கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 குட்டு,ஹெல்மெட்,விவகாரத்தில்,அரசு,மெத்தனம்,ஏன்

சென்னை : ஹெல்மெட் அணிவது குறித்து 2015 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். மேலும் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கோர்ட் இன்று (20 ம் தேதி ) உத்தரவிட்டது.
'இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணியவும் கார்களில் செல்வோர் 'சீட் பெல்ட்' அணியவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டுவது ஏன் என்றும் அரசுக்கு 'குட்டு' வைத்துள்ளது.
சென்னை கொரட்டூரை சேர்ந்த, ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு:மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களில் செல்வோர் சீட் பெல்ட்; இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும். ஆனால் இந்த சட்ட விதி முறையாக அமல்
படுத்தப்படவில்லை. இதனால் விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, விதிகளை
கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் இந்த மனு

விசாரணைக்கு வந்தபோது 'இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு பிறப்பித்த உத்தரவு ஏன் தீவிரமாக அமல்படுத்தப் படவில்லை; அதை அமல்படுத்த, அரசு எடுத்தநடவடிக்கைகள் என்ன; வெறுமனே உத்தரவு பிறப்பித்ததுடன் அப்படியே இருந்து விட முடியாது' என அதிருப்தி தெரிவித்திருந்தது.

மனுவுக்கு விரிவாக பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்தார்.அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2013ல் இருந்து, 2018 ஜூலை வரை, ஹெல்மெட் அணியாமல் சென்ற வகையில் 15லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; 13.20 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. சீட் பெல்ட் அணியாததற்காக, 2..92லட்சம் வழக்குகள் பதிவு

செய்யப்பட்டன;3..66 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் மீதும், வழக்குப் பதிவு செய்யும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் 2018 ஜூலையில் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: 'இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும்' என, சட்டத்தில் கூறப்பட்டிருந் தும், அதை அரசு முழுமையாக அமல்படுத்த
வில்லை. சட்டத்தை அரசு உத்தரவை முழுமையாக அமல்படுத்த

வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.

போலீசார் பலர், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வதையும், அதிகாரிகள் சீட் பெல்ட் அணியாமல் இருப்பதையும் பார்க்கிறோம். கட்டாய ஹெல்மெட் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் எந்த அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள்?

சட்டத்தில் இருப்பதை தான் அமல்படுத்தும்படி கூறுகிறோம்.

எப்போ பாயுமோ


இரு சக்கர வாகனத்தை ஓட்டுவோரும், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்பது மட்டும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கட்டாயமல்ல; இரு சக்கர வாகனம் விற்கும்போதே, ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என்பதையும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது.ஆனால் எந்த இரு சக்கர வாகனங்களை விற்கும் போது ஹெல்மெட்டையும் சேர்த்து விற்பதில்லை; ஹெல்மெட் வாங்கினால் தான் வண்டி என நிர்ப்பந்திப்பதும் இல்லை. சட்டப்படி செயல்படாத விற்பனை நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை பாயும் என தெரியவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
20-செப்-201820:12:08 IST Report Abuse

sampath, kHelmet issue judgement would have been based on the majority of people's view. Rules and regulations and law in this issue will be negative thought among the people about judge & police personnel

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-செப்-201819:47:28 IST Report Abuse

Natarajan Ramanathanமணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் இருவருக்கும் எனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இதுவரை ஹெல்மெட் அணிந்தே வண்டி ஓட்டிய நான் இனிமேல் அணியாமல் (சர்தார்ஜி போல் டர்பன் அணிந்து) ஓட்டுவேன்.

Rate this:
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
20-செப்-201819:23:48 IST Report Abuse

M S RAGHUNATHANஇ am amazed by the ruling/observation of High court regarding wearing of helmet and haste with which the judge is advising/ordering the police for strict implementation. If only the judges of High Court show the same speed and positive attitude to the following things the common citizen will begrateful. 1. Visit in cognito to Government Hospitals and see by themselves the atrocities committed by all employees from top to bottom and see for themselves the hygenic conditions in spite of employment of large force of workers and suo moto direct the Government to dismiss the delinquent employees. Some years ago a news item came a large junk of doctors posted to Govt hospitals and primary health centres in Vellore just went to the hospital in the morning, signed the attendance nd returned to Chennai immediately to attend their private practice. Has the judges asked the Govt as why exemplary punishment such derecognising their degrees and bar them practice. 2. Why not judges direct the Govt to submit a data on details of corruption cases pending against the employees a nd direct the govt to finish the cases within 3 months and impose severe punishment such as withholding the promotion for ever. If there are corruption cases in High Court why the judges are going on giving adjournments after adjournments and dilute the cases themselves. 3. Are the judges aware of the travails of people using auto, who non chalantly refuse to operate the meter. Why not the judges straight away impose fine on the police officers from cons level to Commissioner level for not regulating the auto drivers. The share autos again are a law unto themselves. Where as only 7 persons are to be allowed 12 persons are travelling. Let the judge visit vantage points such as Poonamallee, Ambattur, Koyambedu and see this. For this also the police and RTO are responsible. Why not take action against them. 4. The schools and colleges ( Private ) are charging exorbitant fees under various heads. Will any judge look onto this. They need not worry because their children and grand children get into best of colleges and schools because their influence. Can any judge refuse this. I can go on giving examples. First let the judges come down to reality and start imposing exemplary punishments on all govt employees who are found guilty/charged with derliction of duty including the court staff then force the helmet rule.

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X