பழிவாங்கும் செயல்!| Dinamalar

பழிவாங்கும் செயல்!

Added : செப் 19, 2018
 பழிவாங்கும் செயல்!

பழிவாங்கும் செயல்!
சத்தீஸ்கர் மாநிலத்தில், அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அரசியல் பழிவாங்கும் செயல். இது, பா.ஜ.,வின் சர்வாதிகார ஆட்சியை வெளிப்படுத்துகிறது.ராகுல் தலைவர், காங்.,

எல்லாம் நடிப்பு!
ஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாணியை, தற்போதைய, தே.ஜ., கூட்டணி அரசு பின்பற்றவில்லை. உதட்டளவில் மட்டுமே, வாஜ்பாயின் கொள்கைகளை பின்பற்றுவதாக, பா.ஜ., கூறுகிறது. எல்லாமே நடிப்பு தான்.மெஹபூபா முப்திதலைவர், மக்கள் ஜனநாயகக் கட்சி

ஆதரவு தாங்க!

வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்திற்காகவும், முதலீட்டுக்காகவும், தொழில் துறைக்காகவும், வங்கிகளிடம் இருந்து, அரசுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. வங்கிகள் ஆதரவு தருகின்றன; ஆனால், மெதுவாக தருகின்றன.நிதின் கட்கரிமத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X