சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கள்ளக்காதல்' அபிராமியுடன் ஒப்பிடாதீங்க: 'டிவி' நடிகை நிலானி ஆதங்கம்

Added : செப் 19, 2018 | கருத்துகள் (18)
Advertisement
'கள்ளக்காதல்' அபிராமியுடன் ஒப்பிடாதீங்க: 'டிவி' நடிகை நிலானி ஆதங்கம்

சென்னை சென்னை, வளசரவாக்கத்தில் வசிப்பவர், நிலானி, 36; தொலைக்காட்சி நடிகையான, இவரது காதலர் காந்தி லலித்குமார். இவர், இரு தினங்களுக்கு முன், தீக்குளித்து இறந்தார். இவரது மரணத்திற்கு, நிலானி தான் காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, நிலானி அளித்த பேட்டி:என் பெற்றோர் இறந்து விட்டனர். அண்ணன், தம்பி என, எவரும் இல்லை. கணவர், வேறொரு பெண்ணுடன் சென்று விட்டதால், இரு குழந்தைகளுடன், தனியாக வசித்து வருகிறேன். 'டிவி' தொடர்களில் நடித்து வருகிறேன்.மூன்று ஆண்டுகளுக்கு முன், மதுரவாயலில், நாங்கள் வசித்த வீட்டருகே, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, காந்தி லலித்குமார், வாடகை வீட்டில் தங்கி இருந்தார். உதவி இயக்குனர் என, அறிமுகமானார். எனக்கு படப்பிடிப்பு இருக்கும் நாட்களில், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, மீண்டும் கூட்டி வருவது என, உதவிகள் செய்தார். எங்களுக்கு பாதுகாப்பாக இருப்பது போல செயல்பட்டார். இதனால், அவருடன் நட்பு ஏற்பட்டது.ஒரு கட்டத்தில், 'திருமணம் செய்து கொள்ளலாம்' என்றார்; மறுத்தேன். எனக்கும், சில நபர்கள் தொல்லை தர துவங்கினர். அதனால், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். நானும், காந்தி லலித்குமாரும், திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் பழகியது உண்மை. ஆனால், சமூகம் நினைப்பது போல, எங்களுக்குள் எந்த உறவும் நடந்தது இல்லை; திருமணமும் செய்யவில்லை.கடந்த, 2016ல், நாங்கள் ஒரு குறும்படம் எடுத்தோம். அதற்காக, இருவரும் படுக்கையில் இருப்பது போன்று படம் எடுத்தோம். அதை அனுமதி இன்றி, என், 'பேஸ்புக்' பக்கத்தில், 'ஐ லவ் யு மாமா' என, எழுதி, அவர் தான் பதிவு செய்தார். இதனால், எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.அவரது மொபைல் போனை ஆராய்ந்த போது, என்னை போன்று, பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அதுபற்றி கேட்டபோது, 'ஆமாம்' என்றார். இதனால், அவரை விட்டு பிரிந்து, வளசரவாக்கத்தில் குடியேறினேன்; அங்கேயும் வந்து தொல்லை கொடுத்தார். வலுக்கட்டாயமாக, தாலி கட்ட முயற்சி செய்தார்; மறுத்ததால் அடித்தார்.'குழந்தைகளை கொன்று விடுவேன்' என, மிரட்டினார். அவரால் நரக வேதனை அனுபவித்துள்ளேன். படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு வந்து, தொல்லை கொடுத்தார். மனநோயாளி போல் நடந்து கொண்டார். பெண்களின் தொடர்பை, துண்டிக்கவே இல்லை. இப்படிப்பட்ட ஒருவரை, எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்?ஆனால், அவர் எதார்த்தமாக, என்னுடன் எடுத்த படங்களை, 'பேஸ்புக்'கில் பதிவு செய்து, 'நிலானி என் மனைவி' என, கூறி வந்தார். மயிலாப்பூரில் படப்பிடிப்பு நடந்தபோது, '10 நிமிடத்தில் வர வேண்டும். மறுத்தால், தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டினார். அதனால், போலீசில் புகார் அளித்தேன். போலீசார், அவரை எச்சரித்து அனுப்பினர்.என்னை, குன்றத்துாரில் இரண்டு குழந்தைகளை கொன்ற, அபிராமியுடன் ஒப்பிடாதீர்கள். காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு, நான் காரணம் அல்ல. என்னை பற்றி, அவதுாறு பரப்புவோர் மீது, கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு நிலானி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-செப்-201803:37:30 IST Report Abuse
meenakshisundaram சரியே, ஏனென்றால் அபிராமி பிறரை கொன்றார், நீங்கள் அவ்வாறில்லை, பிறரின் இறப்பிற்கு ஒரு வேளை தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்றே கருத வாய்ப்புள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-செப்-201811:13:51 IST Report Abuse
Lion Drsekar அம்மா தாயே உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது நீங்கள் யாருடனும் எப்படி வேண்டுமானாலும் வாழமாம் என்று எதற்க்காக இந்த ஒரு செய்தி, வாழ்க உங்கள் சேவை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
22-செப்-201807:10:42 IST Report Abuse
anand ரெண்டும் ஒண்ணு தான்..காசுக்கும் சுகத்துக்கும் எதையும் செயும் பித்தர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X