புதுடில்லி : முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறையை குற்றமாக்கும் அவசர சட்டம் இயற்றுவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, தலாக் கூறி விவாகரத்து பெற்றால், மூன்றாண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
முஸ்லிம்களில், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறை பின்பற்றப் படுகிறது. இந்த முறையை எதிர்த்து, பல்வேறு முஸ்லிம் பெண்கள் மற்றும் அமைப்புகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'முத்தலாக் முறை சட்ட விரோதம்' என, கடந்தாண்டு ஆகஸ்டில் தீர்ப்பு அளித்தது.இருப்பினும், முத்தலாக் முறை தொடர்ந்தது.
இதையடுத்து, முத்தலாக் கூறி, விவாகரத்து பெறுவதை குற்றமாக்கும் வகையில், புதிய சட்டம் இயற்ற, மத்திய அரசு முயன்றது. இதற்காக, முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, லோக்சபாவில், கடந்தாண்டு டிசம்பரில் நிறை வேறியது.ராஜ்யசபாவில், இந்த மசோதாவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்த மசோதா நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.
அமலுக்கு வரும்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான, மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.அதில், முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக அறிவிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதி பதியின் ஒப்புதலுக்குப் பின், இந்தச் சட்டம்அமலுக்கு வரும்.அமைச்சரவையின் முடிவு குறித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலை வருமான, ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
ஏற்கனவே உள்ள மசோதாவில் சிறுதிருத்தங் கள் செய்யப்பட்டு, இந்த மசோதாவை அவசர சட்டமாக அறிவிப்பதற்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த
மசோதாவின்படி,முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றால், மூன்றாண்டு வரை சிறைத்
தண்டனை விதிக்க முடியும்.மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிலேயே
குழந்தைகள் இருக்க வேண்டும். அந்தப் பெண் மற்றும் குழந்தைகளுக் கான
பராமரிப்பு செலவை, கணவன் அளிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட
பெண் அல்லது அவரது நெருங்கிய ரத்த உறவுகள் மற்றும் நெருங்கிய திருமண
உறவுகள் புகார் அளித்து, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை,
போலீசார் பதிவுசெய்யலாம்.
உடனடி விவாகரத்து
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப் படையிலேயே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாமின் அளிப்பது குறித்தும், மாஜிஸ்தி ரேட் நீதிமன்றங்கள் முடிவுசெய்யலாம். வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமா கவோ அல்லது இ - மெயில் போன்ற மின்னணு முறை மூலமாகவோ, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவோ, தலாக் கூறி, உடனடி விவாகரத்து பெறுவது குற்றம் என, அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
'வாட்ஸ் ஆப்பில் தலாக்'உதவி கேட்கும் மனைவி
தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த ஹூமா சாய்ரா, 29, என்பவருக்கும், அரபு நாடுகளில் ஒன்றான, ஓமனைச் சேர்ந்த, 62 வயது நபருக்கும், கடந்த ஆண்டு திருமணமானது. சில மாதங்களுக்கு முன், இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை பிறந்து, இறந்தது.உடல் நிலை பாதிக்கப்பட்ட ஹூமா, சொந்த ஊரான ஐதராபாதுக்கு, சமீபத்தில் வந்தார். அப்போது, அவரது கணவர், சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் முத்தலாக் கூறி, விவாகரத்து செய்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த ஹூமா, வெளியுறவு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜிடம் உதவி கோரியுள்ளார்.
ஓட்டு வங்கிக்காக எதிர்ப்பு!
காங்.,
கட்சியின் தலைவராக இருந்த சோனியா,
ஒரு பெண்ணாக இருந்தும், பெண்களுக்கு
எதிரான இந்தகொடூரமான முறையை எதிர்க்கும் சட்டத் துக்கு எதிர்ப்பு
தெரிவித்து உள்ளனர். வெறும் ஓட்டு வங்கிக்காக, இந்த எதிர்ப்பை அவர்கள்
தெரிவித்து உள்ளனர். முஸ்லிம் பெண்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கும் வகையில்,
இந்த மசோதாவுக்கு ஆதரவுஅளிக்க வேண்டும் என,சோனியாவை வலியுறுத்துகிறேன்.
ரவிசங்கர் பிரசாத் மத்திய அமைச்சர், பா.ஜ.,
தலாக் கூறி விவாகரத்து பெறுவதை குற்ற மாக்கும் வகையில், அவசர சட்டம் இயற்றி உள்ளது, வரவேற்கக் கூடிய அறிவிப்பு. மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். இது, முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.இனியாவது,இது போன்ற கொடுமை நடைபெறாமல் இருப்பதை, முஸ்லிம் மதத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இஷ்ரத் ஜகான்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்
'அரசியல் செய்கிறது மோடி அரசு'
தலாக் அவசர சட்டம் குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர், சுர்ஜேவாலா கூறியதாவது: தலாக் கூறி விவாகரத்து பெற்றவரை சிறை யில் அடைத்தால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, யார் நிவாரணம் அளிப்பர் என, ஏற்கனவே கேள்வி எழுப்பினோம். தலாக் கூறி, விவா கரத்து பெறுபவரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என, வலியுறுத்தினோம்.
இந்த பிரச்னையில்,பாதிக்கப்படும் பெண்ணுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என, விரும்பி னோம். ஆனால், தலாக் பிரச்னையை ஒரு அரசியல் கால்பந்தாகவே, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயன் படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வெட்கப்பட வேண்டும்!
வரலாற்று சிறப்புமிக்கதாக,இந்த அவசர சட்டம் அமைந்துள்ளது.அதே நேரத்தில், ஓட்டு வங்கிக் காக,இத்தனை ஆண்டுகளாக, முஸ்லிம் பெண்கள் இந்தக் கொடுமையை அனுபவிக்க காரணமாக இருந்தஅரசியல் கட்சிகள்,வெட்கப் பட வேண்டும்.அமித் ஷாதேசிய தலைவர், பா.ஜ.,
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (26)
Reply
Reply
Reply