அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பணத்தில் ஒரு பகுதி தர்மத்திற்கு செலவிடுங்கள் :
போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை

சென்னை, ''பிரதிபலன் பாராமல், உங்கள் நேரம் அல்லது பணத்தில் ஒரு பகுதியை, தர்ம காரியங்களுக்கு செலவிடுங்கள்,'' என, காவல் துறையினருக்கு, முதல்வர் பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

பணத்தில், ஒரு பகுதியை, தர்மத்திற்கு, செலவிடுங்கள் :போலீசாருக்கு, முதல்வர் ,பழனிசாமி, அறிவுரை


தமிழக காவல் துறையினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், பெங்களூரை சேர்ந்த, 'நிம்ஹேன்ஸ்' என்ற, தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், 'நிறைவாழ்வு பயிற்சி'அளிக்க உள்ளது.இதற்கான புரிந்து உணர்வு ஒப்பந்தம், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.ஒப்பந்தத்தில், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், 'நிம்ஹேன்ஸ்' நிறுவன இயக்குனர், கங்காதர் ஆகியோர், கையெழுத்திட்டனர்.


இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு, 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதில், ஐந்து

லட்சம் பேர் பயிற்சி பெற உள்ளனர். நாட்டிலேயே முதன் முறையாக, தமிழக காவல் துறையினருக்கு, இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின், 'காவலர் நிறைவாழ்வு பயிற்சி'யை துவக்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் எனில், அங்கு அமைதி நிலவ வேண்டும்.காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி, தமிழகத்தை அமைதிபூங்காவாக திகழ செய்கின்றனர்; பயங்கர வாதிகளின் நடமாட்டத்தை, முழுமையாக கட்டுப் படுத்தி உள்ளனர்.காவல் துறையினர், சில சமயங்களில், ஏச்சுக்கும், பேச்சுக்கும் உள்ளாவதை, நாங்கள் அறிவோம். ஆனால், 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற, ஆன்றோர் வாக்குப்படி, நீங்கள் அமைதியுடன் பணியாற்றி வருகிறீர்கள்.


காவல் துறையினரின் பிரச்னைகளை நன்கு அறிந்ததால், காவலர்கள் நலனில் அரசு, மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது; இதுவரை, 40 வயது நிரம்பிய காவலர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, இலவச முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது.தற்போது, 30 வயது நிரம்பியோருக்கும், அப்பயன்கிடைக்க,அரசாணை பிறப்பித்துஉள்ளது. காவல் துறையினரின் மன நலன் மற்றும் குடும்ப நலனை பேணி பாதுகாப்பதற்காக, 'காவலர் நிறைவாழ்வு பயிற்சி' திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.


Advertisement

காவலர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கும், இந்த நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும்.காவல் துறையினர், உடற்பயிற்சி, நடைபயிற்சி, தியானம் போன்றவற்றை செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். நல்ல புத்தகங்கள் படிப்பதையும், ஊக்கமூட்டும் உரைகள் கேட்பதையும், அன்றாட வழக்க மாக்கி கொள்ள வேண்டும்.பிரதிபலனை எதிர் பாராமல், உங்களது நேரத்திலோ அல்லது பணத்திலோ ஒரு பகுதியை, தர்ம காரியங் களுக்கு அர்ப் பணியுங்கள். தீய ஆதிக் கங்களில் இருந்து விலகி இருங்கள்.

ஜெ., அரசு, காவலர்களுக்கு, முழு சுதந்திரம் வழங்கி உள்ளது. அவர்களின் பணிகளில் குறுக்கீடு செய்வதில்லை.இவ்வாறு, பழனிசாமி பேசினார்.விழாவில், போலீஸ், டி.ஜி.பி., - டி.கே. ராஜேந்திரன், கூடுதல், டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் உள்ளிட்ட, போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-செப்-201804:16:06 IST Report Abuse

meenakshisundaramபோலீஸ் இதற்காக கூடுதல் மாமூல் வசூலிக்கக்கூடாது ,

Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-செப்-201820:51:12 IST Report Abuse

Swaminathan Chandramouliமுதலமைச்சர் என்ன சொல்கிறார் என்றால் போலீஸ் சிறிய பெரிய உச்சத்தில் இருக்கும் காவலர்கள் வேறு வழியில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை தான தர்மத்துக்கு செலவழிக்க சொல்கிறார் . தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வீணாக்கவேண்டாம் . அதில் ஒரு பகுதியை தர்மத்துக்கு செலவழித்து நஷ்டம் அடைய வேண்டாம் . பிறரிடம் அன்பளிப்பாக கிடைத்த பணத்தினால் அறம் செய்ய விரும்பு என்று தர்மத்தின் மேன்மையை போலீஸ்துறைக்கு எடுத்து சொல்லுகிறர் . இது அரசாங்கத்தின் எல்லா துறைக்கும் பொருந்தும்

Rate this:
GladsOn John - Manama,பஹ்ரைன்
22-செப்-201800:25:19 IST Report Abuse

GladsOn  JohnHello நடராஜன் You don't know about Christians tithes. It's not for the sin you committed but from the incomes of all believing Christians for the God's workers and the underprivileged people Christians are giving. If you commit sin you need to repent first (feel sooty about the sin from your heart ) &ask forgiveness from Lord Jesus and ask sorry to the concerned person and you will be forgiven And ask God to help not to commit sin again. That is Christianity No need to go to Kasi Rameswarm or go to some other places to shave your head.These are rituals no change will take place inside unless you follow the Christian methods. Because of the tithes poor people were up lifted during last centuries but the people of India particularly Brahmins opposed themissionaries due to their jelous mentality. Still it continues in India the so called Minority Brahmins ruling India and majority of oppressed native Indians are suffering under their religion.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X