அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., அரசின் கலெக் ஷன் விளக்க பொதுக்கூட்டம்: ஸ்டாலின்

சென்னை: 'அ.தி.மு.க., அரசின் கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் குறித்து விளக்கும், பொதுக்
கூட்டங்கள் நடத்தப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

அ.தி.மு.க., அரசின், கலெக் ஷன், விளக்க, பொதுக்கூட்டம், ஸ்டாலின்


சென்னை அறிவாலயத்தில் அவரது பேட்டி: காற்றாலை மின்சாரத்தில், முறை கேடாக, பலகோடி ரூபாய் ஊழல் நடந்து இருக்கிறது என, நான் கூறியதற்கு, மின் துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்து இருக்க வேண்டும். எந்தவொரு விளக்கத்தை யும் கூறாமல், 'பொய் குற்றச்சாட்டு' எனக் கூறி, 'என் மீது வழக்கு போடுவேன்' என, எச்சரித்தார்.

குட்கா வழக்கிலும், சுகாதாரத் துறை அமைச்சர்

விஜயபாஸ்கர் இப்படித்தான் சொன்னார். ஆனால், இதுவரையில் என் மீது, வழக்கு போட வில்லை. காற்றாலை முறைகேடு ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறேன். இப்போதாவது, தங்கமணி கூறியபடி, என் மீது வழக்குபோடவேண்டும்.

ஒரு வாரம் காத்திருப்பேன். அதற்குள், என் மீது வழக்கு போடவில்லை என்றால், நான் அவர் மீது, வழக்கு பதிவு செய்வேன். சி.பி.ஐ., வரை சென்று, ஊழல் பிரச்னைக்கு நல்லதொரு பரிகாரத்தை காண்பேன்.இலங்கை தமிழர்கள் படுகொலை விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க.,வின் குற்றச் சாட்டுக்கு, தி.மு.க., செய்தி தொடர்பு செயலர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விளக்கத்தை தந்திருக்கிறார். அந்த பதிலே போதும்.

தமிழகத்தில்,பெண்கள் மீது,பாலியல் வன்கொடுமை தொடர்கிறது. சிறைச் சாலையில், டி.ஐ.ஜி., அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி உள்ளனர். டி.ஜி.பி., அலுவலகத்தில், சோதனை நடந்துள்ளது. தலைமை செயலர், அமைச்சருடைய வீடுகளில் சோதனை நடந்து உள்ளது. இவற்றையெல்லாம், வேடிக்கை பார்த்து விட்டு, இன்னும் வெட்கமின்றி, ஆட்சியாளர்கள் பதவிகளில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

Advertisement

இது தான்,இன்றைய நிலை. இதனால் தான், நாங்கள் சேலத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், கண்டன பொதுக் கூட்டங் கள் நடத்தி, எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வந்திருக்கிறோம்.


இதுமட்டுமின்றி, வரும், 3, 4ம் தேதிகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, எல்லா நகராட்சிகளிலும், அ.தி.மு.க., அரசின், கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் பற்றி விளக்கி, பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
22-செப்-201817:09:57 IST Report Abuse

Nisha Rathiகமிஷன் கலைக்ஸன் எல்லாமே உன் அப்பன் தான் குரு

Rate this:
karupanasamy - chennai,இந்தியா
22-செப்-201817:09:22 IST Report Abuse

karupanasamyஉபிங்களுக்கு கலெக்சன் பயிற்சிப்பட்டறையா ? நான் அயன்புரத்தில் ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தபொழுது எங்கள் தெருவில் நடந்த நிகழ்ச்சி எங்கள்வீட்டில் மோட்டார்சைக்கிள் ஏற்றுவதற்கு வாசற்படிகட்டில் சரிவு பாதை அமைக்க கொஞ்சம் மணலும் சிமெண்டும் கொண்டு வந்து கொட்டினார் கட்டுமான ஊழியர் ஒருவர் அவ்வளவுதான் கரைவேட்டிகட்டிக்கொண்டு சட்டைப்பையில் கருணாநிதி படத்தைப்போட்டுக்கொண்டு வந்த ஒருவன் ஆயிரத்தில் கேட்டான் லஞ்சம் அதற்க்கு இதன் மொத்த சிலவே 800 ரூபாய்தான் என்று சொல்லி அவனை அனுப்புவதற்குள் ஸ்ஸ்ஸ் அப்பாடா என்றாகிவிட்டது அப்படியும் டீ செலவுக்கு என்று 100 ரூபாய் கொடுத்து அனுப்பவேண்டியதாயிற்று.

Rate this:
nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா
22-செப்-201815:03:19 IST Report Abuse

nabikal naayakamஇவனோட சத்தம் ரொம்ப ஓவராக இருக்கு.....அடங்கு.

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
22-செப்-201820:36:58 IST Report Abuse

வந்தியதேவன்ஆனா... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ரொம்பதான் குசும்பு... சென்னைல சுத்துறீங்களே... குண்டும்குழியுமா இருக்குற அண்ணா சாலை போன்ற மாநகர முக்கிய சாலைகள் அனைத்திலும் போகும் போதே இவ்வளவு நக்கலு... சென்னை முழுவதும் எங்கு திரும்பினாலும் போக்குவரத்து நெரிசல்ல சிக்சி போறப்பவே இவ்வளவு நக்கலு... குப்பை அள்ளாமல் உங்க வீட்டு தெரு முதல் கொண்டு சாலைகள் அனைத்தும் நாத்தமடித்து அதைக் கடந்து செல்லும்போதே உங்களுக்கு இவ்வளவு நக்கலு... எங்கு திரும்பினாலும் தினம் வழிப்பறி, செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, விபத்துகள், விலைவாசி உயர்வு போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் சென்னைல வாழுற உங்கள மாதிரி ஆளுங்க...தினம் தினம் காலைலந்து, மாலை வரைக்கும் இந்த மாதிரி ஆட்சில சாகறப்பவே இவ்வளவு நக்கலுன்னா... இன்னும் இவிங்க உங்கள தங்க தாம்பளாத்துல வச்சி தூக்கி ஆடுனா... உங்கள மாதிரி ஆளுங்கள கைலயே புடிக்க முடியாதய்யா.......

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X