பெங்களூரு: கர்நாடகாவில், காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், அரசு கவிழாமல் இருக்க, முதல்வர், துணை முதல்வர் மற்றும் இரு கட்சிகளின் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இதனால், அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்து உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந் நிலையில், 10 நாட்களுக்கு மேலாக,
காங்கிரசில் நிலவி வரும் உட்கட்சி பூசல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, கூட்டணி அரசுக்கு நெருக்கடியை
ஏற்படுத்தி உள்ளது.பா.ஜ., தலைவர் எடியூரப்பா, 'ஆபரேஷன் தாமரை' மூலம்
காங்கிரஸ், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க் களை இழுக்க முயற்சி செய்வதாககுற்றச்சாட்டு எழுந்தது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி ஆகியோர், ஹாசனில் நேற்றிரவு, கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதில், 'எம்.எல்.ஏ.,க்கள் யாரும் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட வேண்டாம்' என, கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாலுார் சுயேச்சை, எம்.எல்.ஏ., நாகேஷ், காங்கிரஸ்,எம்.எல்.ஏ.,க்கள் சுதாகர், எம்.டி. பி.நாகராஜ் ஆகியோர், அமைச்சர் பதவி
கிடைக்காத அதிருப்தியில், அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், சென்னைக்கு
புறப்பட்டு சென்றதாக,பரபரப்பு தகவல் வெளியானது.பா.ஜ., தலைவர், எடியூரப்பா,தங்கள்
கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், பெங்களூரிலேயே தங்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.இதற்கிடையே, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் ஆகியோர், அதிருப்தி, எம்.எல்.ஏ., ஆனந்த் சிங்கை அழைத்து சமாதானப்படுத் தினர். மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால், மக்கள் நலத்திட்டங் கள், அரசு பணிகள் நடக்காமல் முடங்கி உள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (19)
Reply
Reply
Reply