பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கில ஊர் பெயர்களை மாற்ற முயற்சி

Updated : செப் 20, 2018 | Added : செப் 19, 2018 | கருத்துகள் (52)
Advertisement
ஆங்கில ஊர் பெயர்களை மாற்ற முயற்சி

சென்னை : தமிழகத்தில், ஆங்கிலேயர் உச்சரிப்புடன் உள்ள ஊர் பெயர்களை மாற்றும் பணியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில், 220 சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்களை, தங்களின் வசதிக்கேற்ப, அவர்கள் மாற்றினர். இதனால், பராம்பரியமிக்க பெயர்கள் கூட, அர்த்தம் இழந்துள்ளன. எனவே, இதுபோன்ற பெயர்களை, தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற மாற்றும் பணியில், தமிழ் வளர்ச்சித்துறை ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், திருவல்லிக்கேணி, தஞ்சாவூர், துாத்துக்குடி என்ற ஊர் பெயர்கள், டிரிப்ளிகேன், டேஞ்சூர், டூட்டிகோரின் என, ஆங்கிலேயரின் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்பட்டன. அவற்றை தமிழில் உள்ளது போல, ஆங்கிலத்திலும் மாற்ற வேண்டியுள்ளது.

சென்னையில், 'ஹால்ஸ் ரோடு' என்பது, தமிழ்ச்சாலை என, மாற்றப்பட்டுள்ளது. இதைப்போல, முதல்கட்டமாக, சென்னையில் உள்ள, 220 சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும், இத்திட்டத்தை செயல்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் தலைமையில், ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது. தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்த குழுவினர், மாற்ற வேண்டிய பெயர்களின் பட்டியலை அளிப்பர்.

இதை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையிலான, உயர்மட்ட குழு ஆய்வு செய்யும். பின், பெயர் மாற்றம் செய்து, புத்தகமாக வெளியிட்டு, அரசின் நிர்வாகத் துறைகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Iyengar - Srivilliputtur,இந்தியா
26-செப்-201815:54:07 IST Report Abuse
Ramesh Iyengar முதல்ல ஸ்டாலின் அப்படிங்கற பெற மாத்தச்சொல்லுங்க... "திராவிடம்" அப்படிங்கறது தமிழ் வார்த்தையில்லை.. " தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள, வதனம், திலகம், தெக்கணம், வாசனை, போன்ற வார்த்தைகள் எல்லாம், சம்ஸ்கிருத மொழிச்சொற்கள்... தமிழ்த்தாய் வாழ்த்தையே மாத்துங்க முதல்ல...
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
25-செப்-201805:42:21 IST Report Abuse
 Muruga Vel ஸ்டாலின் ....க்ளவுட் நைன் ... சன் டீவி ...ஆதித்யா ...உதய நிதி ...கருணா நிதி ...
Rate this:
Share this comment
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
25-செப்-201804:47:46 IST Report Abuse
tamilvanan ஹால்ஸ் ரோட் என்பது எல்லாம் சரித்திர பெயர்கள். இதை எல்லாம் மாற்றுவது வரலாற்றை மாற்றுவது போல. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டார்கள் என்பதை மாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
26-செப்-201817:42:35 IST Report Abuse
Jaya Ramஅப்போ தமிழ்நாடு என்பது தனிநாடு தானே அதுதானே சரித்திரம் அதை இல்லாத ஒருநாட்டுடன் இணைத்து ஏன் இந்தியா என்கிறீர்கள் மாற்றம் என்பது காலத்தின் சூழல் அதை நீங்களோ நானோ ஒன்றும் செய்ய முடியாது, தமிழனாக முன்னூறு வருடங்களுக்கு முன்னர் இருந்தோம் ஆனால் இந்த வெள்ளையர்களை எதிர்க்க நாம் இந்த உபகண்டத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்பட்டோம், அன்று ஒரு காந்தி, ஒரு ஜின்னா இருந்ததுபோல் தமிழ் நாட்டில் நம்மை தலைமை தாங்கியவர்கள் இல்லை, அதனால் சுதாரித்த ஜின்னா தனிநாடு கேட்டு பெற்றுவிட்டார் வடஇந்தியர்களின் தலைமை ஏற்ற தமிழர்கள் தமிழ்நாட்டை காங்கிரஸ் கட்சி என்றபெயரில் இம்மக்களை வடவர்களுக்கு அடிமைகளாக்கி விட்டனர் அன்றிலிருந்து நமக்கு இருப்பதையெல்லாம் இழந்துகொண்டுதான் இருக்கிறோமே தவிர நம்மை வளப்படுத்த முடியாதபடி இந்த அரசியல்வாதிகள் ஆக்கிவிட்டார்கள். எனவே மாற்றங்களை எதிர்கொள்ளுங்கள் முடிந்தவரை நம்மை நாமாக மாற்ற முயற்சி செய்யுங்கள் இல்லையேல் உங்கள் அடையாளங்களை இழந்துவிடுவீர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X