முதல்வரை கொல்ல சதி எம்.எல்.ஏ., 'பகீர்'

Added : செப் 19, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
அகர்தலா, : ''திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவை கொலை செய்ய, போதை பொருட்கள் கடத்தல்காரர்கள் சதித் திட்டம் தீட்டி உள்ளனர்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ரத்தன் சக்ரவர்த்தி தெரிவித்து உள்ளார்.திரிபுரா மாநிலத்தில், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், போதை பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தல் கும்பல்களை அடியோடு

அகர்தலா, : ''திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவை கொலை செய்ய, போதை பொருட்கள் கடத்தல்காரர்கள் சதித் திட்டம் தீட்டி உள்ளனர்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ரத்தன் சக்ரவர்த்தி தெரிவித்து உள்ளார்.திரிபுரா மாநிலத்தில், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், போதை பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தல் கும்பல்களை அடியோடு ஒழிக்க, மாநில அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆறு மாதங்களில் மட்டும், போதை பொருட்கள் கடத்திய, 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்வர் பிப்லப் குமார் தேவின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளால், போதை பொருட்கள் கடத்தல் கும்பல்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளன.இந்நிலையில் நேற்று, அகர்தலாவில், பா.ஜ., மூத்த தலைவரும், திரிபுரா மாநில, எம்.எல்.ஏ.,வுமான, ரத்தன் சக்ரவர்த்தி கூறியதாவது:சமீபத்தில், தென் கிழக்கு ஆசிய நாடான, மியான்மரில், போதை பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, கூலிப்படையினரை ஏவி, முதல்வர் பிப்லப் குமார் தேவை, கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி உள்ளனர்.இது குறித்த தகவலை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எங்களுக்கும், கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தகவல் கிடைத்தது.இவ்வாறு அவர் கூறினார்.முதல்வர் பிப்லப் குமார் தேவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி, திரிபுரா மாநில அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-செப்-201808:29:34 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் ஸ்டண்டா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X