அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரசிகர்களுக்கு ரஜினி அடுத்தடுத்து எச்சரிக்கை

சென்னை : ரசிகர் மன்றத்தினருக்கு, நடிகர் ரஜினி, அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஏற்கனவே, 'காரில் மன்ற கொடியை கட்டக் கூடாது' என,உத்தரவிட்டு இருந்த ரஜினி, தற்போது, 'சமூக ஊடகங்களில், தவறான தகவல் பரப்புவோருடன், ரசிகர்கள் தொடர்பு கொள்ளக் கூடாது' என, எச்சரித்து உள்ளார்.

ரசிகர்களுக்கு, ரஜினி, அடுத்தடுத்து,எச்சரிக்கை


நடிகர் ரஜினி,அரசியல் கட்சி துவக்க திட்டமிட்டு உள்ளார். அதற்குமுன், ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தி, நிர்வாகிகளை

அறிவித்து வருகிறார். மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: ரஜினி மக்கள் மன்றத்தில் எடுக்கப் பட்டு வரும், ஒழுங்கு நடவடிக்கைகள், நிர்வாகி களின் நியமனம் என, அனைத்தும், ரஜினி ஒப்புத லோடு தான் அறிவிக்கப்படுகின்றன.


ரஜினிக்கு தெரியாமல் நடவடிக்கை எடுப்பதாக, மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட சிலர், சமூக ஊடகங்களில், வதந்தி பரப்புகின்றனர். இது, ரஜினியை கடும் கோபம் அடைய செய்துள்ளது.எனவே, 'இதுபோன்றோரிடம், மன்ற உறுப்பினர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

'வாட்ஸ் ஆப்' குழுக்களில்,தவறான தகவல் பரப்புதல், தனி நபர் தாக்குதல் போன்ற செயல்களை ஏற்க மாட்டேன். இத்தகையோரை, மன்றத்தில் இருந்து, உடனே நீக்குவேன்' என்று, ரஜினி

Advertisement

எச்சரித்து இருக்கிறார். இதுபோன்று செயல்பட்டு, ரஜினி யின் கோபத்திற்கு ஆளானோர், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

'அவர்களை, வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து, உடனே நீக்க வேண்டும்' என்றும், 'மன்றம் சம்பந்தப்பட்ட வலைத்தள குழுக்களில், மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே இருக்க வேண்டும்' என்றும், தற்போது கூறியிருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
26-செப்-201816:32:53 IST Report Abuse

Sampathkumar Sampathஇப்பிடியே மங்களம் பாடிகிட்டே இவங்க சம்பாரிச்சுக்கிட்டே போயிட்டே இருப்பாங்க. நம்ம மக்கள் ஆ ...ஆ .ஆ னு வாய பொளந்துக்கிட்டு வெடிக்க பாத்துகிட்டே பக்கத்துல இருக்கிற துட்டு எல்லாம் உட்டுட்டு கோவணத்தை மட்டும் இறுக்கி புடிச்சுகிட்டு எதோ கனவுல கண்டவன் வெளியில சொல்ல கூடாதுன்னு நாசமா போக வேண்டியதுதான்.

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
20-செப்-201816:34:42 IST Report Abuse

sahayadhasஇவரு கிட்ட நிறைய தகுதி குறைவு இருக்குது 1 . தள்ளாடிய பருவம் 2. Tax கட்ட தவறியது. 3 . நிதானமற்ற பேச்சு 4. தன்னிச்சையான முடிவு இல்லை 5. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி (இமயமலை) 6. சேர்த்த பணம் செலவழிந்து விடுமோ? 7.1996 ஐ தவற விட்டது. 8. தீராத கோபம் 9. நிருபர்களிடம் நிதானமின்மை 10. தற்காலிக முடிவுக்கும் கூட இறைவனை கேட்க வேண்டும் என்று சமாளிப்பார் 11. இப்படி தேவையற்ற எச்சரிக்கை .......

Rate this:
Karthick Bala - bangalore,இந்தியா
20-செப்-201815:11:30 IST Report Abuse

Karthick Balaஇந்த கொள்கை பத்தி பேசரவங்க எல்லோரும் அண்ணனோட தும்பிகளா தான் இருப்பாங்க, எப்படின மற்ற கட்சிக்காரர்கள் அவங்க கட்சியோட கொள்கையும் அது எந்த அளவுக்கு படுத்தபடுதுனு தெரியும்..

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X