புதுடில்லி:'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தில், அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' நிறுவனத்தை, மத்திய அரசு பரிந்துரைத்ததாக, பிரான்ஸ் முன்னாள் அதிபர், பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறிய தகவல், எதுவும் கிடைக் காமல் திணறிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, வெல்லம் கிடைத்தது போலாகி விட்டது. இதை வைத்து, மத்திய அரசுக்குஎதிராக, மாபெரும் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது, பெரிய அளவில் எந்த குற்றச்சாட்டையும், காங்., உட்பட எதிர்க்கட்சிகளால், கடந்த நான்காண்டுகளில் சுமத்த முடியவில்லை.
ஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து, 'ரபேல்' போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், முறைகேடு நடந்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல், குற்றம் சுமத்தினார். 'தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக, இந்த ஒப்பந்தத்தில், பிரதமர் மோடி தனிப்பட்ட முறை யில் செயல்பட்டுள்ளார்' என, குற்றஞ் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை, மத்திய அரசும், பா.ஜ.,வும் தொடர்ந்து மறுத்து வந்தன. லோக்சபாவில், அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போதும், இந்த குற்றச்சாட்டை ராகுல் எழுப்பினார்.இதற்கிடையே, ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பிரான்சின், 'டசால்ட்' நிறுவனம், அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் டிபன்ஸ்' நிறுவனத்தை, பங்குதாரராக சேர்த்து கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.
'பொது துறை நிறுவனமான, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை ஒதுக்கி, ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு, மத்திய அரசு வாய்ப்பு கொடுத்துள்ளது' என, காங்.,கை சேர்ந்த முன்னாள் ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி குற்றம் சாட்டினார்.எச்.ஏ.எல்., முன்னாள் தலைவர், சுவர்ணா ராஜு அளித்த பேட்டியில், 'நான்காம் தலைமுறை போர் விமானமான, 25 டன் எடையுள்ள, 'சுகோய் - 30' ரக போர் விமானங்களையே தயாரிக்கும் போது, ரபேல் விமானங்களை, எச்.ஏ.எல்., நிறுவனம் எளிதில் தயாரித்து இருக்க முடியும்' என்றார்.
இதை மறுத்த, பா.ஜ.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
ரபேல் ஒப்பந்தத்தில், எச்.ஏ.எல்., நிறுவனத்தை கழற்றி விட்டது, காங்., தலைமையில் இருந்த,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான்; எச்.ஏ.எல்., நிறுவனத்தை வலுப்படுத்த,அப்போதைய ராணுவ அமைச்சர், அந்தோணி எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இது
தொடர்பாக, பா.ஜ., - காங்., இடையே, பரஸ்பரம் வாக்குவாதம் நடந்து வந்த
நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர், பிரான்கோயிஸ் ஹாலண்டே, பிரான்ஸ்
நாளிதழ் ஒன்றுக்கு, சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:நான்அதிபராக இருந்த போது, ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது.ரபேல் போர் விமானத்தின், உதிரி பாகங்களை தயாரிக்கவும், பழுது பார்க்கவும், ரபேல் ஒப்பந்தத்தில் பங்கு தாரராக சேர்த்து கொள்ள, ரிலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனத்தை தவிர, வேறு எந்த நிறுவனத்தையும், இந்திய அரசு பரிந்துரைக்க வில்லை.இவ்வாறு ஹாலண்டே கூறியிருந்தார்.
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பேட்டி, காங்கிரசுக்கு வெல்லம் கிடைத்தது போலாகி விட்டது.இதை வைத்து, மத்திய அரசு மீது, மாபெரும் ஊழல் குற்றச்சாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன.
இது பற்றி ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
ரபேல் ஒப்பந்தத்தில், 'டசால்ட் நிறுவனத்துக்கும், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கும் நடந்த தனிப்பட்ட ஒப்பந்தம் இது; இதில், இந்திய அரசோ, பிரான்ஸ் அரசோ தலையிடவில்லை.எனினும், ஹாலண்டே கூறியுள்ள தகவல் பற்றி ஆய்வு செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.மத்தியில், 1984- 89 ம் ஆண்டு வரை இருந்த, ராஜிவ் தலைமையிலான, காங்., அரசுக்கு, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், பெரும் தலைவலியாக அமைந்தது. அதேபோல், மோடி அரசுக்கு, ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் அமைந்துள்ளது.
'மிகப் பெரும் ஊழல்'
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, சஞ்சய் சிங், மும்பையில் கூறியதாவது:பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்த கருத்து, நாட்டில் நடந்துள்ள மிக பெரும் ஊழலாக, ரபேல் ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தி உள்ளது.ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொள்ள பரிந்துரைத்தது ஏன்என்பதை, மோடி
அரசு தெரிவிக்க வேண்டும். ராணுவ அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இது
குறித்து, பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு
அவர் கூறினார்.
'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'
ரபேல் விவகாரம் குறித்து, காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், நேற்று பதிவிட்டிருந்த
தாவது:பிரமதர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து, தேசத்தின்
பாதுகாப்புப் படைகள், ராணுவத்தினர் மீது, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'
நடத்தி உள்ளனர். நாட்டைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் ரத்தத்தை, மோடிஅவமதித்து விட்டார்.
உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்; இந்தியாவின் ஆன்மாவுக்கு, நீங்கள் துரோகம் இழைத்துவிட்டீர்கள்.இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
'நாங்கள் தலையிடவில்லை'
பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியதற்கு பதில் அளித்து, பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், இந்தியாவில், எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவை, பிரான்ஸ் அரசு எடுக்கவில்லை.இது, பிரான்ஸ் வர்த்தக நிறுவனங்களின், தனிப்பட்ட உரிமை. அதில் அரசுக்கு, எந்த தொடர்பும் இல்லை; நாங்கள் தலையிடவும் இல்லை.
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், தரமான போர் விமானங்களை,இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்பதில் மட்டுமே, பிரான்ஸ் அரசு உறுதியாக இருந்தது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முழு விசாரணை வேண்டும்
'ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து, முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை தருவதாக, வாக்குறுதி அளித்தார். ஆனால், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்துள்ள பேட்டி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் உள்ள, சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு, விளக்கம் அளிக்க கடமைப் பட்டிருக்கிறார். இதன் உண்மை நிலையை அறிய, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (40)
Reply
Reply
Reply