பதிவு செய்த நாள் :
கோவாவில் ஆட்சியமைக்க காங்., தீவிரம்

பனாஜி,: 'கோவாவில் ஆட்சிஅமைக்க, எங்களுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது' என, காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கோவா,ஆட்சியமைக்க,காங்., தீவிரம்


கோவாவில், முதல்வர்மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 40உறுப்பினர்கள் அடங்கிய கோவா சட்டசபைக்கு, கடந்தாண்டு மார்ச்சில் தேர்தல் நடந்தது. இதில்,எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.


குற்றச்சாட்டு


காங்கிரஸ், 16இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், 14இடங்களை கைப்பற்றி, இரண்டாம் இடம் பிடித்திருந்த, பா.ஜ., கோவா பார்வர்டு கட்சி, மஹாராஷ்டிராவாதி கோமாந்த கட்சி

மற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சிய மைத் தது. முதல்வராக மனோகர் பரீக்கர் பதவியேற்றார்.கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுஉள்ள மனோகர் பரீக்கர், தற்போது, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.'

பரீக்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆறு மாதமாகவே நிர்வாகம் சரியாக நடக்க வில்லை' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்ய, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

பெரும்பான்மை ஆதரவு


இதற்கிடையில், காங்கிரஸ் மேலிடம், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது; இது பற்றி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான, சந்திரகாந்த் கவ்லேகர் கூறிய தாவது:சட்டசபை தேர்தலில் தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற காங்கிரசை தான், ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும். ஜனநாயக மரபுகளை மீறி, பா.ஜ., ஆட்சியை அமைத்தது.

முதல்வர் பரீக்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டு

Advertisement

உள்ளதால், மாநில நிர்வாகம் முடங்கியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான, பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.எங்கள் கட்சி உட்பட, 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தர முன்வந்துள்ளனர். யார் ஆதரவு தருகிறார் என, இப்போது கூற முடியாது. இது பற்றி கவர்னர் மிருதுளா சின்ஹாவிடமும் தெரிவித்துள்ளோம்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, பா.ஜ., கூட்டணி அரசுக்கு உத்தரவிட வேண்டும். விரைவில், கவர்னர் முடிவை அறிவிப்பார்என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil - coonoor,இந்தியா
20-செப்-201809:06:28 IST Report Abuse

tamilஅசந்த நேரத்தில் ஆட்சியை பிடிப்பதில் இரண்டு தேசிய கட்சிகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
20-செப்-201808:50:20 IST Report Abuse

தேச நேசன் சிறு மாநிலங்கள் பெரும்பாலும் மத்திய நிதியையும் திட்டங்களையும் சார்ந்துள்ளவை .எதிரி ....க்கட்சி ஆட்சி அழிவிலேயே விடும்

Rate this:
Karthik - Chennai,இந்தியா
20-செப்-201811:21:48 IST Report Abuse

Karthikகாங்கிரஸ் மத்தில் இருக்கும் போது உங்க BJP அரசு அழிந்து போய் விட்டது என்ன ? ...

Rate this:
20-செப்-201808:31:46 IST Report Abuse

GanesanMaduraiகான்கிரஸ் பிணம் கூட தின்னும் பதவிக்காக.

Rate this:
Karthik - Chennai,இந்தியா
20-செப்-201811:12:40 IST Report Abuse

Karthikபிஜேபி கட்சி பற்றி என்ன சொல்லவரீங்க ...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X