பதிவு செய்த நாள் :
மாயாவதி கண்ணாமூச்சி: காங்., தலைமை விரக்தி

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் - பா.ஜ., அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் நடவடிக்கை களில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தீவிரம் காட்டி வருகிறார்.இதனால், அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைப்பதற்காக, அந்த கட்சியை நம்பியிருந்த, காங்., மேலிடம், அதிர்ச்சி அடைந்துள்ளது.

 மாயாவதி, கண்ணாமூச்சி, காங்., தலைமை, விரக்தி


அடுத்த சில மாதங்களில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

காங்., வியூகம்


இந்த மூன்று மாநிலங்களிலும், பா.ஜ., தலைமையிலான ஆட்சி நடக்கிறது.இங்கு, பா.ஜ.,வை தோற்கடித்து, ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன், காங்., மேலிடம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.இது தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களுடன், காங்., மேலிடம் பேச்சு நடத்தி வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, காங்., - பா.ஜ., அல்லாத, மூன்றாவது அணியை அறிவித்து உள்ளன. ராஜஸ்தானில்,2013ல் நடந்த

சட்டசபை தேர்தலில்,மொத்தமுள்ள, 199 இடங்களிலும் தனித்து போட்டியிட்ட, மாயாவதி யின் பகுஜன் சமாஜ், மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றியது.இந்த முறை, தங்கள் ஓட்டு வங்கியை அதிகரிக்கவும், கூடுதல் இடங்களில் வெற்றி பெறவும் திட்டமிட்டுள்ளார் மாயாவதி.

அதற்காக, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள, 3-வதுஅணியில் இணையவும் தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குழப்பம்


சத்தீஸ்கரில், முன்னாள் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் தலைவருமான, அஜித் ஜோகியுடன் கூட்டணி அமைப்பதாக, மாயாவதி அறிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிப்பதற்குமுன், பகுஜன் சமாஜ்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள, 22 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மாயாவதியின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், காங்., மேலிடம் கடும் குழப்பத்திலும், அதிர்ச்சியி லும் ஆழ்ந்துள்ளது.ராஜஸ்தான், ம.பி., மற்றும் சத்தீஸ்கரில், குறிப்பிடும் படியான அளவில் ஓட்டு கள் பெற்றுவிட்டால், அதை வைத்தே, லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கவோ அல்லது காங்கிரசுடன் பேரம் பேசி, அதிக இடங்களைகேட்டுப் பெறவோ முடியும் என, மாயாவதி கணக்கு போட்டுள்ளார்.

தலித் ஓட்டு வங்கியை பெரிதும் நம்பும் மாயாவதி யின் இந்த செயல், காங்., தலைவர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திஉள்ளது.இதே நிலை

Advertisement

தொடர்ந்தால், அடுத்த ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சி களையும் ஓரணியில் திரட்ட நினைக்கும், தங்கள் எண்ணம் பலிக்குமா என்ற கவலை, காங்., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

மிரட்டலுக்கு பயந்து கூட்டணி


மாயாவதியின் அரசியல் வியூகம் குறித்து, சத்தீஸ்கர் மாநில, காங்., தலைவர், பூபேஷ் பாக்லே கூறியதாவது:காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, சத்தீஸ்கர் மாநில முதல்வரான அஜித் ஜோகி, கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சி துவங்கினார். அவரை, மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும், பா.ஜ., அரசு ஆட்டி வைக்கிறது.அஜித் ஜோகியின் கட்சியை, பா.ஜ.,வின்,'பி டீம்' என்றே கூறலாம்.

பா.ஜ., கூறும், 'டம்மி' வேட்பாளர்களையே, சட்டசபை தேர்தலில், அவர் முன்னிறுத்துவார்.
சத்தீஸ்கரில், அஜித் ஜோகியின் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன. மத்திய, பா.ஜ., அரசின் மிரட்டலால், இந்த கூட்டணி உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
22-செப்-201819:40:05 IST Report Abuse

ANANDAKANNAN Kமாயாவதி திட்டம் பலிக்காது, உத்தரபிரதேசத்தில் அவர் கட்சி சின்னமான யானையை மாநிலம் முழுவதிலும் கட்டினாரோ அப்பவே மக்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள், மேலும் நீதிமன்ற குட்டுக்கும் ஆளானார், ஜாதிய ரீதியிலும் மற்றும் தன்னை அரசியலில் வளர்த்துவிட்ட குருவையும் வைத்தும் ஆட்சிக்கு வந்தவர் தான் மாயாவதி அதனால் இக்காலத்தில் இந்த இரண்டு காரணிகளும் இவரை கரை சேர்க்காது.

Rate this:
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
22-செப்-201819:31:51 IST Report Abuse

ANANDAKANNAN Kகாங்கிரஸ் கட்சி முற்றிலும் அழியும், அதை காப்பாற்ற வேண்டுமானால் மத ரீதியாக செயல்படுவதை நிறுத்தவேண்டும், இந்திரா மற்றும் ராஜிவ் ஆளும் போது ஆட்சியில் ஊழல் சிறியதாக மற்றும் வெளியில் வரவும் இல்லை ஆனால், ராவ்,சோனியா ஆட்சி காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு ஊழல் நடந்தது, மேலும் மாநில கட்சிகள் தங்கள் பங்கிற்கு இவர்களின் பெயரை சொல்லி ஊழலில் திளைத்தனர், மேலும் உலக அரங்கில் இவர்கள் ஆட்சி செல்வாக்கு பெறவே இல்லை. எப்போ இவர்கள் பிராந்திய கட்சியை நம்பினார்களோ அப்பவே இவர்கள் சிதைய ஆரம்பிக்க ஆளானார்கள், இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் கொடிதான் பறந்தது, எடுத்து காட்டக்காக தமிழகத்தில் காமராஜ் அவர்கள் அரசியல் செய்யும் வரை இந்த திராவிட கட்சிகள் வளர முடியவில்லை, மேலும் எப்பொழுது இவர் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று ராஜினாமா செய்தாரோ அப்பவே காங்கிரஸ் அழியும் நேரம் வந்தாகிவிட்டது, இது போல கேரளாவிலும் கம்யூனிட்ஸ் கட்சிகளிடம் ஆட்சியை பறிகொடுத்தார்கள்,கர்நாடகத்திலும் நிர்வாக கோளாறு காரணமாக ஆட்சியை இழந்தார்கள், ஆந்திராவில் நல்ல அரசியல்வாதிகள் இல்லாத காரணத்தால் வளர முடியவில்லை, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மத்தியபிரதேசம்,உத்தரபிரதேச,போன்ற மாநிலத்தில் மதம் சார்ந்த வகையில் ஆட்சியை இழந்தார்கள், மேலும் இந்திரா காலத்தில் பெரும் ஓட்டு வங்கியாக இருந்த காங்கிரஸ் தற்போது லோக் சபாவில் எதிர்க்கட்சி என்ற இடத்தை பெற முடிய வில்லை. இதற்க்கு கரணம் இரண்டு மட்டுமே முதலாவுது போலி மதசார்பின்மை,ஊழல் அரசியல்வாதிகள் இரண்டவுது நிர்வாக திறமை இல்லாத கட்சியினர் மேலும் வெற்றி பெறுவோம் என்ற நிலை வந்தால் தேர்தலில் நிற்பது இல்லை என்றால் நிற்காமல் தவிர்ப்பது. பதவி மட்டுமே சுகம் என்று இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் இனிமேல் அரசியல் செய்ய முடியாது. இனிமேல் நம் காந்தியடிகள் சொன்னவாறு கட்சியை அழிக்க நேரிடும்.

Rate this:
King of kindness - muscat,ஓமன்
22-செப்-201815:15:11 IST Report Abuse

King of kindnessபிரதமர் பதவிக்கு ஆசை பட்டு இப்போ நிறைய பேர் வரிசையில் நிற்கிறார்கள். மாயாவதி,மம்தா பனர்ஜீ, சந்திரசேகர்ராவ்,எப்பவும் போல காங்கிரஸ் ல நேரு குடும்பத்தில் ராகுல் காந்தி இது தவிர சந்திரபாபு நாயுடு அரவிந்த் கெஜ்ரிவால் இவுங்களுக்கும் ஆசை இருக்கு.ஆக மொத்தத்தில் வர போற தேர்தல் ரொம்ப நல்ல தான் இருக்கும்

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X