அடுத்தடுத்து 67 வழக்குகள்: சுப்ரீம் கோர்ட் எரிச்சல்

Updated : செப் 19, 2018 | Added : செப் 19, 2018 | கருத்துகள் (22)
Advertisement
சுப்ரீம் கோர்ட், தம்பதி, விவாகரத்து

புதுடில்லி: பெங்களூருவை சேர்ந்த தம்பதி ஒருவர் மீது ஒருவர் அடுத்தடுத்து 67 வழக்குகளை பதிவு செய்ததை கண்டு சுப்ரீம் கோர்ட் எரிச்சலைடைந்தது. அவர்களின் விவகாரத்து வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.


கணவர் போட்ட 58 வழக்குகள்

பெங்களூருவை சேர்ந்த தம்பதிக்கு 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் சாப்ட்வேர் இன்ஜினியர்; மனைவி எம்.பி.ஏ., முடித்துள்ளார். இருவரும் அமெரிக்கா சென்றனர். 2009ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்; மனைவி கிரீன் கார்டு பெற்றுள்ளார்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் குழந்தையுடன் மனைவி பெங்களூரு திரும்பினார். சில மாதங்களில் கணவரும் பெங்களூரு வந்தார். அடுத்தது மனைவி மீது அவர் 58 வழக்குகள் பதிவு செய்தார்; கணவர் மீது மனைவி ஒன்பது வழக்குகள் பதிவு செய்தார்.


சமரச முயற்சி:



ஒரு ஆண்டாக இரண்டு பேரையும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் சுப்ரீம் கோர்ட் ஈடுபட்டது. அடுத்தடுத்து வழக்குகள் பதிவாக நீதிபதிகள் எரிச்சலைடைந்தனர். குறிப்பாக, குழந்தையை யார் பொறுப்பில் விடுவது என்பதில் தான் சிக்கல் நீடித்தது.

இத்துடன் அக்குழந்தை படிக்கும் பள்ளிக்கும் கணவரும், மனைவியும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினர். ஒரு கட்டத்தில் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் சஞ்சய் சிங் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.

விவகாரத்து பிரச்னையை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். குழந்தை படிக்கும் பள்ளிக்கு கணவர், மனைவி செல்லக் கூடாது. குழந்தை தொடர்பான அனைத்து விஷயங்களையும் பள்ளி நிர்வாகமே இருவருக்கும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
20-செப்-201818:19:51 IST Report Abuse
Gopi படித்த திமிரால் நல்ல ரத்தம் உள்ள வரை இந்த சனியன்கள் ஆடும் ஆட்டம் தொடரும். பாவம் அந்த குழந்தை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-செப்-201807:56:20 IST Report Abuse
Srinivasan Kannaiya அடுத்தது மனைவி மீது அவர் 58 வழக்குகள் பதிவு செய்தார் கணவர் மீது மனைவி ஒன்பது வழக்குகள் பதிவு செய்தார். எப்பிடி இந்நிலையில் ஒரு குழந்தையை பெற்று எடுத்தார்கள்........
Rate this:
Share this comment
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-201810:24:48 IST Report Abuse
Malimar Nagoreஅது பிறப்பதற்கு முன்...
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
20-செப்-201804:33:32 IST Report Abuse
meenakshisundaram தாய்மையை போற்றுதும் என்பது போயே விட்டது .பணமே முக்கியம் .கணவரும் குழந்தைகளும் இரண்டாம் பக்ஷமே போதாதற்கு கள்ள உறவுகள் ,எங்கே போகிறது இந்த பெண்களின் எண்ணங்கள் ?இந்த வழிகளில் செல்வார்கள் என்று அறிந்தே நம் முன்னோர்கள் பெண்களை 'சக்தி' என்று தூக்கி வைத்து அவர்களின் உண்மையான சக்தியை(?) அடக்கி வைத்துள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது.அடங்குவதோ இணங்கி போவதோ தாழ்வாகாது.அர்ப்பணிப்பு தான் பெற்ற மக்களுக்கு செயதால் valve இனிக்கும் ,இல்லையென்றால் நடிகர் Sivakumar கூறியதே போல குழந்தைகள் பெரும் முன்னரே விவாக றது பெற்றிருக்க வேண்டும்.கள்ளமறியா பிஞ்சு நெஞ்சங்களை பெற்ற பின்னர் வாட்டுவானேன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X