அமைதி பேச்சுவார்த்தை: இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு

Updated : செப் 20, 2018 | Added : செப் 20, 2018 | கருத்துகள் (43)
Advertisement
இம்ரான் கான், பிரதமர் மோடி, பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை, இம்ரான் கான் கடிதம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  சுஷ்மா ஸ்வராஜ், மஹ்மூத் குரேஷி,  பதன்கோட் விமானப்படைத் தள தாக்குதல், பயங்கரவாதிகள் தாக்குதல் ,  இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை,பாகிஸ்தான் , சுஷ்மா சுவராஜ், சுஷ்மா, Imran Khan, Prime Minister Modi, Pakistani peace talks, Imran Khan letter, Pakistani Prime Minister Imran Khan, Sushma Swaraj, Mahmud Qureshi, Pathankot's Air Force attack, Terrorists attack, Pakistan, Sushma Swaraj, Sushma,india-Pakistan peace talks,

இஸ்லாமாபாத் : இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் இம்மாதம் நடைபெற உள்ள ஐநா.பொதுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் சுஷ்மா சுவராஜூம், பாகிஸ்தான் சார்பில் மஹ்மூத் குரேஷியும் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இம்ரான் கான் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக இம்ரான் கான் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஐநா.சபையின் கூட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தைக்கு எந்த வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற போது பிரதமர் மோடி சார்பில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2015ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்ததையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
20-செப்-201817:39:49 IST Report Abuse
ravichandran பேச்சுவார்த்தைக்கு என்னப்பா இருக்கு அவன் பாட்டுக்கு அவன் நாட்டுல அவன் சோளிய பார்த்தா ஏதுய்யா பிரச்னை
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-செப்-201817:18:10 IST Report Abuse
Endrum Indian வங்கியில் கடன் கேட்கப் போனால் அதற்கு உத்தரவாதமாக இதை வை அதை வை என்று சொல்வார்களே அதே போல பாகிஸ்தான் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூப்பிட்டால் நாம் அவர்களிடம் உத்தரவாதம் இந்த மாதிரி கேட்க வேண்டும் - 1 )காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம், ஆகவே அதை பற்றி நாங்கள் ஒருக்காலும் பேசமாட்டோம், 2 ) நாங்கள் தீவிரவாதிகளை எந்த காலத்திலும் இந்தியாவின் உள்ளே பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் அனுப்பமாட்டோம். இந்த இரண்டுக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம். இந்த உத்தரவாதம் மீறப்பட்டால் நீங்கள் "Pakisthan Occupied Kashmir-ஐ நாங்கள் உங்களுக்க்காக விட்டுக்கொடுக்கின்றோம், என்று அதில் விளக்கமாக எழுதியிருக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே நாம் அவர்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
20-செப்-201815:12:57 IST Report Abuse
Anand முதலில் உனது ராணுவம், உனது தீவிரவாதிகள், போன்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்கா போன்ற நாடுகளிடம் எப்படியெல்லாம் பிச்சை எடுத்து காலம் தள்ளவேண்டும் என்று முடிவுக்கு வரவும். கூடவே உனது நாட்டை நீங்கள் வளர்த்த சொறிநாய்களிடமிருந்து காப்பாற்ற பார், மிச்சமீதி இருந்தால் பொறவு பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X