பொது செய்தி

இந்தியா

அதிநவீன அறையில் பிஷப்பிடம் விசாரணை; கைது எப்போது ? டி.ஜி.பி. பதில்

Updated : செப் 20, 2018 | Added : செப் 20, 2018 | கருத்துகள் (58)
Advertisement
பாலியல், பலாத்காரம், பிஷப், விசாரணை, பிரான்கோ முல்லக்கல்,  பிஷப் பிரான்கோ முல்லக்கல்,  கேரள கிரைம் பிராஞ்ச் போலீஸ் ,  அதி நவீன அறையில் விசாரணை, 
Rape, bishop investigation, Franco Mullackal, Bishop Franco Mullackal, Kerala Crime Branch Police, Inquiry In The Modern Room,

கொச்சி: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ முல்லக்கலிடம், கேரள போலீசார் நேற்று, ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம், 150 கேள்விகள் கேட்கப்பட்டன.

கொச்சி அருகே திருபுனித்துரா என்ற இடத்தில் உள்ள கிரைம் பிராஞ்ச் போலீஸ் அலுவலகத்தில் பிஷப் நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார். அந்த அலுவலகத்தில், பிரபலமான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த அதி நவீன அறை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறையின் சுவர் முழுவதும் கண்ணாடியில் அமைக்கப்பட்டுள்ளது. வெளியே இருந்து சத்தமோ, வெளிச்சமோ உள்ளே நுழையாது. முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. விசாரணைக்கு வரும் நபர் சவுகரியமான இருக்கையில் அமர வைக்கப்படுவார். அவருக்கும், விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகள் இருக்கும் இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கும்.

யார் கேள்வி கேட்கிறார் என்பதை குற்றம் சாட்டப்பட்ட நபர் அறிய முடியாது. அந்த நபரின் அனைத்து செயல்களும் சிசி டிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும். இப்படி தான் பிஷப் முல்லக்கலிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. 150 கேள்விகள் கேட்கப்பட்டன. பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருந்துள்ளார்.
கைது குறித்து டி.ஜி.பி. பதில்

இவர் கைது செய்யப்படுவாரா என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா விடம் கேட்டபோது; " பிஷப்பை கைது செய்வதில் சட்டச்சிக்கல் ஏதுமில்லை. மேலும் ஒரு முன்ஜாமின் மனு நிலுவையில் இருக்கும்போதும் கைது செய்யக்கூடாது என்று சட்டத்தில் ஏதும் சரத்துக்கள் இல்லை. இருப்பினும் தேவைப்பட்டால் சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி இன்றோ, நாளையோ கைது குறித்து முடிவு செய்யப்படும் " என்றார்.விடுவித்தது வாடிகன்

இதற்கிடையில் , கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பிரான்கோ முல்லக்கல்லை, பிஷப் பதவியிலிருந்து, வாடிகன் தற்காலிகமாக விடுவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shroog - Mumbai ,இந்தியா
22-செப்-201810:37:41 IST Report Abuse
Shroog Those who did mistake should be punished. We Christian's wanted to give death penalty to that man (he is not father, priest or bishop anymore). All hindu fris unite together to give him severe punishment. But one thing do not hurt our christianity. If so, Gods punishment is there. You are allowed to throw stone on the culprit but not on the our beliefs. Decently I am requesting here.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-செப்-201801:03:46 IST Report Abuse
Mani . V திருமுருகன் காந்தியை சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்கவில்லை. "மல்லையாவுக்கு அதிநவீன சிறைச்சாலை, பிஷப்பிடம் அதிநவீன அறையில் விசாரணை". என்னதான் நடக்கிறது? என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. (எதுக்கும் ஒரு வந்தே மாதரத்தை சொல்லி வைப்போம்).
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
21-செப்-201800:31:35 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam I agree with Mal.Christians are economically, educationally, culturally more advanced.They need not be given a special status.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X