பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி செய்திகள்

Added : செப் 21, 2018
Advertisement

தலைமை ஆசிரியருக்கு பாராட்டுதமிழக அரசு சார்பில், அன்னுார் பச்சாபாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமூர்த்திக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், அவருக்கு அன்னுார் வடக்கு துவக்கப்பள்ளியில், பாராட்டு விழா நடந்தது.வட்டார துணை தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் திருமூர்த்தி கவுரவிக்கப்பட்டார். எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பத்குமார், துணை செயலாளர் முருகன் ஆகியோருக்கு, கூட்டணி சார்பில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாநில துணை செயலாளர் செந்தில் குமார், வட்டார பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.தேசிய அளவில் கருத்தரங்குபெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லுாரியில், தமிழ்துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது; சுவாமி நிர்மலேஷானந்தாஜி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி வரவேற்றார்.வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் ஆசியுரை வழங்கினார். தமிழ் துறை தலைவர் பேராசிரியர் சண்முகம் அறிமுக உரையாற்றினார். பன்னிரு திருமுறைகளிலும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களிலும் காணப்படும் ஒரு அமைப்பான கடைகாப்பு பாடல்களின் வாயிலாக வெளிப்படும் வரலாறு, மெய்யியல், கலை, சமூகவியல், வாழ்வியல் தொடர்பான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.மேலும், 15 தலைப்புகளில் பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் வழங்கிய ஆய்வு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நுாலாக வெளியிடப்பட்டது. கருத்தரங்கு அறிக்கையை தமிழ் துறை உதவி பேராசிரியர் கோகுல் வாசித்தார். உதவி பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.ஸ்டேஷனில் துாய்மை பணிகல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி ஏர்விங் என்.சி.சி., மாணவர் படையினர், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். மூன்று 'பிளாட்பார்ம்', ஸ்டேஷன் வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகளை அகற்றினர்.பள்ளி துணை முதல்வர் சக்திவேல் முன்னிலை வகித்தார். துப்புரவு பணி செய்த மாணவ, மாணவியரை செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி பாராட்டினர். ஏற்பாடுகளை பள்ளி பராமரிப்பு துறை அலுவலர் கண்ணன், என்.சி.சி., அலுவலர் குமார் செய்திருந்தனர்.விழிப்புணர்வு முகாம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம், மேட்டுப்பாளையத்தில் வி.என்.கே., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.தாசில்தார் ரமேஷ் பேசுகையில், ''18 வயதானவர்கள், தேர்தலில் ஓட்டுப்போட தகுதியானவர்கள். அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அந்தந்த ஓட்டுச்சாவடிகளில், ஞாயிறன்று சிறப்பு முகாம் நடத்தப்படும். ஆவணங்களை சமர்பித்து, பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்,'' என்றார்.கல்லுாரி முதல்வர் ரேவதி வரவேற்றார். ஓடந்துறை வி.ஏ.ஓ., மூர்த்தி முன்னிலை வகித்தார். சிக்கதாசம்பாளையம் வி.ஏ.ஓ., சி.ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.பள்ளியில் வேளாண் கல்விபொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன, மாணவியர், 10 பேர் ஊரக வேளாண் அனுபவத்துக்காக, காரமடை பகுதியில் மூன்று மாதம் பயிற்சி பெறுகின்றனர். அதில், மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வேளாண் கல்வி கற்பித்தனர். தலைமை ஆசிரியர் முத்துரத்தினம் துவக்கி வைத்தார்.விவசாயத்தின் அவசியம்; மரங்கள் வெட்டுவதால் மழை வளம் குறைவது; வீடு, மாடியில் தோட்டங்கள் அமைப்பது குறித்து கல்லுாரி மாணவியர் விளக்கினர். ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள காலியிடத்தில் மரக்கன்று, செடி நட்டு வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர். உணவு பழக்க வழக்க முறை குறித்து கற்பித்தனர். வேளாண் சம்பந்தமான அறிவுத்திறன் போட்டி நடத்தினர். வீட்டை சுற்றிலும் சுத்தமாக பராமரிப்பது குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு வீடுகளில் அமைக்க வேண்டும் என, அவர்கள் அறிவுறுத்தினர்.மொழித்திறன் கருத்தரங்குஆங்கிலப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் மொழித்திறனை அதிகரிக்கச் செய்ய, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு, துடியலுார் வேல் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் பாரதி வரவேற்றார். துணை செயலாளர் தீபா முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.இண்டியன் மாண்டிசோரி பாடநெறி இயக்குனர் உமா சங்கர், குழந்தைகளுக்கு மொழி வார்த்தைகளை சொல்லித்தருதல், வார்த்தைகளை அறிமுகப்படுத்தி, அதன் வாயிலாக வாசித்தல் திறனை மேம்படுத்துதல், பொருட்களை காட்சிப்படுத்தி, வார்தைகளின் தொடர்பை விவரித்தல், வார்த்தை உச்சரிப்பு, ஒவ்வொரு எழுத்தின் ஒலியை கற்றுத்தருதல், நடன அசைவு வாயிலாக, எழுத்தின் ஒலியை கற்றுத்தருவது குறித்து விளக்கினார். ஆசிரியை ஜானகி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X