அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
18 எம்.எல்.ஏ.,க்கள்
பதவி பறிபோய் ஓராண்டாச்சு!

முதல்வருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.

 18 எம்.எல்.ஏ.க்கள்,பதவி,பறிபோய், ஓராண்டாச்சு!


'நோட்டீஸ்'


தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், 2017 ஆக., 22ல், கவர்னரை சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக,

கடிதம் கொடுத்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி, சட்டசபை அரசு கொறடா ராஜேந்திரன், ஆக., 24ல், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.அதை ஏற்று, அந்த எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பினார். அதற்கு, 19 எம்.எல். ஏ.,க்களும், இடைக்கால பதில் அளித்தனர்.

முழுமையான விளக்கம் அளிக்க, செப்., 7ல் நேரில் ஆஜராக வேண்டும் என, சபாநாயகர் மீண்டும், நோட்டீஸ் அனுப்பினார்.அன்றைய தினம், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து விளக்கம் கொடுத்து, முதல்வர் அணிக்கு தாவினார். மற்ற எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரையும், தகுதி நீக்கம் செய்து, 2017 செப்., 18ல், சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

Advertisement

எதிர்பார்ப்பு


அதை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்; வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. தினகரனை ஆதரித்தால், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற, ஆசையில் சென்றவர்கள், இருந்த பதவியை இழந்து, நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
19-செப்-201820:47:56 IST Report Abuse

rajan.  இப்படியே இன்னும் ஒரு வருஷம் ஓடி போய்டும். அப்புறம் என்ன ஒய்வு தான வந்து கூட்டிகிட்டு போய்டும். நாட்டுக்கும் மக்களும் இவிங்களுக்கு கொடுக்கிற சம்பளம் படி மிச்சம் கூடவே அந்த கட்டிங் பங்கீடும் மிச்சம் தான். க்ஷேமம் அஸ்து.

Rate this:
Senthil Kumar - Trichy,இந்தியா
19-செப்-201820:19:49 IST Report Abuse

Senthil Kumarமன்னர் ஆட்சியிலாவது நல்ல மன்னர் கிடைக்க வாய்ப்புண்டு .. மக்களாட்சியில் நல்ல மக்கள் தலைவன் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது

Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
19-செப்-201817:14:03 IST Report Abuse

பிரபு"அ.தி.மு.க நொண்டிக்குதிரை ஆகி ஓராண்டாச்சு" - ன்னு செய்தி தலைப்பு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X