பதிவு செய்த நாள் :
ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதா?
இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

புதுடில்லி: 'ரஷ்யாவிடம், 'எஸ் - 400' வகை ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்தால், இந்தியாவுக்கு எதிராக கடுமையான தடை விதிக்கப்படும்' என, அமெரிக்கா, மறைமுகமாக மீண்டும் மிரட்டியுள்ளது.

ரஷ்யா,ஏவுகணை,வாங்குவதா?,இந்தியா,அமெரிக்கா,எச்சரிக்கை


ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே அமைந்து உள்ள ரஷ்யாவுக்குஎதிராக, பல்வேறு பொருளா தார தடைகளை, அமெரிக்கா விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகளை, அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

எதிர்ப்பு


இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 வகை ஏவுகணைகளை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த,

அமெரிக்க ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் அடங்கிய குழு, ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்றது.

இருப்பினும், ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்குவதற்கான பேச்சு முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம்,ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், இந்தியா வரும்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்த வருமான, நிர்மலா சீதாராமன், நிருபர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஷ்யாவிடம், 'சுகோய் - 35' போர் விமானங்கள், எஸ் - 400 ஏவுகணைகள் வாங்க, ஒப்பந்தம் செய்துள்ள, ஆசிய நாடான சீனாவின், தளவாடங்கள் மேம்பாட்டுத் துறைக்கு எதிராக, தடை விதித்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், உத்தரவுபிறப்பித்துள்ளார்.

நடவடிக்கை


இது குறித்து, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சீனாவின் தளவாடங்கள் மேம்பாட்டுத் துறைக்கு எதிராக, சி.ஏ.ஏ.டி.எஸ்.ஏ., எனப்படும், அமெரிக்காவுக்கு

Advertisement

எதிரான நாடுகள் மற்றும் அமைப்புகள் மீது தடை விதிக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த தடை, ஒரு நாட்டின் ராணுவ வல்லமையை குறைப்பதற்காக பிறப்பிக்கப்படுவது அல்ல.


ரஷ்யாவின் முறைகேடான செயல்பாடுகளுக்கு பதிலடி தரும் வகையில், அதற்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ஏவுகணைகள் வாங்க திட்டமிட்டுள்ள பிற நாடுகளுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கை பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை. இருப் பினும், இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன், பல முறை பேச்சு நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
22-செப்-201821:19:39 IST Report Abuse

பாமரன்அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா அமெரிக்க தூதரை அழைத்து இன்று கண்டித்துள்ளது. இந்த மாதிரி கெத்தா இருக்க 56 இன்ச் தேவையில்லாத ஒன்று. புரியுதா.... மியாவ் மியாவ்...

Rate this:
nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா
22-செப்-201820:49:22 IST Report Abuse

nabikal naayakamதலைவருங்க அடிச்சு வச்ச காசு, தீயசக்தி, 2G ஊழல், கட்டுமரம், போன்ற எந்த அடைமொழி சொன்னாலும் அது தனது தலைவரைத்தான் என்று புகழ் மிகச்சரியாக கண்டுபிடித்து விடுகிறார்

Rate this:
Manian - Chennai,இந்தியா
24-செப்-201803:02:32 IST Report Abuse

Manianஇதை தான் "பன் முக திருடர்" என்று பெருமையாகவும் நினைக்க முடிகிறதே ஒரு புறம் அரசியல் வியாதி, இன்னொரு பக்கம் குடிதந்த சூடா மணி", "நிழல் பட தாதா', விஞ்சானக் கொள்ளை அறிவாளி"... அப்போ நீங்க சொன்னதை கண்டுபிடிக்க எவ்ளோ நேரம் ஆகும்?...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-செப்-201815:29:02 IST Report Abuse

Pugazh VAK47, AK56 இரண்டுமே ரஷ்ய தயாரிப்பு. இந்திய ராணுவத்திற்காக கடந்த ஆட்சியில் வாங்கிய போது அமெரிக்கா இப்படி எச்சரிக்கை விடுக்கவில்லை. அந்த விதத்தில் அயல் நாடுகளுடன் சுமுகமான உறவும் அவர்கள் மீது ஆளுமையும் அவர்களுக்கு நம்மீது மதிப்பும் இருந்தது. ஆனால் இப்போது???

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X