பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி

Updated : செப் 21, 2018 | Added : செப் 21, 2018 | கருத்துகள் (42)
Advertisement
PM Modi, Airport Express Metro, Modi metro ride, பிரதமர் மோடி, மெட்ரோ ரயில், இந்திய சர்வதேச மாநாடு , ஐஐசிசி, பிரதமர் மோடி, தவுலா கவுன் ,மோடி மெட்ரோ ரயில் பயணம் ,  மோடி மெட்ரோ பயணம், Narendra Modi,Prime Minister of India,Dhaula Kuan,Delhi  Dwarka,  Metro,Prime Minister Modi, Prime Minister Narendra Modi, Metro Rail, Indian International Conference, IICC,

புதுடில்லி : டில்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் (ஐ.ஐ.சி.சி) கண்காட்சி மைய திடட்டத்திற் கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் பகுதியில் இருந்து துவாரகாவிற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
மொத்தமாக 14 நிமிடங்கள் டில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மோடி, ரயிலில் பயணித்த சக பயணிகளுடன் கலந்துரையாடினார். முதலில் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணிக்க வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், பின்னர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சக பயணிகளுடன் பிரதமர் மோடியும் சிரித்து பேசியபடி பயணித்தார்.
டில்லியில் விவிஐபி.,க்கள் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழாவிற்கு செல்வதற்காக பகல் 3.13 மணி முதல் 3.27 வரை மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். பின்னர் விழா முடிந்து திரும்பும் போதும் துவாரகாவில் இருந்து தவுலா கவுன் மெட்ரோ நிலையத்திற்கு 4.39 மணி முதல் 4.54 மணி வரை மோடி பயணம் செய்தார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-201820:28:29 IST Report Abuse
kulandhaiKannan உண்மையான மக்கள் தலைவர்
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
21-செப்-201817:28:22 IST Report Abuse
Meenu அடேங்கப்பா என்ன ஒரு எளிமை. நடிப்பு நாடகம் தேர்தல் நெருங்க நெருங்க, இது மாதிரி நிறைய போட்டோ போட்டு விளம்பரம் வருவதை தாராளமாய் எதிர்பார்க்கலாம். நடந்து செல்கிறார், ஏழை வீட்டில் உணவருந்தினார் என்றெல்லாம் இனி வரும். எல்லாம் பதவி ஆசைக்குத்தான். மதிப்பு மிக்க உங்கள் வாக்கை நல்லவர்களுக்கு அளியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-செப்-201816:46:50 IST Report Abuse
Endrum Indian 132 .4 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டின் பிரதம மந்திரி மெட்ரோவில் பயணமா, ஆச்சரியம், அதிசயம். இதை பார்த்த காங்கிரஸ், மற்றும் முஸ்லீம், கிறித்துவ சப்போர்ட் எதிரிக்கட்சிகள் ஓ என்று ஊளையிடுமே????கடைசியில் மோடி ஒழிக, பி.ஜெ.பி.ஒழிக,ஆர்.எஸ்.எஸ். ஒழிக, பாசிசம் ஒழிக என்று ஊளையிடுமே இந்த கட்சிகள் எதற்கு சொல்கின்றோம் என்று தெரியாமலே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X