அரசியல் செய்தி

தமிழ்நாடு

முத்தலாக் தடை வாபஸ் பெற வலியுறுத்தல்

Added : செப் 20, 2018 | கருத்துகள் (3)
Advertisement

கோவை, ''முத்தலாக் முறையை தடை செய்யும், மத்திய அரசின் அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,'' என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.கோவையில், அவர் அளித்த பேட்டி:முத்தலாக் முறையை தடை செய்வதற்காக, மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி, அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இது, முஸ்லிம் திருமண உரிமையை பறிக்கும் செயல்.மத்திய அரசின் சட்டத்தின்படி, 'முத்தலாக்' சொன்னாலும் திருமண பந்தம் தொடரும் எனச் சொல்லப்படுகிறது. அப்போது, 'முத்தலாக்' சொன்னதற்காக, கணவன் சிறைக்கு சென்றால், அவரது மனைவி, குழந்தைகளை பாதுகாப்பது யார் என்ற கேள்வி எழுகிறது.மத்திய அரசு, முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லா விட்டால், இதை எதிர்த்து, போராட்டங்கள் நடத்துவோம். டி.ஜி.பி., வீடுகளில் ரெய்டு நடத்தும் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதால், முதல்வர், பழனிசாமி பதவி விலக வேண்டும்.திருச்சியில், அக்., 7ல் நடக்கும் மனித நேய மக்கள் கட்சி மாநாட்டில், தி.மு.க., - காங்., - கம்யூ., - ம.தி.மு.க.,- வி.சி., முஸ்லிம் லீக் கட்சிகள் பங்கேற்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
21-செப்-201813:11:42 IST Report Abuse
kundalakesi அப்போ மற்றவர் மத சம்பிரதாயங்களில் இஸ்லாத்தர் தலையிடுவது? மணி அடித்தல், சங்கொலித்தல், நாயனம், ஊர்வலம்>>>
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-செப்-201808:35:48 IST Report Abuse
Srinivasan Kannaiya இஸ்லாம் மத சம்பிரதாயங்களில் மற்றவர்கள் தலை இடுவது சிறந்ததாக தெரியவில்லை...
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
21-செப்-201815:44:12 IST Report Abuse
 Muruga Velபோஹ்ரா முஸ்லிம்கள் சிறுமிகளுக்கு செய்யும் கத்னா பற்றி இனைய தளங்களில் படித்து பாருங்கள் …....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X