அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்
தடை கேட்க அ.தி.மு.க., திட்டம்

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை, தொடர்ந்து நடத்த, அ.தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடரும் பட்சத்தில், தீர்ப்பு வரும் வரை, அத்தொகுதியில், இடைத்தேர்தல் நடத்துவதற்கு, தடை கேட்கவும், ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது. இதை தடுக்க, தி.மு.க., வும், இவ்வழக்கில் மூக்கை நுழைக்கிறது.

திருப்பரங்குன்றம், இடைத்தேர்தல், தடை கேட்க, அ.தி.மு.க., திட்டம்


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஏ.கே.போஸ்; தி.மு.க., சார்பில், டாக்டர் சரவணன் போட்டியிட்டனர். இதில், போஸ் வெற்றி பெற்றார். தேர்தல் மனு தாக்கல் நேரத்தில், ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.அதனால், ஏ.கே.போசுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரும் படிவத்தில், அவரால் கையெழுத்திட முடிய வில்லை. எனவே, ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.


அதில், தேர்தல் விதிமீறல் நடைபெற்றதாக,

டாக்டர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, இரண்டு ஆண்டு களாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆக., 2ல், போஸ் மரணம் அடைந்தார். அதனால், 'போசுக்கு பதிலாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தவிருப்பம் உள்ளவர்கள், 14 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம், 10ம் தேதி உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் இவ்வழக்கு, நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சந்திக்க, தி.மு.க., தயாராக உள்ளது. கடந்த முறை, தி.மு.க., வேட்பாளர் சரவணன் தோல்விக்கு, ஆளுங்கட்சியின் பணபலம் தான் காரணம்.


தற்போது, எந்த தேதியில் இடைத்தேர்தல் வந்தாலும், தி.மு.க., வேட்பாளராக, சரவணனை மீண்டும் நிறுத்த, கட்சி மேலிடம் முடிவு செய்து உள்ளது. சென்னை, ஆர்.கே. நகரை கோட்டை விட்டது போல, இந்த தொகுதியை விடாமல் கைப்பற்ற, கட்சி மேலிடம், தேர்தல் செலவைஏற்க முன்வந்துள்ளது.


போஸ் வழக்கை நடத்துவதன் வாயிலாக, ஜெயலலிதா கைரேகை உண்மையானது என்பதை, நீதிமன்றத்தில் நிரூபிக்க, அ.தி.மு.க., விரும்புகிறது. எனவே, அ.தி.மு.க., தரப்பில், இவ்வழக்கில், இரு மனுக்கள் தாக்கல் செய்யபட உள்ளன.மனு

Advertisement

ஏற்கபட்டு, விசாரணை தொடருமானால், திருப்பரங்குன்றம் இடை தேர்தல் கேள்விக் குறியாகி விடும்.


இவ்வழக்கில் முடிவு தெரியும் வரை, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என, அ.தி.மு.க., தரப்பில், தடையுத்தரவு பெற வாய்ப்பு உண்டு.அதை தடுக்க, சட்ட ரீதியாக, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, தி.மு.க., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன்படி, போஸ் வழக்கில், தி.மு.க., தரப்பிலும், ஒரு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.கைரேகை வழக்கில் முடிவு தெரியும் வரை, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த, எக்காரணத்தை கொண்டும், தடை விதிக்க கூடாது என, உயர் நீதி மன்றத்தை நாட உள்ளது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-செப்-201821:22:33 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இப்பவே ஒண்ணுக்கு போக ஆரம்பிச்சிட்டாய்ங்க.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
23-செப்-201820:41:47 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஎன்னப்பா இது... உள்ளாட்சி தேர்தல் நடத்த உதறல்.... திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்த திணறல்... குறுக்குவழியில் சட்டசபையில் மைனாரிட்டி ஆட்சி... மொத்தத்தில் இவர்கள் ஆட்சி ஒரு ஜனநாயக கேலிக்கூத்து...?

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-செப்-201803:07:17 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்என்கவுண்டர் பண்ணி மத்தியில் ஆட்சியை பிடிச்சவரோட ஆசியில் ஜனநாயகமா நடக்கும். பாசிசம் தான் நடக்கும். ...

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
23-செப்-201810:48:29 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்மக்கள் அதிமுக மேல் கோபமாக உள்ளார்கள். ஆனால் வெறுப்பாக இல்லை. கோபம் தனியலாம். வெறுப்பு மாறாது

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X