இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை: பாக்., ராணுவம் வெறிச்செயல்

Added : செப் 19, 2018 | கருத்துகள் (26)
Advertisement
காஷ்மீர், பாகிஸ்தான், ராணுவம்,எல்லை பாதுகாப்பு படை வீரர், நரேந்திர குமார், கழுத்தறுப்பு, கொலை

ஜம்மு: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்து கொன்றதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


மாயம்

காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் , நேற்று (செப்.,18) ரோந்து பணியில் ஈடுபட்ட, எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரியும் நரேந்திர குமார் என்பவர் மாயமானார். அவரை கண்டுபிடிக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ரோந்து பணியில், இணைந்து ஈடுபடுமாறு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.


கொடூர கொலை

சூரியன் மறைந்த பின்னர், இந்திய வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்ட போது, ராம்கார்க் செக்டார் பகுதியில், இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலி அருகே நரேந்திர குமாரின் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்திருந்ததையும் இந்திய வீரர்கள் கண்டுபிடித்தனர்.


உஷார்

இதனையடுத்து எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பணியில் உள்ள இந்திய வீரர்கள் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தீவிர விஷயமாக எடுத்துள்ள இந்திய அரசு வெளியுறவு அமைச்சகம், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இந்த விவகாரத்தை, பாகிஸ்தான் தரப்பிடம் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம், இருநாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
19-செப்-201821:36:20 IST Report Abuse
bal இதை ஐநா பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது...ஐநா ஒரு மிஷனரி கூட்டம்.... அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
19-செப்-201820:36:24 IST Report Abuse
 ஈரோடுசிவா என் நாட்டின் ஒரே ஒரு சகோதரனுக்காக எதிரியின் ஒருபட்டாலியனையே அழிக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
19-செப்-201820:23:14 IST Report Abuse
சமத்துவம் இம்ரான் கானுக்கு செம்பு தூக்கிய நம் நாட்டு ஊடகங்கள் எங்கே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X