முஸ்லிம்கள் இல்லாமல் இந்து நாடு இல்லை: மோகன் பகவத்

Added : செப் 19, 2018 | கருத்துகள் (60)
Advertisement
ஆர்எஸ்எஸ், மோகன் பகவத், முஸ்லிம்கள், இந்து ராஷ்ட்ரா, இந்துத்வா, வேற்றுமையில் ஒற்றுமை, இந்து நாடு, 
RSS, Mohan Bhagwat, Muslims, Hindu Rashtra, Hindutva, Unity in Diversity, Hindu Country,

புதுடில்லி: '' முஸ்லிம்கள் இல்லாமல் இந்து ராஷ்ட்ரா எனப்படும் இந்து நாடு இல்லை. இந்துத்வா என்பதே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.


சிறுபான்மையினருக்கு எதிரானவர்களா?

டில்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் 2வது நாள் கூட்டத்தில், மோகன் பகவத் பேசியதாவது:


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. அத்துடன் அரசியல் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ்., மாற்ற முயற்சிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அனைவரும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றே நாங்கள் கருதுகிறோம்.

அரசியல் சட்டத்தை மீறி ஆர்.எஸ்.எஸ்., எப்போதும் செயல்பட்டது இல்லை. மதச்சார்பின்மை, சோசலிசம் போன்ற வார்த்தைகள் அரசியல் சட்டத்தில் பிற்காலத்தில் தான் சேர்க்கப்பட்டன. அவை தொடர்ந்து நீடிக்கின்றன.



இந்துத்வா என்றால் என்ன?

இந்து ராஷ்ட்ரா அல்லது இந்து நாடு என்பது எந்த ஒரு சமூகத்தையோ அல்லது நம்பிக்கையையோ பாகுபாடு பார்ப்பது அல்லது நிராகரிப்பது இல்லை. இந்து ராஷ்ட்ரா என்றால் முஸ்லிம்களுக்கு இடம் இல்லை என்ற அர்த்தம் இல்லை. அப்படி ஒருவேளை அமைந்தால் அது இந்துத்வாவாக இருக்காது.

இந்துத்வா, உலகமே ஒரு குடும்பம் என்பதை பேசுகிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய நோக்கம் சமூகத்தை ஒருங்கிணைப்பது தான். எனவே தான் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அரசியல் கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் கட்சிகளில் சேரவோ, தேர்தலில் போட்டியிடவோ அனுமதி இல்லை. குறிப்பிட்ட கட்சியில் தான் சேர வேண்டும் என தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.



அரசுக்கு உத்தரவிடவில்லை

யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த ஆட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு ஒரு கருத்து உண்டு. அதற்கு ஜனநாயக ரீதியில் தான் நடவடிக்கை எடுக்கிறோம். அரசியலில் இருந்து நாங்கள் விலகி இருப்பதால், சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட தேசிய பிரச்னைகள் குறித்து பேச கூடாது என்று அர்த்தம் கொள்ள கூடாது.

அரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைமை உத்தரவு பிறப்பிக்கிறது என்பதில் உண்மை இல்லை. மக்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவை இல்லை. நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம். அதிகார மையம் என்பதை அரசியல் சட்டம் தான் முடிவு செய்கிறது.


இவ்வாறு பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-செப்-201817:18:36 IST Report Abuse
Malick Raja இவருக்கு தெரியும் சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு சின்னம் மும்பையில் இருப்பது 70.ஆயிரத்தில் 49.ஆயிரம் இந்திய முஸ்லீம் பெயர்கள் இன்றும் காணப்படுகிறது . தேசிய கொடியை வடிவமைத்தது ..போன்றதெல்லாம் இந்தியர்கள் முஸ்லீம் பெயரிதானே .. முஸ்லிம்கள் என்பது வழிபாட்டுமுறை மாற்றம் மட்டும் தான் .. மதம் என்று மதம்பிடித்தவன் சொல்வது மதம்பிடித்தால் அடக்க பாகனுக்கும் தெரியும் .. .. 124.கோடி இந்திய மக்கள் ஒற்றுமை என்னும் கயிற்றை கவனத்துடன் பிடித்துக்கொண்டிருக்கையில் எவ்வளவுதான் முயன்றாலும் வெல்வது இந்திய மக்களின் ஒற்றுமை மட்டுமே
Rate this:
Share this comment
Cancel
Advaiti - Chennai,இந்தியா
20-செப்-201812:33:42 IST Report Abuse
Advaiti Seetharaman Jayaraman 15 hrs · இரு மதங்களும் இறைவனை 5-6 காலங்கள் பூஜிக்கின்றன அவர்கள் ஒரே மாதத்தில் விரதத்தை மொத்தமாக முடித்துக்கொள்கிறார்கள், ஹிந்து மதம் மாதம் இரு ஏகாதசி என்று விரதம் இருக்கிறது பெண்களை குடும்பத்தின் சொத்தாக, பெருமையாக வைத்து காப்பதும் இரண்டிலும் மற்றவர்கள் எப்படியோ, பல முஸ்லீம் நண்பர்களும் ஹிந்து மத முறைப்படியே ஒன் டாய்லெட் போனாலும் நீரால் சுத்தம் செய்து கொள்கின்றனர் வானியல் படியே இஸ்லாத்திலும் பூஜை நாட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன அவர்களும் ஆகாசத்தையே பூஜிக்கிறார்கள், நம்மைப்போல் மெக்காவில் சென்று அந்த அறையையும் சுற்றி, சுற்றி பூஜிக்கிறார்கள் உருவ வழிபாடாக இன்னும் பல ஒற்றுமைகள், யாதும் ஊரே, யாவரும் கேளீர் நம்முடையது, எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே, வசுதேவ குடும்பகம் இப்படி பல. என் சாமி மட்டும் தான் சாமி, மத்தது சாத்தான், அத கும்பிடுகிறவன் பாவி எனும் போதுதான் பிரச்சினை. நம்மைப் பிரிக்க கூலிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இறைசக்தி இணைத்து வைக்கட்டும். உலகின் தலைமையால் மீண்டும் பாரதம் ஜொலிக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
20-செப்-201811:23:26 IST Report Abuse
J.Isaac இரட்டை வேடம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X