், தொழில் செய்யும் எம்எல்ஏக்களின் ஆண்டு சராசரி சம்பளம் ரூ57.81 லட்சம் ஆகும். ரியல் எஸ்டேட், நடிகர் மற்றும் சினிமா தயாரிப்பு செய்யும் எம்எல்ஏக்களின் ஆண்டு சம்பள சராசரி ரூ.39 லட்சம் மற்றும் ரூ.28 லட்சம் ஆகும்.அதிகபட்சமாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு(ஊரக பகுதி) எம்எம்ஏ நாகராஜூவின் ஆண்டு சம்பளம் ரூ.157.04 கோடியாகும்.
25 வயது முதல் 50 வயதுள்ள 1402 எம்எல்ஏக்களின் ஆண்டு சம்பள சராசரி ரூ.18.25 லட்சம்.
51- 80 வயதுள்ள 1,727 எம்எல்ஏக்களின் ஆண்டு சம்பள சராசரி ரூ.29.32 லட்சம்.
81 - 90 வயதுள்ள 11 எம்எல்ஏக்களின் ஆண்டு சம்பள சராசரி ரூ.87.71 லட்சம்.
ஆண் எம்எல்ஏக்களின் ஆண்டு சம்பள சராசரி ரூ.25.85 லட்சம்.
பெண் எம்எல்ஏக்களின் ஆண்டு சம்பள சராசரி ரூ.10.53 லட்சம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-செப்-201801:39:15 IST Report Abuse
 nicolethomson அது எந்த மாநிலம் , கட்சி ஆகட்டும், எல்லாம் மக்களின் வரிப்பணம், மற்றொரு இலவச ஸ்கீம் அவ்ளோதான் , தேவையா?
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
18-செப்-201821:29:44 IST Report Abuse
Gnanam இப்படி MLA , MP , மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் ஊதிய உயர்வால்தான் நாட்டில் ஏழை பணக்கார வித்தியாசம் அதிகரிக்கின்றது. நாள் கூலி வேலை செய்பவரும், 100 நாள் அரசு கூலி வேலை செய்து சம்பளம் வாங்குகிறவர்களும், லட்சக்கணக்கில் மாத சம்பளம் வாங்குகிறவர்களும் எப்படி கூடி வாழ முடியும். இந்த பெரிய ஏற்றத்தாழ்வை முறியடிக்க அரசு ஊழியர்களுக்கு தினம் 4 மணி நேர வேலையும், அதற்கேற்ற சம்பளமும், மற்றும் வேலைதேடி அலையும் அனைவருக்கும் 4 மணி நேர வேலையும் ஒதுக்கீடு செய்தால், எல்லோருக்கும் வேலையும் கிடைக்கும், ஏழை பணக்கார வித்தியாசமும் சற்று குறையும். தினமலர் முயற்சி எடுக்கலாமா?
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
19-செப்-201804:03:32 IST Report Abuse
Ram Sekarஎப்படி சார்? கொஞ்சம் விளக்குங்க. அரசு வேலை செய்யும் அனைவருக்கும் 4 மணி நேர வேலை என்றால், வேலை இல்லாதவர்கள், தேடுபவர்களுக்கு மீதி 4 மணி நேர வேலை கொடுக்கணுமா??. ஏற்கனவே வேலை செய்பவர்கள் படிப்பு மற்றும் வேலை தேடுப்பிற்கான படிப்பு இரண்டும் ஒத்து போக வேண்டும். உதாரணமாக, கிளெர்க் மற்றும் அட்டெண்டர் வேலைகளுக்கு 10 அல்லது 12 -ம் கிளாஸ் படிப்பு போதுமானது. மற்ற குறிப்பிட்ட அறிவியல் என்ஜினீயர் படிப்பு உள்ளவர்க்கு வேலைகள் கொடுப்பது நடைமுறை சிக்கல்கள் வரும். "வேலை தேடி அலையும் அனைவரும்" என்பதுதான் சிரமம். யோசித்து பாருங்கள், கணக்கும் பண்ணி பாருங்கள் "இடியாப்ப சிக்கல்தான்". அரசு வேலையில் உள்ளோரின் எண்ணிக்கை எவ்வளோ? வேலை தேடுவோரின் எண்ணிக்கை எவ்வளோ? இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள், உங்களின் "வேலை தேடும் அனைவருக்கும் வேலை ஒதுக்கீடு" என்பது சாத்தியமில்லாது போகுமே. உதாரணம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளார்கள் என்று வைத்துக்கொண்டால், அதற்கு சமமாகவா வேலை தேடுவோர் எண்ணிக்கை உள்ளது? இல்லையே அதிகம். ஒரு வேலை 2 லட்சம் பேர் கூட குறைய வேலை தேடுவோர் என்று வைத்து கொண்டால் கூட, தேவைப்படும் வேலைக்கு பொருத்தமான அல்லது ஏற்ற படிப்பு இருக்காது. ஒவ்வொருவரும் சில பல லட்சங்கள் செலவு செய்து "பொறியியல்" படித்து விட்டு அதற்கு உரிய வேலைகளே தேடுவார்கள். பொதுப்பணி துறையில் 10 ஆயிரம் பேர்கள் சிவில் enginner ஆக வேளையில் இருப்போரின் வேலை நேரம் 4 மணி நேரம் குறைத்து விட்டால் இன்னொரு 10 ஆயிரம் வேலை இல்லாதோரை நியமிக்கலாம். ஆனால், சிவில் படித்தோர் லட்சக்கணக்கில் வேலை இல்லாமல் உள்ளனர். மீதமுள்ள 90 ஆயிரம் சிவில் இன்ஜினியரிங் படித்தோருக்கு என்ன செய்வீர்கள்??. புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே முடியும், அதிலும் எத்தனை பேருக்கு??. வேலை தேடும் அனைவருக்கும் வேலை என்பது "சினிமா கனவு" மட்டுமே....
Rate this:
Share this comment
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
18-செப்-201821:00:51 IST Report Abuse
a.s.jayachandran எல்லாம் மக்கள் பணம், எல்லாம் மக்கள் செய்த பாவம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X