புதுடில்லி:'அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் மனைவி அல்லது கணவனுக்கு, வேலை பார்க்கும் உரிமை அளிப்பது ரத்து செய்யப்படும்' என, அமெரிக்க
அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, 'எச் - 1பி' விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெற்றவரின் மனைவி அல்லது கணவனுக்கு, 'எச் - 4' விசா வழங்கப்படுகிறது.எச் - 4 விசா வைத்திருப்போர், அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில், ஒரு வழக்கில், அமெரிக்க
அரசு பதில் தாக்கல் செய்துள்ளது.அதில், 'எச் - 4 விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான அனுமதி வழங்கும் முறையை ரத்து செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்' என, கூறப்பட்டுள்ளது.அமெரிக்க அரசின் இந்த முடிவால்,
இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுவர் என்று அஞ்சப்படுகிறது.
எச் - 4 விசா
பெற்றவர்களுக்கு வழங்கப்படும் வேலைக்கான உரிமம் குறித்து முதல் முறையாக, அமெரிக்க அரசு இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளது; வெளிப்படையாகவும், நீதிமன்றத்திலும் அதை தெரிவித்துள்ளது.எச் - 4 விசா பெற்றவர்களும் வேலை பார்க்க அனுமதிக்கும் அறிவிப்பு, 2015, மே மாதத்தில் வெளியிடப்பட்டது.கடந்தாண்டு, டிச., 25ம் தேதி வரை, எச் - 4 விசா பெற்ற,
1.27 லட்சம் பேருக்கு, வேலை பார்க்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.இதில், 93 சதவீதம் பேர் இந்தியர்கள்; 5 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்; பிற நாடுகளைச் சேர்ந்தோர், 2 சதவீதம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (34)
Reply
Reply
Reply