பதிவு செய்த நாள் :
பெருமிதம்!
'முத்தலாக்' ரத்தானதால் பிரதமர் மோடி...
முஸ்லிம் பெண்களுக்கு நிம்மதி என மகிழ்ச்சி

தல்சேர்:''அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், 'முத்தலாக்' நடைமுறை, சட்ட விரோதமாகி விட்டது. இதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

முத்தலாக், பிரதமர், மோடி,பெருமிதம், முஸ்லிம் பெண், நிம்மதி, மகிழ்ச்சி


முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கும், ஒடிசா மாநிலத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்றார். இங்குள்ள தல்சேர் நகரில், ௧௩ ஆயிரம் கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுளள, நிலக்கரி வாயு மூலம், உரம் தயாரிப்பு தொழிற்
சாலையை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:


நாட்டில், ஏழை மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான சுகாதார காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், பல மாநிலங்கள் இணைந்துள்ளன. ஆனால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இந்த திட்டத்தில் சேர மறுக்கிறார். இதன் மூலம், ஏழை மக்களின் நலனில், தனக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவுபடுத்திஉள்ளார்.


புரி ஜகன்னாதர் கோவில், ஒடிசாவின் அடையாளமாக இருந்தது மாறி போய்விட்டது. இப்போது, மக்கள் நலப் பணிகளுக்கு கூட, கமிஷன் வழங்க வேண்டும் என்பதே,

ஒடிசாவின் அடையாளமாக உள்ளது. இதனால், மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பேசினர்.பின், ஜர்குடாவில், புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:


மக்கள் நலப் பணிகளுக்காக, மத்திய அரசு ஒதுக் கும், 1 ரூபாயில், ௧௫ பைசா மட்டுமே, மக்களை சென்றடைகிறது என, முன்னாள் பிரதமர்ராஜிவ் கூறினார்.ஆனால், இப்போது, பயனாளி களின் வங்கிக் கணக்கில், பணத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தால், நலத்திட்டங் களை செயல்படுத்துவ தில், மூன்றாவது நபர் தலையீடு இல்லை. மத்திய அரசு, மக்களுக்காக ஒதுக்கும் ஒரு ரூபாயில், 100 பைசாவும் மக்களை சென்றடைகிறது.


முத்தலாக் நடைமுறையால், முஸ்லிம் பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். வெறும் ஓட்டுக் காக மட்டுமே, சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ள தாக, காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நடிக் கின்றன. அதனால் தான், முத்தலாக் மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தினர். எனினும், மூன்று நாட்களுக்கு முன் அமல்படுத்தப் பட்ட அவசர சட்டத்தால், முத்தலாக், சட்ட விரோதமாகியுள்ளது.முஸ்லிம் பெண்களுக்கு, பல ஆண்டுகளுக்கு பின், நீதி கிடைத்துள்ளது.


மத்தியில், காங்., தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல தொழிற் சாலைகள் மூடப்பட்டன. மத்தியில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபின், மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க, நடவடிக்கை எடுத்தோம். மக்களுக்கு பொருளாதார நீதி மட்டு மின்றி, சமூக நீதியும் வழங்க, அரசு கடமைப்பட்டு உள்ளது. 2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு கட்டி தரும் திட்டம், முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


'சத்தீஸ்கரில் நிலையான அரசு'''நிலையான அரசை தேர்வு செய்வதில், சத்தீஸ்கர்

Advertisement

மக்கள் எப்போதும்முதிர்ச்சியுடன் செயல் படுகின்றனர், '' என,பிரதமர் மோடி கூறினார். சத்தீஸ்கரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, ஜன்ஜ்கிர் - சம்பாவில் நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:


சிறு மாநிலங்களில், நிலையான அரசு இருக்காது என்ற கூற்றை, சத்தீஸ்கர் மக்கள் பொய்யாக்கி விட்டனர். சத்தீஸ்கரில், 15 ஆண்டுகளாக, ரமண் சிங் தலைமையில், நிலையான ஆட்சி நடந்து வருகிறது. நிலை யான அரசை தேர்வு செய்வதில், சத்தீஸ்கர் மக்கள் முதிர்ச்சியுடன் செயல் படுகின்னறர்.


நக்சல் வன்முறை, வெடிகுண்டு தாக்குதல் போன்ற கடும் சவால்களை எதிர்கொண்டு, மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை, ரமண் சிங் வழங்கி வருகிறார். வளர்ச்சியடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில், சத்தீஸ்கரும் இப்போது இடம் பெற்றுள்ளது.


தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், எந்த திட்டத்தையும், மத்திய அரசு செயல்படுத்து வதில்லை. மக்கள் நலன் கருதியே, திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன. சத்தீஸ்கரில், பா.ஜ.,வுக்கே மக்கள் தொடர்ந்து வாய்ப்பளிப்பர்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
23-செப்-201818:14:49 IST Report Abuse

Sukumar Talpadyமுத்தலாக்கை ரத்து செய்தால் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப் படுவர் என்று சில முஸ்லீம் பெண்கள் அமைப்புகளும் , AIMPLB ஆகியோரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . ஆனால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்திற்கு சென்றதே சில முஸ்லீம் பெண்கள் தான் . முத்தலாக், பாக்கிஸ்தான் ,பங்களாதேஷ் உள்பட 23 முஸ்லீம் நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கிறது . அங்கெல்லாம் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப் படுவதில்லையா ? ஏன் இந்தியாவை மற்றும் குறை சொல்லுகிறார்கள் ? இருக்கும் சௌகரியத்தை எடுத்து விட்டால் மனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது . அந்த 23 நாடுகள் குரான் வழி நடப்பதில்லையா ?

Rate this:
தலைவா - chennai,இந்தியா
23-செப்-201821:03:47 IST Report Abuse

தலைவா முத்தலாக் நடைமுறையால், முஸ்லிம் பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். வெறும் ஓட்டுக் காக மட்டுமே, சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ள தாக, காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நடிக் கின்றன. அதனால் தான், முத்தலாக் மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தினர் உண்மைதான் . எனினும், மூன்று நாட்களுக்கு முன் அமல்படுத்தப் பட்ட அவசர சட்டத்தால், முத்தலாக், சட்ட விரோதமாகியுள்ளது.முஸ்லிம் பெண்களுக்கு, பல ஆண்டுகளுக்கு பின், நீதி கிடைத்துள்ளது. இதில் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட இஸ்லாமிய ஆண்களை சிறையில் தள்ளவே அதிக முனைப்பு காட்ட பட்டுள்ளது. ஐயா ஐயா ஏன் உங்களின் கருணை பார்வை ஹிந்து சகோதரிகள் மேல் மட்டும் விழ மாட்டேன் என்கிறது எனக்கு தெரிந்த ஒரு ஹிந்து பெண்மணி கணவனால் பல ஆண்டுகளுக்கு முன்னே கைவிடப்பட்டு நிர்கதியாக நிற்கிறார். ஹிந்து மதத்தில் பிறந்தது ஒரு குற்றமா? அவர் செய்த குற்றம்தான் என்ன? அந்த பெண்ணின் ரத்த கண்ணீருக்கு என்ன தான் பதில். ...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
23-செப்-201814:13:07 IST Report Abuse

dandyபிரிட்டிஷ் காரன் போனால் நாட்டில் பாலும் தேனும் ஓடும் என்றுதான் காங்க் க்ராஸ் கூடம் மக்களை மூளை சலவை செய்தது ஆனால் இன்று குப்பனும் சுப்பனும் இன்னும் ஓலை குடிசையில் அரசியல் வியாதிகள் வீட்டில் பாலும் தேனும் தங்க தட்டில்

Rate this:
Sandru - Chennai,இந்தியா
23-செப்-201810:23:04 IST Report Abuse

Sandruநந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நான்காண்டு காலமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானடி ஒரு தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி .

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X